Featured Posts

என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நம் பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா சரணம்

மஹாபெரியவா நமக்கு கொடுத்த ஸ்ரீ பாதுகை

விளம்பி வருடம் உங்களுக்கு விளங்கட்டும்

விளம்பி வருட ஆரம்பமே மஹாபெரியவா

ஆசிர்வாதத்துடன் ஆரம்பித்து இருக்கிறது

&&&&&&

சென்றவைகள் சென்றவைகளாக இருக்கட்டும்

வருபவைகள் எல்லாமே மகிழ்ச்சியையும்

மன அமைதியையும் கொடுக்கட்டும்

வறுமை அகன்று சுபிக்க்ஷம் பெருகட்டும்

வேலையற்றோருக்கு வேலை கிடைக்கட்டும்

புத்திர பாக்கியம் வாய்க்கட்டும்

திருமணம் கைகூடட்டும்

பிரிந்த உறவுகள் ஒன்று சேரட்டும்

நோய்கள் அகலட்டும்

பாதை தவறிய ஆத்மாக்கள்

சரியான பாதைக்கு திரும்பட்டும்

கடனே இல்லாத வாழ்கை வாய்க்கட்டும்

சிந்தனைகள் தெளிவாகட்டும்

எண்ணங்கள் புனிதமடையட்டும்

செயல்களில் இறைத்தன்மை வீசட்டும்

உங்கள் வாழ்வில் குறையாத செல்வமும்

மங்காத புகழும் என்றும் சாந்தியும் நிலவட்டும்

சர்வமும் சகலமுமான மஹாபெரியவா பாத சரணம்.

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square