top of page
Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-32-பாகம் -1-தேவராஜன்


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-32 -பாகம் -1-தேவராஜன்

பிரதி திங்கட்கிழமை தோறும்

தேவராஜன் இவர் ஒரு அமெரிக்க வாழ் தமிழர். அமெரிக்காவிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்.. மிகவும் அமைதியான வாழ்கை வாழ்ந்து வருகிறார்... தேவராஜனும் அவர் மனைவி காமாட்சியும் மிகவும் அழகாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இருவருக்கும் தினமுமே தேன் நிலவுதான். அவ்வளவு ஒரு திவ்ய தம்பதிகள்.

இந்திய கலாச்சாரத்திற்கு நேர் எதிரான கலாச்சாரத்தை கொண்டுள்ள நாட்டில் இந்திய கலாச்சாரத்தை மையமாக வைத்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்கள்.. இவர்களின் அந்நியோன்னத்திற்கு அடையாளமாக இறைவன் பரிசாக கொடுத்த இரண்டு குழந்தைகள்.ஒரு மகனும் ஒரு மகளும்..

குழந்தைகளும் பெற்றோர்களை போலவே அமெரிக்க கலாச்சாரத்தின் பக்கம் தலை வைத்து படுப்பதே கிடையாது.. சிறிய வயதில் இருந்தே ஸ்லோகங்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் போன்றவைகளை சொல்லுவதும் ஜெபிப்பதும் இவர்களது வழக்கம்... படிப்பிலும் படு சுட்டிகள். அளவான சிறிய குடும்பம் அமைதியான வாழ்கை.. மகன் பெயர் கணேஷ். மகள் பெயர் உத்திரா..

ஒவ்வொரு வருடமும் இவர்கள் இந்தியா வந்து தங்கள் பெற்றோர்களையும் சொந்தங்களையும் பார்த்து விட்டு செல்வது வழக்கம். இப்படி இனிமையான அமைதியான வாழக்கையென்றால் இறைவனுக்கே பொறுக்காதே... கர்மா என்ற பெயரில் சுனாமி போல வாழ்க்கையில் நுழைந்து ஒரு சலசலப்பையோ அல்லது புரட்டிப்போடும் அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு போகும்..

அப்படி ஒரு சுனாமி இவர்கள் வாழ்க்கையில் வீசத்தொடங்கியது..குழந்தைகள் இருவருமே மிகவும் நன்றாக படிக்கும் குழந்தைகள்..ஒவ்வொரு வருடமும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத்தான் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்குள் காலடி எடுத்து வைப்பார்கள்..

இங்கு தான் இவர்கள் வாழ்க்கையில் கர்மாக்களும் விதியும் கலந்து வீசத்தொடங்கியது.. இவர்களுடைய மகன் கணேஷ் வாழ்க்கையில் விதி விளையாடத்தொடங்கியது.,...நன்றாக படித்து கொண்டிருந்த கணேஷுக்கு படிப்பில் கவனக்குறைவும் படித்தது எல்லாம் மறந்து போவதும் மதிப்பெண்கள் குறைந்ததும் பெற்றோர்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியது... .குடும்பத்திலும் ஒரு அமைதியின்மை உருவானது. அப்பொழுது இவர்கள் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டிய நேரம்..

தன்னுடைய கவலையை தன்னுடைய இந்தியாவிலுள்ள சகோதரியிடம் பகிர்ந்து கொண்டார் தேவராஜன்...அப்பொழுது அவரது சகோதரி என்னைப்பற்றி (G.R) முழுமையாக ஒருஅறிமுகம் கொடுத்து நான் எழுதிக்கொண்டிருக்கும் இணைய தளத்தின் முகவரியையும் கொடுத்து நீ இந்தியா வரும் பொழுது .G.R. மாமாவை சந்தித்து மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்திரவு வாங்கி ஒன்பது வாரம் பூஜை செய்தால் உனக்கு நிச்சயம் மஹாபெரியவா மூலம் மன அமைதியும் உன் மகன் கணேஷுக்கு ஒரு நல்ல காலமும் பிறகும் என்று சொல்லியிருக்கிறார்...

சகோதரியின் யோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய இந்தியா பயணத்தில் என்னை சந்திக்கும் ஒரு வேலையும் அவர்கள் பட்டியலில் இடம் பெற்றது.

தேவராஜன் குடும்பத்தாரும் இந்தியா வந்தனர்..தங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்து கொண்டு என்னை சந்திக்கும் பணியையும் முடிக்கவேண்டி என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டனர். நானும் மறு நாள் காலை பதினோரு மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தேன்..

மறு நாள் தன்னுடைய சகோதரியை அழைத்துக்கொண்டு தேவராஜன் மட்டும் வந்தார்.தேவராஜனின் பிரச்சனைகளுக்குள் நுழையும் முன் அவரது குழந்தைகளை பற்றி கேட்டேன்..அப்பொழுது தேவராஜன் என்னிடம் சொன்னார்.

“அவரது மகன் கொஞ்சம் சுய மரியாதையை உள்ளவன். அவனை பற்றி யாரிடமாவது பேசினால் அவனால் தாங்க முடியாது.. ஆகவே என் மனைவி என் மகன் கணேஷை பார்த்துக்கொண்டிருக்கிறாள்..நான் மட்டும் வந்தேன்”.என்றார்.

நான் அவரது மகனின் படிப்பு பயணத்தை பற்றி கேட்டேன்.பிறகு அவரது குடும்பத்தில் தற்போது நிலவும் அமைதியின்மையையை பற்றியும் கேட்டேன்.எல்லாவற்றுக்கு பொறுமையாக பதில் சொன்னார் தேவராஜன்.

நான் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டேன். மறு நாள் மஹாபெரியவாளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு மஹாபெரியவா கொடுக்கும் உத்தரவை பொறுத்து உங்களை தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை வாழ்த்தி அனுப்பினேன்.

மறு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில் மஹாபெரியவாளிடம் தேவராஜனின் பிரார்த்தனை விவரங்களை பின் வருமாறு எடுத்து சொன்னேன்.

G.R.:“பெரியவா நேற்று ஒரு புதிய உங்கள் பக்தர் வந்திருந்தார்.. அவர் பெயர் தேவராஜன். இவர் பல வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். மிகவும் அழகான குடும்பம் அமைதியான வாழ்கை.. அவர்களுக்கு இப்பொழுது ஒரு சில பிரச்சனைகள்.அதற்கு உங்களிடம் பிரார்த்தனைக்கு என்னை அனுப்பி இருக்கிறார்கள்.

பெரியவா: சரி பிரச்சனை என்னன்னு சொல்லு என்றார்.

G.R.: பெரியவா அவருடைய மகன் நன்றாகத்தான் படித்து கொண்டிருந்தான்.ஆனால் இந்த வருடம் ஆரம்பம் முதலே படிப்பில் கவனக்குறைவு.. எது படித்தாலும் மனதில் நிற்காமல் மறந்து போகிறது. இந்த வருடம் அந்த கணேஷுக்கு முக்கியமான வருஷம்.இந்தவருடம் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும்.

நல்ல கல்லூரியில் சேர வேண்டுமானால் பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.ஆனால் இன்றைய நிலைமையில் அது சாத்தியம் இல்லாதது. அவனுடைய துழைவு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்..

கணேஷ் மதிப்பெண் முதல் மூன்று இடத்திற்குள் இருந்தால் அவனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்து விடும் பெரியவா. .கணேஷ் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்றால் தான் அந்த தலை முறையும் அமெரிக்கா குடியுரிமையோடு அங்கு வாழ முடியும் என்றேன்.. தேவராஜனும் அவர் மனைவியும் தங்களுடைய இறுதி காலத்தை மன நிம்மதியுடன் கழிக்க முடியும்.

நீங்கள் குரு பூஜைக்கு உத்தரவு கொடுத்து அந்த குடுமபத்திற்கு அனுகிரஹமும் செய்தால் கணேஷ் நல்ல முறையில் படித்து நல்ல வேலையும் வாங்கி விடுவான்.என்றேன்.

பெரியவா: சரி நீ தேவராஜனை அவன் பாரியலுடன் (மனைவி) சேர்ந்து ஒன்பது வாரம் குரு பூஜை பண்ண சொல்லு. எல்லாம் சரியாகி விடும்.என்றார்.

G.R. பெரியவா இன்னும் ஒரு பிரார்த்தனை பெரியவா என்றேன்.

பெரியவா:: என்ன பிரார்த்தனை என்று கேட்டார்

G.R.: அவாத்துல இப்போ அமைதி இல்லாமல் இருக்கு பெரியவா. குடும்பத்தில் அமைதி வேண்டும் பெரியவா என்றேன்

பெரியவா: சரி எல்லாத்துக்கும் சேர்த்து ஒன்பது வார பூஜை பண்ண சொல்லு. எல்லாம் சரியாகி போகும் என்றார். நானும் நன்றி சொல்லி விட்டு மற்றவர்களின் பிரார்த்தனைகளை முடித்து விட்டு அன்றைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

இது உங்களுக்கு: தேவராஜன் பிரார்த்தனைகள் இரண்டு.

  1. மகன் கணேஷ் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும்.

  2. வீட்டில் பல அமைதி மீண்டும் நிலவ வேண்டும்.

நான் என் பிரார்த்தனைகள் முடிந்து தேவராஜன் அவர்களை அழைத்து விவரங்களை எல்லாம் ஒன்று விடாமல் சொல்லிவிட்டு என் வாழ்த்துக்களை தெரிவுத்துக்கொண்டேன்.

தேவராஜன் குடும்பம் இந்தியாவில் எல்லா வேலைகளையும் முடித்து கொண்டு மீண்டும் அமெரிக்கா திரும்பினர்.. ஊர் சென்று சேர்ந்தவுடன் குரு பூஜையை ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொரு வாரமும் பூஜையை முடித்து விட்டு என்னை அழைத்து விவரம் சொல்லிவிடுவார்கள்.

இப்படியே ஐந்து வார பூஜை நடந்து முடிந்தது. ஐந்தாவது வார பூஜை முடிந்து கணேஷின் பள்ளி மதிப்பெண்கள் வரும் நாள்.அன்று மதிப்பெண்களும் வந்து விட்டன.. எதிர்பார்த்தது போல் மதிப்பெண்கள் சுமார்தான்.

ஆனால் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று விட்டான். ஆனால் அந்த நல்ல கல்லூரியில் சேர இந்த மதிப்பெண்கள் போதாது.நுழைவு தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் அல்லது கணேஷ் முதல் மூன்று இடங்களுக்குள் வர வேண்டும் இது சாத்தியமா? மிகவும் கண்டிப்பான கல்லூரி அது.

கேள்வித்தாளும் அதற்கு ஏற்றாற்போல் மிகவும் கடினமாக திறமையை சோதிப்பது போல் இருக்கும். தேவராஜனுக்கு மிகப்பெரிய நம்பிக்கை.எனக்கும் தான். அந்த பரமேஸ்வரனே அனுகிரஹமும் ஆசிர்வாதமும் செய்தால் எந்த சக்தியால் அதை தடுத்து விட முடியும். .நிச்சயம். கணேஷ் நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் இடம் வாங்கி விடுவான்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா. ஒரு மாநிலத்தில் கோடானுகோடி பேரில் ஒருவருக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுவது எவ்வளவு கடினம். அவ்வளவு கடினத்திற்கு ஒப்பானது. அந்த கல்லூரியில் நூறு மதிப்பெண்கள் பெற்று இடம் பிடிப்பது.

மறு நாள் காலையில் அங்கு மதிப்பெண்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது என்ற செய்தி தேவராஜனுக்கும் எட்டுகிறது. எனக்கும் தேவராஜன் அந்தச்செய்தியை தெரியப்படுத்துகிறார்.

அவர்களின் நாட்டில் காலை நேரம் என்பது நம்முடைய நேரத்திற்கு இரவு சுமாராக ஏழு மணி. நான் என்னுடைய மாலை நேர பிரார்த்தனையில் மஹாபெரியவாளிடம் மிகவும் உருக்கமாக அழுதுகொண்டே பின்வருமாறு வேண்டுகிறேன்.

"பெரியவா தேவராஜனின் பிள்ளை கணேசனின் தலை விதி இன்று எழுதப்படுகிறது. அது எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோருக்கும் புரிகிறது. ஆனால் அதே சமயத்தில் இன்னொன்றும் புரிகிறது.நீங்கள் ஒரு சங்கல்பம் செய்து விட்டால் இந்த ப்ரபஞ்சமே ஒன்று கூடி உங்கள் சங்கல்பத்தை நிறைவேற்றி விடும்.

உங்களுடைய ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் ஒரு சங்கல்பமாகத்தான் பார்க்கிறேன் .கணேஷ் நூறு மதிப்பெண்கள் எடுத்து அந்த கல்லூரியில் இடம் பிடிப்பது உறுதி என்பது என் உல் மனசு சொல்கிறது. என்றேன்

பெரியவா: ஏண்டா தொன்னூற்று ஒன்பது மதிப்பெண்கள் கிடைத்தாலும் இடம் இல்லை என்று சொல்லி விடுவாளோ?

G.R.: நிச்சயம் தொன்னூற்று ஒன்பது மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் இடம் உறுதி பெரியவா என்றேன்.

பெரியவா: சரி போடா உன்னோட கணேஷ் தொன்னூற்று ஒன்பது மார்க் வாங்கிடுவான்.சந்தோஷமா என்றார்.

G.R.:: பெரியவா இது மட்டும் நடந்து விட்டால் என்னோட கணேஷ் வாழ்க்கையில் நன்றாக வெற்றி பெற்று விடுவான். அவன் நல்லபையன் பெரியவா. அவனுடைய அப்பாவும் அம்மாவும் ரொம்ப நல்லவா.. வாழ்கை பூரா உங்களுடைய பூஜை பண்ணிண்டே இருப்பா பெரியவா என்றேன்.

பெரியவா: நீ உன்னோட வேலையை பாரு. உனக்கு போன் மூலம் அவாளே மதிப்பெண்ணை சொல்லுவா என்றார்.

நான்: சரி பெரியவா என்று என் வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் என் மனது வேலையில் லயிக்க வில்லை.அமெரிக்கா சென்று கொண்டே கணேசனை சுற்றி சுற்றி வந்தது.

அற்புதம் நடந்து விட்டது:

இரவு மணி சரியாக எட்டு. எனக்கு தொலை பேசி அழைப்பு வருகிறது. மறு முனையில் தேவராஜன். மாமா என்று ஒரு கத்தல்.நான் சொல்லுங்கோ தேவராஜன் என்றேன். தேவராஜன் சொன்னார் "மாமா நுழைவுத்தேர்வில் என்னோட கணேசன் தொன்னூற்று ஒன்பது மதிப்பெண்கள் பெற்று விட்டான். இனி யார் வந்தாலும் அவனுடைய இடத்தை தட்டி பிடுங்க முடியாது. நீங்கள் கிரேட் மாமா என்றார்.

நான் சொன்னேன் கிரேட் நான் இல்லை. பிரபஞ்ச நாயகன் மஹாபெரியவா தான் கிரேட். மஹாபெரியவா ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அந்த வார்த்தை இந்தப்ரபஞ்சம் முழுவதும் எதிரொலிக்கும்..

எதிரொளிக்கும் வார்த்தை ப்ரத்யக்ஷ பரமேஸ்வரன் சங்கல்பம் என்று தெரிந்து கொண்டு அதை பிரபஞ்சமே ஒன்று கூடி அந்த சங்கல்பத்தை நிறைவேற்றி விடும். உங்களுக்கு இது புதிது ஆனால் மஹாபெரியவா செய்யும் லீலைகளை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ரொம்ப சந்தோஷம் தேவராஜன். குரு பூஜையை விடாமல் செய்து வாருங்கள்.

நீங்க மஹாபெரியவளுக்கு செய்யும் ஒரே நன்றிக்கடன் உங்களைப்போல உங்கள் சொந்தங்களோ பந்தங்களோ நண்பர்களோ வாழ்க்கை பிரச்னையில் சிக்கி விட்டால் மஹாபெரியவா என்னும் சாவியை அவர்களுக்கு கொடுங்கள்..உங்கள் நன்றியை இப்படி காட்டுங்கள்.. தேவராஜன் என்னிடம் கேட்கிறார். மாமா உங்களுக்கு எங்கள் அனுப்பு காணிக்கையாக ஏதாவது செய்யவிரும்புகிறோம் என்றார்.

நான் சொன்னேன் உங்கள் காணிக்கையை நீங்கள் எனக்கு ஏற்க்கனவே கொடுத்து விடீர்கள். இன்னும் ஏதற்கு? என்றேன்.. அவருக்கு ஒன்றும் புரியவில்லை.மாமா புரியவில்லை என்றார்.

உங்கள் கண்களில் வரும் ஆனந்த கண்ணீர்தான் எனக்கு காணிக்கை.. உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையான நாளாக இருக்க வேண்டும் என்றேன்.

நமக்குத்தான் இன்னும் புரியவில்லை

மஹாபெரியவா நம்முடனே வாழ்ந்துகொண்டு

எல்லோருக்கும் அருள் பாலித்து கொண்டிருக்கிறார்

முயற்சி இல்லாமல் நினைப்பது நடந்து விட்டால்

அதற்கு மதிப்பே இல்லாமல் போய் விடுகிறது

ஆனால் மஹாபெரியவா அனுக்கிரஹம் என்பது நிதர்சனம்

நிதர்சனத்தை மதிக்க கற்று கொள்ளுங்கள்

உங்கள் வாழ்வில் என்றும் அணையா தீபம் ஏற்றப்படும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page