Featured Posts

ஸ்ரீ மாதா பவானி


பெரியவா சரணம்.

விவாஹ ப்ராப்தம், புத்ர பாக்கியம், சகல சௌபாக்கியங்களையும் நல்கிடும் ஸ்ரீமாதா பவானியின் திருவுருவப் படத்தினை அனேகம் பக்தர்கள் வேண்டி கேட்டு வருகின்றனர். ஸ்ரீமஹாபெரியவா 1960-களில் தம்மை அண்டிவந்த பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு விவாஹ பிராப்தத்திற்கென ஸ்ரீமாதா பவானியின் திருவுருவப் படத்தினையும் ஸ்லோகத்தினையும் அளித்தது நாம் அனைவரும் அறிவோம். இந்த அம்பாள் திருவுருவப்படத்தினை ப்ரிண்ட் செய்து கண்ணாடி பிரேம் போட்டு அம்பாளின் பாதத்திலிருந்து சந்தனம் குங்குமம் இட்டு இடமிருந்து வலமாக ஒரு வட்டமாக வைத்து வர வேண்டும். இந்த ஸ்லோகத்தினை 11 முறை பக்தியுடனாக பாராயணம் செய்து புஷ்பம் சமர்ப்பித்து பிராப்தம் வேண்டுவோர் செய்து வர சர்வ நிச்சயமாக பலன் உண்டு. கடந்த சில வருடங்களாக பெரியவா கருணையிலே இதனை ப்ரிண்ட் செய்து அடியேன் செல்லும் இடங்களிலெல்லாம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறேன். அம்பிகையை வழிபட்டு பலனடைந்தவர்கள் ஆயிரமாயிரம் பேர்களுண்டு. காரணம் இத்துனை வருடங்களாக இதனை ஒரு யக்ஞமாக என்னால் இயன்ற சமயத்திலெல்லாம் சிறுகச் சிறுக ப்ரிண்ட் செய்து அன்பர்களுக்கு அவர்களுடைய பக்தியையும் சிரத்தையையுமே இதனுடைய விலையாக பாவித்து வினியோகம் செய்து வருகின்றேன். தற்போது நிறைய அன்பர்கள் வெளியூர்களிலே வடிப்பவர்களும் அம்பிகையின் படம் வேண்டி செய்தி அனுப்பி வருகின்றனர். அவர்களும் பலன் அடைதும் பொருட்டு இன்று புண்ணிய பொழுதினிலே இதனைப் பகிர்கின்றேன். சிலர் தம் பிள்ளைகளுக்காக நாங்கள் செய்யலாமா என்று கேட்கின்றனர். செய்யலாம்; தவறில்லை. ஆயினும் யாருக்கு பசி எடுக்கிறதோ அவர் சாப்பிட்டால் மட்டுமே அவரது பசி அடங்கும் என்பதை நாமெல்லாம் உணர்ந்தது தாமே! நம்பினார் கெடுவதில்லை என்பர்; அவ்வண்ணமாக குருவினுடைய வாக்கினை நம்பி அம்பாள் பவானியை பிரார்த்தித்து பலன் அடைய வேணுமாய் வேண்டிக் கொண்டு இன்றைய தினம் தேவி ஸ்ரீபவானியின் திருவுருவப் படத்தினை இங்கு பகிர்கின்றேன். ஒருவேளை இதனை எப்படி தரவிறக்கம் செய்வது என தெரியாதவர்கள் நண்பர்களிடம் கேட்டுக் கொண்டு இதனை தரவிறக்கம் செய்து கொண்டு பிரிண்ட் செய்து கொள்ளவும். இயன்றவர்கள் இதனை தரவிறக்கம் செய்து கொண்டு வேண்டுபவர்களுக்கும் பகிருங்கள். நம்மால் இயன்ற ஓர் உதவியைச் செய்தது போலாகுமாச்சே! விளம்பி பிறந்துள்ள வேளைதனிலே அனைவருக்கும் மாதா ஸ்ரீபவானியைப் பகிர்ந்த திருப்தி. திருமண பிராப்தமும், புத்ரபாக்கியமும் வேண்டுவோர் அனைவருக்காகவும் குருவை ப்ரார்த்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கின்றேன். அருட்கூர்ந்து அன்பர்கள் இந்தப் பதிவை தாங்கள் இணைந்துள்ள முகனூல் க்ரூப்களிலும் வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிர்ந்து அனைவருக்கும் கிடைக்கச் செய்யுங்கள். இந்தப் பதிவுக்கு கருத்து தெரிவித்தலில் உள்ள சங்கர கோஷத்தை விடவும் அதிக பலன் இதனைப் பகிர்ந்து உங்கள் மூலம்அஅக ஒருவர் பலன் பெறுவரேயாயின் சர்வ நிச்சயமாக அந்த புண்ணியம் உங்களைக் காக்கும். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square