Featured Posts

மஹாபெரியவா பார்வையில் திருப்பதியில் கோவில் கொண்டுள்ளது பெருமாளா முருகனா இல்லை அம்பாளா


மஹாபெரியவா பார்வையில்

திருப்பதியில் கோவில் கொண்டுள்ளது

பெருமாளா முருகனா இல்லை அம்பாளா

நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விஷயம் . மஹாபெரியவாளை ஒரு நல்ல எழுத்தாளரோ சிந்தனையாளரோ இல்லை எந்த ஒரு துறையிலாவது புகழ்பெற்று இருக்கும் ஒருவர் தரிசனம் செய்ய வந்தால் அவர்களிடம் அவர்கள் துறையிலேயோ அல்லது ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அவர்களிடம் அலசி ஆராய்வது வழக்கம்.

அப்படி ஒரு முறை தமிழ் அறிஞர் கி.வா. ஜெகநாதன் அவர்கள் மஹாபெரியவாளை தரிசனம் காண வந்தார். அப்பொழுது தரிசனம் முடிந்து பிரசாதங்கள் கொடுத்து விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு மஹாபெரியவா மெதுவாக கீ.வா ஜா விடம் கேட்டாராம்.

.நீ திருப்பதி போயிருக்கயே. அங்கே இருப்பது பெருமாளா? இல்லை முருகனா ? இல்லை அம்பாளா? என்று கேட்டாராம்.

கீ வா ஜா பட்டும்படாமல் சொன்னாராம். வட நாட்டினர் திருப்பதி பெருமாளை பாலாஜி என்று அழைப்பார்கள். இந்த பாலாஜி என்ற வார்த்தையில் பாலன் என்பது முருகனை குறிக்கும்.முருகனை இப்படி மரியாதையாக அழைத்திருக்கலாம் என்று சொன்னாராம்.

மஹாபெரியவா சொன்னதை கேளுங்கள்:

பெருமாள் கோவிலில் வழக்கமாக பெருமாளுக்கு துளசியில் தான் அர்ச்சனை செய்வார்கள். ஆனால் திருப்பதியில் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலைகளில் தான் அர்ச்சனை செய்கிறார்கள். வில்வ இலைகளில் சிவனுக்கோ அல்லது முருகனுக்கோ தான் அர்ச்சனை செய்வார்கள்.

முருகனுக்கும் திருமாலுக்கும் மாமன் மருமகன் உறவு. முருகன் பெருமாளுக்குள் அடக்கம். அங்கே பெருமாளும் முருகனும் வாசம் செய்ய ஆரம்பித்தனர்..

அங்கு ஆதி காலத்தில் இருந்தே அம்பாள் ஸ்வரூபமான கௌமாரி மற்றும் வைஷ்ணவி தேவி தான் கோவில் கொண்டிருந்தார்கள். இதை மெய்ப்பிக்கும் பொருட்டு மஹாபெரியவா ஸ்ரீகார்ய மனுஷாளில் ஒருவரிடம் திருப்பதியில் தனக்கு போட்ட வஸ்திரத்தை எடுத்து வர சொன்னார். பிரித்து அதை அளக்கச்சொன்னார்.

அந்த வஸ்திரம் முப்பத்தி ஆறு முழம் இருந்தது. இந்த முப்பத்தி ஆறு முழம் அந்த காலத்தில் இருந்தே தேவதைகளுக்கு உண்டான கணக்கு. அம்பாளுக்கு என்று ப்ரதேயமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் புடவையை முப்பத்தி ஆறு முழத்திற்கு நெய்யச்சொல்லி அம்பாளுக்கு சாத்தி வந்தார்கள்.

இன்றும் திருப்பதி பெருமாளின் வெளி பிரகார சுற்றில் சிம்ம வாஹனம் இருப்பதைகாணலாம். இது சக்தியின் வாஹனம் அல்லவா.

இந்த விஷயங்களை சைவர்களும் வைஷ்ணவர்களும் குழம்புவதற்காக நன் சொல்லவில்லை. . இரண்டு பிரிவினரும் கை கோர்த்து இந்து மதத்தை முஎடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். என்றாராம்.

பொதுவாகவே மஹாபெரியவா ஒருவரிடம் ஒரு மணி நேரம் பேசுகிறார்கள் என்றால் கேட்பவர்களுக்கு பல பொக்கிஷத்திற்க்கு இணையான விஷயங்கள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அந்த மாதிரி சம்பாஷணைகளில் இதுவும் ஒன்று.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square