top of page
Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-33-பாகம் -2-தேவராஜன்


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-33

பாகம் -2-தேவராஜன்

பிரதி திங்கட்கிழமை தோறும்

மஹாபெரியவா அனுக்கிரஹம்

தேய்பிறை இல்லாத முழு நிலவு

காலத்தை கடந்து நிற்கும்.

கணேஷ் தேவராஜ் அனுபவமே

ஒரு வாழும் சான்று

அன்று வியாழக்கிழமை மாலை என்னுடைய பூஜைகளை முடித்துக்கொண்டு காயத்ரி ஜெபத்தில் அமர்ந்தேன்.. இரவு எட்டு மணி சுமாருக்கு தேவராஜிடம் இருந்து எனக்கு தொலை பேசி அழைப்பு. நான் சொல்லுங்கள் தேவராஜ் என்றேன். மறு முனையில் சோகமே உருவாக உயிரற்ற குரலில் பேச ஆரம்பித்தார். தேவராஜ் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது..

நான் கேட்டேன் என்ன ஆச்சு தேவராஜ் ஏன் குரலில் ஒரு சோகம் என்று கேட்டேன்.. தேவராஜ் என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்.

"மாமா மஹாபெரியவா அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தார்.. எங்கள் வீட்டில் எல்லோருமே அந்த சந்தோஷத்தை கொண்டாடினோம்.. ஆனால் அந்த சந்தோஷம் இன்று காணாமல் போய்விட்டது. வீடே ஒரு சோகமாக இருக்கு மாமா” என்றார்.

எனக்கு உள்ளம் படபடக்கிறது.அப்படியென்ன நடந்திருக்கும். அதுவும் ஒரே வாரத்தில். மஹாபெரியவா தன்னுடைய அற்புதசக்தியால் நடக்கவே சாத்தியம் இல்லாத ஒரு விஷயத்தை செய்து காண்பித்து தேவராஜின் மகன் கணேஷின் கல்லூரி நுழைவுத்தேர்வில் தொன்னூற்று ஒன்பது மதிப்பெண்கள் எடுக்க வைத்து ஒரு வரலாறே எழுதப்பட்டதே. அதற்குள் என்ன சோகமோ தெரியவில்லையே என்று எனக்குள் சொல்லிக்கொண்டே.

"தேவராஜ் சொல்லுங்கள் என்ன ஆயிற்று என்று கேட்டேன்.

தேவராஜ் பின்வருமாறு சொல்ல ஆரம்பித்தார்.

"மாமா கணேஷின் பள்ளியில் இருந்து எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. அதில் என் மகன் கணேஷ் ஒழுங்கு தவறி மதிண்பெண்கள் பெற்றுவிட்டதாகவும் அதனால் கணேஷை இந்த வருடம் பெற்ற தேர்ச்சியை திரும்ப பெறுவதாகவும் அறிவித்திருந்தனர்.

அவன் மேலும் ஒரு வருடம் படித்துதான் திரும்பவும் தேர்ச்சி பெற முடியும் என்றும். மேலும் விவரங்கள் பெறுவதற்கு கணேஷை தன்னுடைய தந்தையுடன் பள்ளிக்கு வந்து தன்னை சந்திக்குமாறு தெரிவித்திருந்தார்கள்.. இதுதான் தேவராஜிற்கு கொடுத்த சோகம். எனக்கும் அந்த சோகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். நான் தேவராஜிடம் சென்னேன் மஹாபெரியவா என்னை நிச்சயம் ஏமாற்ற மாட்டார். நான் மஹாபெரியவாளிடம் பேசிவிட்டு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

கவலை படாதீர்கள். மேலும் மஹாபெரியவா மனிதர் இல்லை. அவர் பரமேஸ்வரன். உங்கள் சந்தோஷமும் கணேஷின் மேற்படிப்பு எந்த விதத்திலும் தடைப்படாது.. நான் மஹாபெரியவாளிடம் மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் அதே சந்தோஷத்திலிருங்கள் என்று சொன்னேன்.

இறைவன் கொடுக்கும் வாக்கு பிரபஞ்சத்தின் வாக்கு. சத்தியமாக தவறாது.நீங்கள் நாளை என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றேன்.அவரும் சரி என்று ஒரு சோகமான குரலில் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

நான் மஹாபெரியவாளிடம் போனேன். என்னால் கைகளை கூப்பி நிற்க முடியவில்லை.. என்னுடைய வலது கையை என் இதயத்தில் வைத்துக்கொண்டு கேட்டேன்.

G.R.: பெரியவா இது என்ன சோதனை.

பெரியவா: என்னடா சொல்லு என்கிறார்.

G.R.: பெரியவா தேவராஜின் மகன் கணேஷிற்கு உங்களிடம் வேண்டிக்கொண்டேன். அவன் பள்ளியில் இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் சாத்தியம் இல்லை. ஆகவே நுழைவு தேர்வில் கணேஷிற்கு நல்ல மதிப்பெண்கள் வாங்குவதற்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று கேட்டிருந்தேன்..

நீங்களும் அவனுக்கு அனுக்கிரஹம் செய்து கணேஷும் தொன்னூற்று ஒன்பது மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேருவதற்கு தகுதியும் பெற்று விட்டான். இந்த சமயத்தில் கணேஷுடைய பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு செய்து வந்திருக்கிறது பெரியவா..

அந்த செய்தியில் கணேஷ் ஒழுக்கம் தவறி மார்க் வாங்கி விட்டதாகவும் அதனால் இந்த வருடம் கொடுத்த தேர்ச்சியை திரும்ப பெறுவதாகவும் கணேஷ் மீண்டும் அதே வகுப்பில் இன்னும் ஒரு வருடம் படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் பெரியவா.

நான் உங்களிடம் அவ்வளவு முறையிட்டேனே பெரியவா. கணேஷிற்கு இந்த வருடம் அவன் தலை விதியை நிர்ணயிக்கும் வருடம்.அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா என்று தானே வேண்டினேன். எனக்கு இதை கொடுங்கள் அதை கொடுங்கள் என்றா கேட்டேன் பெரியவா.

என்னுடைய சக ஆத்மாவின் நல்லதுக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா என்றுதானே கேட்டேன். இத்தனையும் மூச்சிரைக்க சொல்லிவிட்டு அமைதியாக நின்றேன்.

பெரியவா: பள்ளிக்கூடத்திலே என்னடா சொல்லறது. அவனுக்கு ஒழுக்கம் இல்லைனா நானே அவனை திருத்தி அப்புறம்தான் அனுக்கிரஹம் பணியிருப்பேன்.. கணேஷ் ஒழுக்கமான பையன் தான். அதுனாலே தான் உன்னுடைய பிரார்த்தனைக்கு பதில் கொடுத்தேன்.என்றார்

G.R. இப்போ நான் அவாளை என்ன பண்ண சொல்லட்டும் பெரியவா என்றேன்.

பெரியவா:: அவனுக்கு கண் த்ரிஷ்ட்டி நிறைய இருக்குடா. கல்லடி பட்டாலும் தேவலை. கண்ணடி பண்ணக்கூடாது. அதுக்குதான் எல்லார் ஆத்திலயும் சுத்தி போடுவா பார்த்திருக்கயா.

அந்த காலத்திலே ஆத்துலே பெரியவா இதையெல்லாம் செய்யறது வழக்கம். இன்னிக்கு யாருமே சுத்தி போடறது இல்லை.கஷ்டம்னு வந்தவுடன் கத்திண்டு கோவிலுக்கு போறதும் என்கிட்டே வந்து நின்னுண்டு இருக்கா.

பெரியவா:நீ ஒன்னும் கவலை படாதே நான் அவனை பார்த்துக்கறேன்.எல்லாம் சரியாய் போய்டும். இறுதியாக ஒன்று சொன்னார். ஏண்டா உனக்கு வாழைப்பழம் ரொம்ப பிடிக்குமா? அதை விட்டுடேண்டா அது வேண்டாம். என்றார்.

G.R. பெரியவா நீங்கோ என்ன எல்லாத்தையும் விட வெச்சேள். எனக்கு ஒன்னும் கஷ்டம் தெரியலை. இப்போ கணேஷ் பிரச்சனைக்கும் நான் வாழைப்பழம் விடறதுக்கும் என்ன சம்பந்தம் பெரியவா என்றேன்.

பெரியவா: உனக்கு அதெல்லாம் இப்போ தெரிய வேண்டாம். வாழைப்பழத்தை மட்டும் விட்டுடு. .பிரசாதம் வந்தால் சாப்பிடு அதற்கு தோஷம் இல்லை என்றார்.

G.R. எனக்கும் கணேஷ் பிரச்சனை தீர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் சரி பெரியவா நான் இந்த நொடியில் இருந்து வாழைப்பழம் சாப்பிடுவதில்லை.என்று சொன்னேன். நான் மஹாபெரியவளிடம் ஒன்று சொன்னேன் என்றால் அது சத்தியத்திற்கு ஒப்பாகும்.

இதில் ஒரு அதிசியம் என்னவென்றால் அன்று பார்த்து எங்கள் வீட்டில் டைனிங் டேபிள் மேல் பெரிய செவ்வாழை பழம் இரண்டு சீப்பு வைக்கப்பட்டு இருந்தது.. என் வாழ்க்கையில் இறுதியாக அந்த வாழைப்பழத்தை ஒரு வாஞ்சையுடன் பார்த்து விட்டு என் நாவையும் மனதையும் அடக்கிக்கொண்டு வந்து விட்டேன்.

எனக்குள் ஒரு சந்தோஷம் அதுவும் ஆத்ம சந்தோஷம். என்னுடைய சகஆத்மாவிற்காக வாழைப்பழத்தை விட்டு கணேஷுடைய வாழ்க்கை சீரான பாதையில் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

நான் மஹாபெரியவாளை நமஸ்கரம் செய்து விட்டு இரவு பத்து மணிக்கு என் படுக்கை அறைக்கு வந்து விட்டேன். வழக்கமாக ஒன்பது மணிக்கு நான் உறங்க செல்வது வழக்கம். ஏனென்றால் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்துவிடுவேன் என்னுடைய பிரும்ம முகூர்த்த ப்ரார்தனைகளுக்காக.

ஆனால் அன்று மட்டும் ஒரு மணி நேரம் தாமதம். ஆனால் அந்த அசதியையும் பெரியவா தான் வாங்கிக்கொண்டு என்னை வழக்கம் போல் செயல் படச்செய்வார்.

நான் மஹாபெரியவாளிடம் பேசி விட்டு என்னுடைய மடிக்கணினியை எடுத்து தேவராஜன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.விவரம் இதோ

"தேவராஜ் நீங்கள் ஒன்றும் கலக்கம் அடைய வேண்டாம்.நான் மஹாபெரியவளிடம் முறையிட்டுவிட்டேன். இனி அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். கவலை படாமல் இருங்கள் என்றேன்.

அவரும் சரி மாமா மஹாபெரியவா இருக்கார் என்று சொல்லி எனக்கு பதில் கொடுத்தார் . நான் கணேஷுக்காக வாழைப்பழம் விட்டதை சொல்லவில்லை. இதை படிக்கும் போதுதான் அவருக்கும் தெரியும். அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை என்னதான் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும் நானும் மனிதன்தானே.

அடுத்த நாள் மாலை மணி ஏழு : தேவராஜன் என்னை தொலைபேசியில் அழைத்தார்."மாமா நான் மஹாபெரியவாளுடன் இன்னிக்கு காத்தலே சண்டையே போட்டுட்டேன். இன்னிக்கும் மட்டும் கணேஷுக்கு பிரச்சனைகள் தீரவில்லை என்றால் உங்களுடன் இனிமேல் பேசப்போவது இல்லை பெரியவா என்றாராம்.

இங்கு நான் ஒருபக்கம் அவரிடம் கோபித்து கொள்கிறேன். அங்கு தேவராஜன் ஒரு புறம் கோபித்து கொள்கிறார்.பாவம் பெரியவா திட்டு வசவு எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு அனுகிரஹமும் செய்து விடுகிறார்.

பெரியவா குழந்தை மாதிரி. யாரிடம் பக்தி இருந்தாலும் கையை பிடித்துக்கொண்டு கூப்பிட்ட இடத்திற்கு வந்து விடுவார். திட்டையும் வசவாயும் வாங்கிக்கொண்டு அனுகிரஹமும் செய்து விடுகிறார். அதனால்தான் அவர் கருணாசாகரன்.

நான் தேவராஜிடம் சொன்னேன். நீங்கள் கணேஷை அழைத்து கொண்டு அவனுடைய பள்ளிக்கு சென்று கேளுங்கள்.இரவு எந்த நேரமானாலும் என்னை அழைத்து விவரம் சொல்லுங்கள் என்றே. சொல்லிவிட்டு நானும் மஹாபெரியவாளை இரவு பிரார்த்தனை செய்து விட்டு வந்து படுத்தேன்.

அப்பொழுது என்னக்கு மிகவும் அசதியாக இருந்தது. உடல் அசதி இல்லை. மனமும் மூளையும் இடைவிடாமல் கணேஷ் பிரச்னைகளை மனசில் போட்டு அசைபோட்டுக்கொண்டிருந்தேன்.

மஹாபெரியவா செய்த அற்புதம்: இரவு மணி பதினொன்று எனக்கு தேவராஜிடம் இருந்து தொலை பேசி அழைப்பு வருகிறது. அழைப்பின் விவரம் உங்களுக்காக

கணேஷின் ஆசிரியர் கணேஷயும் அவனது தந்தை இருவரையும் காத்திருக்க வைத்து விட்டு தன்னுடைய அறைக்கு சென்று எல்லாவற்றையும் பின்னிருந்து முன்னோக்கி ஆராய்ந்த பொழுது ஆசிரியருக்கு புரிந்து விடுகிறது கணேஷ் எந்த தவறும் செய்யவில்லை. அந்த தவறு வேறு ஒருவருடைய மாணவன் செய்த தவறு என்பதை உணர்ந்தார் ஆசியர்.

கணேஷ் தேவராஜ் இருவரையும் தன்னுடைய அறைக்கு வர சொல்லி தன்னுடைய தவறுக்கு வருந்துவதாகவும் கணேஷ் மேல் எந்த தவறும் இல்லை என்று சொல்லி தன்னுடைய தவறுக்கு மன்னிப்பும் கேட்டு கணேஷின் தேர்ச்சியை உறுதியும் செய்து கொடுத்தார். தந்தை மகன் இருவரும் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு வீட்டிற்கு வந்தார்கள்.

சொல்லவும் வேண்டுமா தேவராஜும் மகன் கணேஷும் மஹாபெரியவா முன் மண்டியிட்டு மன்னிப்பு கூறியிருப்பார்கள் என்பதை. அவர்கள் மட்டுமா. இங்கு நானும் மஹாபெரியவா முன் மண்டியிட்டேன்.

நமக்குத்தான் சரியாக புரியாமல் காரண காரியங்கள் தெரியாமல் மஹாபெரியவாளை ஏசி விட்டு பிறகு புரிந்தவுடனோ அல்லது காரியங்கள் நடந்த உடனேயே கண் கலங்க மஹாபெரியவா முன் மண்டியிடுகிறோம்.

ஏமாற்றி வெற்றி பெறுவதை விட

மரியாதையாக தோற்றுப்போவது

மிகவும் மரியாதையானது என்ற

கணேஷின் நேர்மைக்கு கிடைத்த பரிசு

மஹாபெரியவா கொடுத்த வெற்றி

ஹர ஹர சங்கர ஜயஜய சங்கர

ன்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page