Featured Posts

திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ண மங்கை


திவ்ய தேச திருத்தலம்

திருக்கண்ண மங்கை

திருக்கண்ணமங்கை கோவில் குளம்

திருக்கண்ணமங்கையில் என் அனுபவங்கள்

என் உடல் நல்ல நிலையில் இருக்கும்பொழுது மாத மாதம் வேலை விஷயமாக திருவாரூர் சென்று அங்கு சுற்றி இருக்கும் ஊர்களில் என்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு வெள்ளி சனிக்கிழமைகளில் திருவாரூரில் தங்கி விடுவேன்.. அப்பொழுது திருக்கண்ணமங்கை மிக அருகில் தான் இருக்கிறது. ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. திருக்கண்ணமங்கை.

சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு இரவு ஏழு மணிக்கு திருக்கண்ணமங்கை கோவிலுக்கு சென்று விடுவேன். அதுவும் பௌர்ணமி இரவு ஏழு மணிக்கு ஊரே அடங்கி இருக்கும்..கோவில் அமைந்துள்ள இடம் ஒரு கிராமம். எங்கோ தொலை தூரத்தில் வானொலியில் பாடும் அந்த காலத்து தமிழ் சினிமா பாடல்கள் மெல்லிய ஓசையில் என் காதுகளில் விழும்..

கோவில் குளத்தின் படிகளில் நான் மட்டுமே அமர்ந்திருப்பேன்.. நிலவின் பிம்பம் குளத்தின் நீரில் விழும் அழகே அழகு.. அசைந்தாடும் தென்றல் காற்று நிலவை தாலாட்டும் பொழுது குளத்து பிம்ப நிலவு மட்டுமல்ல. வானத்து நிலவும் சேர்ந்து ஆடும்.

அப்பொழுதெல்லாம் என்னையும் அறியாமல் வானத்தை ஒரு ஏக்கத்துடன் பார்ப்பேன். என்னுடைய ஆத்மா என்னிடம் சொல்லும். உனக்கும் வானத்திற்கும் பூர்வா ஜென்மத்தில் தொடர்பு இருந்தது என்று.

குளத்தின் படிகளை தாண்டி இருக்கும் அந்தக்காலத்து சிலைகளை ஒரு வாஞ்சையுடன் தழுவிக்கொள்வேன். இதை எழுதும் பொழுது கூட மறுபடியும் அந்த நாட்களுக்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கம் எனக்குள் தூண்டிக்கொண்டே இருக்கிறது..

எட்டு மணிக்கு கோவிலை அடைத்து விடுவார்கள். . ஆகவே கோவிலுக்குள் சென்று விட்ட தரிசனம் முடித்த கையோடு.பட்டாச்சாரியாருக்கு தட்டில் காணிக்கையாக நூறு ரூபாய் போட்டு விட்டு அவர் கொடுக்கும் பிரசாதம் தயிர் சாதம் மற்றும் புளியோதரை சாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பி விடுவேன்.

அமைவிடம் : கும்பகோணத்தில் இருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் திருவாரூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருக்கண்ணமங்கை.

ஸ்தல பெருமை: ஒரு ஸ்தலத்திற்கு இருக்கவேண்டிய ஏழு சிறப்புகளான விமானம் ஆரண்யம் மண்டபம் தீர்த்தம் ஷேத்திரம் நதி நகரம் ஆகிய ஏழு சிறப்புகள் இருப்பதால் இந்த ஸப்தம்ம்ருத ஷேத்திரம் என்று அழைக்க படுகிறது. தாயார் பெருமாளின் திருமணக்கோலத்தை நித்யம் கண்டுகளிக்க முப்பத்து முக்கோடி தேவர்கள் இங்கு வந்து தேனீக்கள் வடிவில் தாயார் சன்னதியின் வட புறத்தில் இன்றும் தேனீக்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐதிகம்.

பக்தவத்சல பெருமாள்

மூலவர்: பக்தவத்சல பெருமாள்

உற்சவர்: பெரும் புறக்கடல்

தாயார்: கண்ணமங்கை தாயார் - அபிஷேகவல்லி

பக்தவத்சல பெருமாள்

ஸ்தல விருக்ஷம்:மகிழ மரம்

தீர்த்தம்: தர்ஸன புஷ்காரனி

பழமை: மூவாயிரம் வருடங்களுக்கு முந்தையது.

கண்ணமங்கை தாயார்

புராண பெயர்: லட்சுமி வனம்

ஊர்: திருக்கண்ணமங்கை

மாவட்டம்: திருவாரூர்

மாநிலம்: தமிழ்நாடு

திருவிழாக்கள் : சித்ரா பௌர்ணமியை ஒட்டிய பத்து பத்து நாட்களும்

வழிபாட்டு நேரம்: காலை 8.00 மணி முதல் 12.00.வரை.

மாலை. .5.00 மணி முதல் ..830 வரை.

தொலை பேசி: +91-4366278288 – 9865834676

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square