திவ்ய தேச திருத்தலம் திரு கூடலூர் (ஆடுதுறை)
திவ்ய தேச திருத்தலம்
திரு கூடலூர் (ஆடுதுறை)

கர்பகிரஹத்தில் பெருமாள் தாயாருடன்
செல்லும் வழி: கும்பகோணத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.ஐயம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து வண்டியிலும் செல்லலாம். இங்கு தாங்கும் வசத்தில் இல்லை என்பதால் திருவையாறு அல்லது கும்பகோணத்தில் தங்கி கோவிலுக்கு செல்லலாம்
மூலவர்: வையம் காத்த பெருமாள் (ஜெகத்ரக்ஷகன் ) நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்
உற்சவர்; அதே பெயருடன் கையில் செங்கோல் ஏந்தி நிற்கிறார்
தாயார்: பத்மாசினி புஷ்பவல்லி
தீர்த்தம்: சக்கர தீர்த்தம் காவேரி ஆறு
விமானம்: சுத்த சத்துவ விமானம்

வையம் காத்த பெருமாள்
பெயர் காரணம்: இங்கு தேவர்கள் கந்தக முனிவரோடு கூடி பெருமாளை சேவிக்க வந்தபடியால் இந்தஊருக்கு கூடலூர் என்று பெயர் வந்தது.
ஊரின் சிறப்புக்கள்: காவேரி நதி இந்த ஸ்தலத்திற்கு வந்துதான் இழந்த ஓசையை மீண்டும் பெற்றது. காவேரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி மண் மேடாக மாறிய நிலையில் ராணி மங்கம்மாள்கனவில் பெருமாள் தோன்றி இந்த கோவிலை புதுப்பிக்க சொல்லி அன்று அரசி புதிப்பித்த கோவிலை தான் இன்று காண்கிறோம்.

இரவில் அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும் கோவில்
முக்கிய குறிப்பு: இங்குள்ள அர்ச்சகர் அருகில் உள்ள கணபதி அக்ராஹாரத்தில் இருந்து வருவதால் அர்ச்சகரின் வருகையை அறிந்து கொண்டு பெருமாளை சேவிக்கலாம்.
பிரார்த்தனைகள்:வையத்தையே காக்கும் பெருமாள் பக்தரையும் நிச்சயம் காப்பார். உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருப்பினும் கருணையோடு அருள் பலிக்கும் பெருமாள். கருணையே உருவான தாயார் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பூசல்கள் குடும்ப பிரச்சனைகள் நாள் பட்ட நோய்கள் தீராத கடன் பிரச்சனைகள் பாதியிலேயே கட்டி நிற்கும் வீடுகள் முழுமை பெறவும் குழந்தை பாக்கியம் தடைபடும் திருமணங்கள் போன்ற எல்லா பிரார்த்தனைகளுக்கும் இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்: சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் புளியோதரை தயிர் சாதம் போன்ற பிரசாதங்களை இங்கு நெய்வேத்தியம் செய்யலாம். கூடியிருக்கும் பக்தர்களுடன் பிரசாதங்களை பகிர்ந்து உண்ணலாம்
உங்கள் பிரயாணம் இனிதே அமைந்து உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறி உங்கள் இல்லத்தில் அமைதியும் வளமும் பெருகட்டும். நான் உங்களுக்காக மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்