Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-054


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-054

ஒருவர் மஹாபெரியவாளை ஒரு முறை பார்த்துவிட்டால்

வாழ்க்கையில் வரும் ஆபத்துக்கள் அகலும்

மஹாபெரியவா உங்களை பார்த்துவிட்டால் ஆபத்து மட்டுமல்ல

உங்கள் பாவங்களும் சேர்த்து கழுவப்படும்.

இதை நிரூபிக்கும் நிகழ்வு ஒன்று

வட நாட்டில் இருந்து பக்தர் ஒருவர் மஹாபெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்.. மஹாபெரியவா தரிசனமும் கொடுத்து பிரசாதங்களும் கொடுத்து ஆசிர்வதித்தார். அந்த பக்தர் விடைபெறும் நேரத்தில் சற்று நேரம் இருக்கச்சொல்லிவிட்டு பிறகு அழைத்தார்..

அவர்களிடம் பெரியவா சொன்னது. " நீ போகும் பொழுது வாசலில் ரோடு போட ஜல்லி கற்களை கொட்டி வைத்துகிறார்கள்.. ஒரு மூட்டையில் அந்த ஜல்லி கற்களை கட்டிக்கொண்டு காரில் ஏறி கிளம்பு என்று உத்தரவு இடுகிறார்.. பக்தரும் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு சாக்கு மூட்டையில் ஜல்லி கற்களை மூட்டையாக கட்டிக்கொண்டு காரில் ஏறி கிளம்புகிறார்கள்..

எல்லோரும் குழம்புபிறார்கள். ஏதற்கு சாலையில் கொட்டியிருக்கும் ஜல்லி கற்களை எடுத்து செல்ல வேண்டும் என்று தெரியாமல் விழித்தனர்.. மஹாபெரியவா ஒரு உத்தரவை கொடுத்து விட்டால் அதற்கு காரணம் அப்பொழுது தெரியாது.. நம் அறிவிற்கும் எட்டாது.. ஆனால் காரியம் நிறைவேறும் பொழுது அதற்குண்டான காரணம் தெரியவரும். நாம் கண்கள் கலங்கி நிற்போம். இனி ஜல்லி கற்களுக்கு உண்டான காரணத்தை பார்ப்போம்.

பக்தர்கள் குடும்பம் வடஇந்தியாவிற்கு பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். செல்லும் வழியில் அவர்கள் ஒரு ஆபத்தான காட்டுப்பிரதேசத்தை கடந்து செல்ல வேண்டும். அந்த காட்டுப்பகுதியில் கொள்ளைகள் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள். யாரும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.. அவ்வளவு வலிமை படைத்தவர்கள்.

நடு இரவு நேரம். பக்தரின் குடும்பம் காட்டுப்பகுதியில் பயணம் செய்து கொண்டிருக்கிறது.. சற்றும் எதிர் பாரத வகையில் கொள்ளைக்காரர்கள் காரை வழி மறித்து நிற்கிறார்கள்.

காரும் நிறுத்தப்படுகிறது. காரை சுற்றி கொள்ளைக்காரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.முதலில் காரின் பிற்பகுதியில் இருக்கும் டிக்கியை திறக்கிறார்கள். கனமான மூட்டை தென்படுகிறது. கொள்ளைக்கார்கள் முடிவு செய்து விட்டனர்.

எல்லா நகை விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் அந்தமூட்டையில் தான் இருக்கிறது என்று தீர்மானித்து மூட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு அந்தக்குடும்பத்தை விரட்டி விடுகின்றார்கள்,, குடும்பமும் தப்பித்தால் போதும் என்று நினைத்து காரை வேகமாக கிளப்பிக்கொண்டு சென்று விட்டனர்.. கொள்ளை காரர்களின் ஏமாற்றத்தை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?.

சற்று யோசித்து பாருங்கள். அடுத்த வினாடி என்ன நடக்க போகிறது என்பதை நம்மால் முடிவு செய்ய முடியவில்லை. அடுத்த சிலநாட்களில் அடுத்த சில மாதங்களில் அடுத்த சில வருடங்களில் அடுத்த சில ஜெந்மங்களில் என்ன நடக்க போகிறது என்று சொல்ல வேண்டுமானால் அவர் யார் என்று . சொல்லவும் வேண்டமா. அண்டசராசரங்களை படைத்த பரமேஸ்வரன் அல்லவா?, அகிலத்தை காக்கும் ஸ்ரீமன் நாராயணன் அல்லவா.. பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியல்லவா நம் மஹாபெரியவா?.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். நியாயமான வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் வேண்டிக்கொள்ளுங்கள்.. மனதார தவறுக்கு வருந்தி அழையுங்கள்.. உங்களுக்கு ஓடோடி வந்து அருள் பாலிக்கும் நம்முடைய தாய் போன்றவர் மஹாபெரியவா.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square