top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -057


என் வாழ்வில் மஹாபெரியவா -057

பிரதி வியாழன் தோறும்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதம்

அன்று ஒவ்வொருவர் வாழ்விலும்

தனித்தனியாக அரங்கேறியது

அன்று அரங்கேறிய அற்புதங்கள் எல்லாம்

இன்று ஒன்று சேர்ந்து செய்த அற்புதம்

மஹாபெரியவா பிரபஞ்ச கோவில்

இன்று என்னிடம் இருக்கும் மஹாபெரியவா அன்று ஒரு சிறிய படமாக இருந்தார். அப்பொழுது எனக்கு வெளி உலகம் தெரியாது. பத்து வருடங்களுக்கு மேலாக நான் வெளி உலக தொடர்பை இழந்திருந்தேன். .

நான்கு சுவர்களுக்குள் என்னை தொடர்பு கொள்ளும் சிலருக்கு மட்டும் மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி அதன் பலன்களை வந்த பக்தரர்களுக்கு மடை மாற்றிக்கொண்டிருந்தேன்.

நான் வெளியில் தெரியா விட்டாலும் என் எழுத்துக்கள் வெளியுலகில் தெரிய ஆரம்பித்த நேரம்.. இதற்கு மஹாபெரியவா என்னும் இறை சக்தி தான் காரணம். அன்று ஒரு சிறிய படமாக இருந்த பெரியவா எப்படி ஒரு கோவிலாக உருவெடுத்துள்ளார் என்பதை பாருங்கள்.மேலே உள்ளபடத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும்..

இந்த கண்ணுக்கு தெரியும் கோவில் குரு பூஜை அற்புதங்களை அனுபவித்த பக்தர்கள் அமைத்த கோவிலாகும். இந்த கோவிலில் மேலிருந்து கீழாக ஒவ்வொரு பக்தரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது என் கடமை.

மஹாபெரியவா விக்ரஹம் : பக்தரின் பெயர் அமிர்தவர்ஷினி. இந்த பக்தருடைய பிரார்த்தனைகளில் ஒன்று மட்டும் சற்று வித்தியாசமானது. அந்த விசித்திர பிரார்த்தனை மஹாபெரியவா கனவில் வர வேண்டும் என்பதுதான் . இந்த பிரார்த்தனையில் மஹாபெரியவாளிடமும் என்னிடமும் சண்டை போட்டு தரிசனம் பெற்றவர்..

இவருடைய நெருங்கியசொந்தங்களில் ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்த திருமணம் நின்று விடும் நிலமை. மஹாபெரியவாளிடம் கெஞ்சி கூத்தாடி குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி பூஜையும் முடிந்தது. திருமணமும் நன்றாக நடந்து முடிந்தது. நம்முடைய பழைய இணைய தளமான periyavaarul.wordpress.com காணலாம்.

திருமணம் ஆன பெண் என்னுடைய இல்லத்திற்கு வந்து திருமண அழைப்பிதழையும் கொடுத்துவிட்டு ஒரு அலங்கரிக்கப்பட்ட பெட்டியை என் முன்னால் வைத்தார்.

நான் அவர்களிடம் சொன்னேன். தயவு செய்து மஹாபெரியவா சம்பந்தமான பொருட்களை மட்டும் ஏற்று கொள்வேன். வேறு எதுவாக இருந்தாலும் வெளியிலேயே வைத்து விட்டு உள்ள வாருங்கள் என்றேன்.

அவர்கள் சொன்னது எங்களுக்கு எல்லாமே தெரியும். உங்களுக்கென்று ஏதாவது கொடுத்தால் நீங்கள் எந்தக்காரணத்தை கொண்டும் வாங்க மாட்டிர்கள் என்று.. ஆனால் இந்தப்பெட்டியில் உள்ள வஸ்துவை நீங்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டிர்கள் என்று பெட்டியை பிரிக்க ஆரம்பித்தார்கள்..

பெட்டியின் உள்ளே இருந்து வெளியில் வந்தவர் இப்பொழுது நீங்கள் பார்க்கும் மஹாபெரியவா.. அந்த பக்தையின் திருமண வாழ்க்கை இனிதே அமைந்திட உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

நம்முடைய மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களில் ஒரு சில விண்ணை தொடும் அற்புதங்கள் இன்றும் நம்மால் மறக்க இயலாது.. நம்முடைய இதயத்தின் கதவை தட்டி உன்ளே புகுந்து நிரந்தர இடம் பிடித்து விட்ட அற்புதங்கள். ஒரு சில..... அவைகளில் சங்கரன் வசந்த கல்யாணி அற்புதம் நம்மால் என்றுமே மறக்க இயலாது..

புதிதாக நம்முடைய இணைய தளத்திற்கு வருகை தந்தவர்களுக்காக ஒரு சில வரிகளில் அந்த அற்புதத்தை இங்கே சமர்ப்பிக்கிறேன்...

சங்கரன் வசந்த கல்யாணி இருவரும் சித்தி மகன் உறவு முறை.. இவர்கள் பிராம்மண நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. வறுமை உச்சத்தில் இவர்களை பாடாய் படுத்தி கொண்டிருந்த நேரம்... ஏழ்மை என்றால் அதற்கு விளக்கமும் இவர்கள் தான்.. சங்கரன் ஒரு பொறியாளர். . கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்றவர்.. இருந்தும் இவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை..

இவர்களுக்காக நான் மஹாபெரியவாளிடம் மன்றாடி குரு பூஜைக்கு உத்தரவு வாங்கிக்கொடுத்து இவர்களும் கொட்டும் மழையிலும் மஹாபெரியவாளுக்கு குடை பிடித்து கொண்டு தங்கள் மட்டும் நனைந்து தங்களுடைய மஹாபெரியவா பக்தியை உலகிற்கு பறை சாற்றிக்கொண்டிருந்தனர்.. தாங்கள் பசியால் வாடிய காலத்திலும் மஹாபெரியவாளுக்கு தினமும் நல்ல முறையில் நெவேத்தியம் செய்து வந்தனர்.

ஒவ்வொரு வாரமும் பூஜை முடிந்து இவர்கள் என்னை அழைத்து எனக்கு சொல்ல தவறியது இல்லை. இவர்களின் ஒன்பதாவது வார்பூஜை.. அன்று தான் இவர்களின் தலை விதி மாற்றி எழுதப்பட்டது.. அன்று காலை நான்கு மணிக்கு நான் மஹாபெரியவாளிடம் கண்ணீர் மல்க இவர்களுக்காக பின்வருமாறு முறையிட்டேன்.:

"பெரியவா, மனிதன் வாழ்ந்தால் கர்மாவை கழிக்க முடியும்...ஆனால் வாழவே முடியாமல் கர்மாவை கழி என்றால் அது என்ன நியாயம் பெரியவா? இப்படி இருந்தால் கர்மாவிற்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விடும்..

இன்று இவர்கள் ஒன்பதாவது வார பூஜை செய்கிறார்கள். இன்று மதியம் ஒரு மணிக்கு இவர்களிடம் இருந்து எனக்கு நல்ல செய்தி வர வேண்டும் பெரியவா.. இந்த கஷ்டம் எனக்கே வந்தது போல் கேட்கிறேன் பெரியவா.. அவாளோட தலையெழுத்தை மாற்றி எழுதுங்கோ பெரியவா. என்று அழுதேன்.

சிறிது மௌனத்திற்கு பிறகு நானும் என் வேலையை கவனிக்க தொடங்கி விட்டேன். சரியாக மதியம் ஒரு மணி சுமாருக்கு சங்கரனிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.. பல மாதங்களுக்கு முன் சங்கரன் விண்ணப்பத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய அமெரிக்காவை சேர்ந்தஒரு பன்னாட்டு நிறுவனம் திரும்ப அழைத்து வேலை கொடுத்தார்கள்..

சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு நான்கு லக்ஷத்து ஐம்பதாயிரம் ரூபாய்.. நானும் மஹாபெரியவாவளுக்கு நன்றி சொன்னேன். அப்பொழுது மஹாபெரியவா என்னிடம் lசொல்கிறார் நாளைக்கு அவனுடைய சம்பளம் அதிகமாகும் என்கிறார்.

நான் மஹாபெரியவாளிடம் சொல்கிறேன். பெரியவா அது ஒரு அமெரிக்கா நிறுவனம். அப்படியெல்லாம் தரமாட்டா என்கிறேன். ஏண்டா நீ பெரியவாளா? நான் பெரியவளா ? நாளைக்கு நிச்சயம் அவனுக்கு சம்பளம் கூட்டி தருவா. . அவனுக்கும் இதை சொல்லு என்றார். ஆனால் நாள் சொல்லவில்லை..

என்ன ஒரு ஆச்சரியம். அடுத்தநாள் சங்கரனுடைய சம்பளம் வருடத்திற்கு ஆறு லக்ஷத்து ஐம்பதாயிரம் என்று முடிவு செய்து விட்டார்கள். நான் என் தவறுக்காக அழுவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்.. இன்று சங்கரன் நிற்க நேரமில்லாமல் விமானத்திலும் காரிலும் திசை தெரியாமல் வேலை செய்து கொண்டிருக்கிறான்.

இவன் வேலைக்கு சேர்ந்த ஆறுமாதத்தில் மிக சிறந்த ஊழியர் என்ற விருதையும் வேலை நிரந்தரம் செய்யும் கடிதமும் பெற்றான். வருடத்திற்கு இரண்டு சம்பள உயர்வும் மேலும் பல சலுகைகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறான்.

இனி அவனுடைய அறுபதாவது வயதுவரை கஷ்டமே இல்லை.. அன்று விலகி சென்ற சொந்தங்கள் எல்லாம் இன்று நெருங்கி வந்து உனக்கு நான் பெண் தருகிறேன்.என்று போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் மார்ச் மாதம் பதினேழாம் தேதி மஹாபெரியவா பாதுகையை தரிசனம் செய்ய என் வீட்டிற்கு வந்திருந்தான். அப்பொழுது சங்கரன் என்னிடம் சொல்லிவிட்டான். " மாமா என்னுடைய தலை விதியையும் என் குடும்பத்தின் தலையெழுத்தையும் ஒரே இரவில் நீங்களும் மஹாபெரியவாளும் சேர்ந்து மாற்றி எழுதி விட்டிர்கள்.

மஹாபெரியவா பாதுகைக்கு நான் வெள்ளியில் கவசம் செய்து போடுகிறேன் என்றான். நான் என்னுடைய இயலாமையை சொல்லிவிட்டேன். ஏற்கனவே ஒரு பக்தை அந்த பொறுப்பை தான் எடுத்து கொண்டு விட்டார். இன்னொரு சமயம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்..

சங்கரன் என்னை விடுவதாய் இல்லை.சரி உன் இஷ்டம் போல் செய் கவசம் மட்டும் வேண்டாம்.என்று சொல்லிவிட்டேன். சங்கரன் முடிவு செய்தது மஹாபெரியவாளுக்கு என்று ஒரு சிறிய அலமாரியும் மஹாபெரியவளை வைக்க ஒரு சிறிய மண்டபமும் செய்வதாக ஏற்றுக்கொண்டான்.

நான் யாரிடம் என்ன கேட்டேன். பாதுகை மட்டும்தான் எனக்கு வந்தது. ஆனால் நான் அந்தப்பாதுகைக்கு ஆசைப்பட்டது எல்லாம் நான் கேட்டா வந்தது? இல்லையே.! நான் ஆசைப்பட்டதெல்லாம் மஹாபெரியவா அனுகிரஹத்தால் தனி தானே இன்று அணி வகுத்து நிற்கின்றதே!.

சங்கரன் மஹாபெரியவாளின் பூஜை சாமான்கள் மற்றும் படங்களை வைத்துக்கொள்ள ஒரு சிறிய அலமாரியை வாங்கி விட்டான். அந்த அலமாரியின் மேல்தான் மஹாபெரியவா கோவில் கொண்டுள்ளார். சங்கரன் ஆசைப்பட்ட மஹாபெரியவா மண்டபம் இன்னும் அவனுக்கு கிடைக்க விலை. மண்டபமும் வந்தால் அது கோவிலாகவே மாறிவிடும் என்பது நிச்சயம்.

இந்த சமயத்தில் மஹாபெரியவா பாதுகை வெளி கவசம் போட்டு இன்னும் வரவில்லையே என்று மஹாபெரியவாளிடம் கேட்டே.ன். நான் மஹாபெரியவாளிடம் கேட்ட நாள் மே மதம் ஒன்றாம் தேதி.

மஹாபெரியவா எனக்கு கொடுத்த பதில் "இன்னிக்கு சாயங்காலம் அனுஷம் நக்ஷ்த்ரம் ஆரம்பிக்கிறது. இன்னிக்கு நல்ல நாள். முகூர்த்த நாள் வேற. கவலை படாதே. இன்று உனக்கு பாதுகை கிடைக்கும் என்றார்.

மே மாதம் ஒன்றாம் தேதி மதியம் பதினோரு மணிக்கு வெள்ளி கவசம் கைங்கர்யத்தை ஏற்றுக்கொண்ட பக்தை என் இல்லத்திற்கு வந்தார். கையில் பெரிய பை இருந்தது. அதில் இருந்து மஹாபெரியவா பாதுகையை வெளியே எடுக்கிறர்.. மஹாபெரியவாளை போலவே அப்படியொரு தேஜஸாக இருந்தது அந்தப்பாதுகை..

மஹாபெரியவாளின் பாதுகையை வைக்க மின்னும் தங்க நிறத்தில் ஒரு மரத்தால் ஆனபலகை. மஹாபெரியவா சிறிய ஸ்டூலில் இருந்து பெரிய அலமாரிக்கு இடம் மாறினார். மஹாபெரியவாளுக்கு கீழேயே பாதுகையையும் அதற்கு மேல் ருத்ராக்ஷமும் வைக்கப்பட்டது.

அந்த படங்களை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். மஹாபெரியவாளையும் நமஸ்கரித்து கொள்ளுங்கள். இந்தக்கைங்கர்யத்தை ஏற்று மிகவும் சிறப்பாக செய்த திருமதி ரஞ்சனா பாலசுப்ரமணியம் அவர்களை மனதார வாழ்த்துங்கள்..

திருமதி ரஞ்சனா அவர்களின் மஹாபெரியவா அற்புத அனுபவங்களின் தொகுப்பு விரைவில் காணொளியாகவும் பதிவாகவும் வெளி வரப்போகிறது. இந்த பக்தையின் பக்தி என்பது நம் எல்லோருக்குமே ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறது. இவரது கணவர் பாலசுப்ரமணியம் பக்தியும் ஒரு மாற்று குறையாத பக்தி. இருவரது பக்தியும் சேர்ந்தால் அங்கே மஹாபெரியவா ப்ரத்யக்ஷமாக வந்து விடுகிறார்.

இவர்கள் இருவரும் எங்கள் பெயர் வேண்டாமே என்று என்னிடம் சொல்லிப்பார்த்தார்கள். உங்கள் கைங்கர்யத்திற்காக மட்டும் நான் உங்கள் பெயர்களை போடவில்லை. உங்கள் பக்தி மற்றவர்களையும் மஹாபெரியவா பக்தி செய்யவைக்கும் என்ற காரணத்தால் தான் உங்கள் பெயர்களை போடுறேன். ஆகவே எனக்கு அனுமதி அளியுங்கள் என்று கேட்டேன். பிறகு அரை குறை சம்மதத்துடன் சம்மதித்தார்கள்

ரஞ்சனா அவர்களின் இல்லத்தில் விரைவில் மங்கள ஓசை கேட்க மஹாபெரியவாளை பிரார்த்திப்போம்.

மஹாபெரியவளுக்கு மண்டபமும் ஒரு சிறிய அழகான மரத்தால் ஆன அலமாரியும் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொண்ட ராகவன் என்னும் சங்கரனுக்கும் மஹாபெரியவா நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page