Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34பாகம் -1 ப்ரியா சுதாகர் தம்பதியினர்


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34பாகம் -1

ப்ரியா சுதாகர் தம்பதியினர்

வாழ்க்கையில் பயம் நியாயமானதுதான்

பயமே வாழ்கையென்றால் அது ஒரு நரகம் தான்

உதயத்தில் இருந்து அஸ்தமனம் வரை

நொடிப்பொழுதும் பயமென்றால்

நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது இல்லையா

பெற்றோர்கள் ஒரு இடத்திலும் குழந்தைகள் ஒரு இடத்திலும் வாழும் வாழ்கையென்றால் அது குழந்தைகளை பொறுத்தவரை ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கைதான். வயதானாலும் பெற்றோர்கள் அருகில் இருந்தால் தேவையான நேரங்களில் அவர்களுடைய அனுபவம் கை கொடுக்கும்.

பெற்றோர்களும் அருகில் இல்லை. என்ன தான் படிப்பிருந்தும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத நிலையில் நடப்பது எல்லாமே அமானுஷ்யம்தான். இரவில் படுத்தால் தூக்கம் வராது.. செய்யும். வேலைகளிலோ கவனம் இருக்காது..

பிரச்சனைகள் நம்மை வீழ்த்தாது. பிரச்னைளினால் உண்டாகும் பயமே நம்மை வீழ்த்தும். ஆசாபாசங்கள் உணர்வுகள் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் அப்படியே அத்துவனக்காட்டில் விட்டுவிட்டு சம்பாதிக்கிறேன் என்ற பெயரில் அவர்களையும் கஷ்டங்களுக்கு ஆளாக்கிக்கொண்டு பெற்றோர்களையும் தவிக்க விடும் நிலைமை தான் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை.

ஆனால் இந்த பிரியா சுதாகர் இளம் தம்பதியினர் சற்றே வித்தியாசாமானவர்கள்.. அவர்களும் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டு பெற்றோர்களையும் தவிக்க விடாமல் பார்த்து கொள்கின்றனர்..

வெளி நாட்டில் வாழ்ந்தாலும் மேல் நாட்டு நாகரீகத்தில் மூழ்கி விடாமல் தாய் மண்ணில் கால் ஊன்றி வாழ்க்கையை மட்டும் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..குடும்பம் என்பது மனைவி கணவருக்கு அடங்கிப்போவதோ அல்லது கணவர் மனைவிக்கு அடங்கிப்போவதோ கிடையாது. என்ற உண்மையை நன்கு புரிந்து கொண்டு கணவன் மனைவி இருவரும் கை கோர்த்து வாழ்வதுதான் வாழ்க்கை. என்ற தத்துவத்தை புரிந்து கொண்டு வாழும் தம்பதியினர் சுதாகர் ப்ரியா.

இந்த தத்துவத்திற்கு ஏற்ப பரஸ்பரம் சிநேக பாவத்துடன் நல்ல தம்பதிக்கு ஒரு எடுத்து காட்டாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.. இவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் பரிசாக இறைவன் ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் கொடுத்து விட்டார். குழந்தைகள் இருவரும் பள்ளியில் படித்து கொண்டிருக்கின்றனர்..

இருபதாம் நூற்றாண்டின் பெண் என்றால் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று தான். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பெண் இப்படியும் வாழலாம் என்பதற்கு எடுத்து காட்டாக வாழ்ந்துகொண்டிருக்கும் ப்ரியா. இறை பக்தி கொண்ட ஒரு பெண்.. சிலபேரை பார்த்தவுடன் நம்முடைய மனதில் ஒரு அபிப்ராயம் தோன்றும் அல்லவா?

அப்படி எனக்கும் காணொளியில் பார்த்தபொழுது தோன்றியது..இறைவனே குடியிருப்பானோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது.அப்படியொரு தெய்வீக தோற்றம் மட்டுமல்ல. பேச்சில் ஒரு நிதானம் வரையறுக்கப்பட்ட பேச்சு, சொன்ன சொல்லை காப்பாற்றும் மனப்பான்மை, மொத்தத்தில் ஒரு அறுபது வயது பெண்மணிக்கு உள்ள ஞானத்தை நான் பார்த்தேன்.

ப்ரியா. அவர்களின் கணவர் வீட்டில் பார்த்த பிள்ளயா இல்லை ப்ரியாவிற்காக பிறந்தவரா ? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏன் தெரியுமா? பேச்சில் அப்படியொரு பணிவு.மூத்தவர்களுக்கு மரியாதை, நியாயம் தவறாமை அடுத்தவர்கள் மேல் காட்டும் கரிசனம் குழந்தைகளிடம் அன்பு காட்டுதல் இது போன்ற பல நல்ல குணங்களை நான் சுதாகரிடத்தில் கண்டேன்..

மேல் நாட்டில் வாழ்ந்து கொண்டு செய்யும் கெட்ட பழக்கங்களுக்கெல்லாம் சமுதாயமும் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் எந்த கெட்டபழக்கமும் இல்லாமல் தாம்பத்யத்தை ஒரு கோவிலாக பாவிக்கும் இளைஞர் தான் சுதாகர்..

கையளவு உள்ளத்தை கொடுத்து விட்டு

கடலளவு மனசை கொடுத்த இறைவன்

கொடியவனா?

சுதாகர் பிரியா இருவரும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தும் அழகு காண்பவர்கள் மனதை கொள்ளை கொண்டு விடும்... இருவருமே சம்பாதித்து கை நிறைய செலவழிக்க பணம் இருந்த போதும் தங்களுக்கென்று ஓர் ஒழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தேவையான செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையற்ற செலவுகளை வேண்டாம் என்று ஒதுக்குவதும் ஐம்பது அறுபது வயதுக்காரர்கள் அனுபவத்தில் நடத்தும் குடும்பப்பாங்கு. என்னை வியக்க வைத்தது.

ஆனால் இந்த இளம் குழந்தைகளுக்கு அந்த அறுபது வயது ஞானம் எப்படி வந்தது.. எனக்கு புரியவில்லை. உண்மையிலேயே நான.நல்ல ஆத்மாக்களை பார்த்தால் நம்முடைய ஆத்மா குதூகலிப்பதில் தவறில்லையே? என்னுடைய ஆத்மாவும் சந்தோஷத்தில் மிதந்தது..

ஒரு பெண்ணிற்கு உள்ள அத்தனை நல்ல குணங்களும் ஒரு ஆண் மகனுக்கு உரிய அத்தனை நல்ல குணங்களும் இந்த தம்பதியினரிடையே அமைந்துள்ளது.

கடல் அளவு நல்ல குணங்கள்

ஒரு உடலுக்குள் கட்டுப்பட்டு நிற்குமா

நிற்கிறதே!.

வாழ்கையென்றால் ஆயிரம் இருக்கும். அந்த ஆயிரம் இவர்களையும் விட்டுவைக்கவில்லை. இருந்தும் தங்களுடைய ஒழுக்கத்தில் இருந்து இம்மி பிசகாமல் வாழ்ந்துகொண்டிருந்த காரணத்தால்தான் இறைவனும் இவர்களுடனேயே வாழ்ந்து கரையேற்றி விடுகிறான்.

இந்த தம்பதியினரின் வாழ்க்கை முறை இதே போல் இறுதி வரை சென்று கொண்டிருந்தால் நிச்சயம் சமூகம் ஒரு நாள் சொல்லும்.

இவர்கள் இருவரும் வெற்றித்தம்பதியினரின்

நெற்றி திலகங்களோ என்று.

கலி காலத்தில் மனிதனாகப்பிறந்து விட்டால் கலியன் தாகத்திற்கும் ஆளாகித்தான் வாழவேண்டும்.இந்த தம்பதியினரும் அத்தனை தாகத்திற்கு ஆளாகித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கலியின் தாக்கம் இவர்களையும் விட்டு வைக்கவில்லை. தாக்கியது..

இருவர் மனதும் இவர்களிடம் கேட்டிருக்க வேண்டும்.. இதுவரை என்ன சாதித்தாய் ? என்று. பயம் கவ்விக்கொண்டிருக்க வேண்டும்.. வெளி நாட்டில் ஒரு தொழில் தொடங்கலாம் என்று. இந்த வயதில் தானே துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியும். துணிச்சலான முடிவுகளை எடுத்து ஒரு தொழிலை தொடங்கினார்கள்.

தொழில் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஒரு கவனம். தங்களுடைய எதிர்காலம் குழந்தைகளின் எதிர்காலம் மறு கவனம் பொருளாதார மேன்மை. பொருளாதார மேன்மையை கணவர் சுதாகரும் குழந்தைகளின் எதிர் காலத்தை மனைவி ப்ரியாவும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்தார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனைவி ப்ரியா தான் செய்து கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

இங்குதான் விதி விளையாட ஆரம்பித்தது. சரியான திசையில் சென்று கொண்டிருந்த தொழில் சற்றே திசை மாற ஆரம்பித்தது. சேமிப்பு அனைத்தும் தொழிலில் முதலீடு செய்தாகி விட்டது.மனைவி வேலையை ராஜினாமா செய்து விட்டதால் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

நினைத்து பாருங்கள். பெற்றோர்கள் இந்தியாவில். இவர்கள் வெளி நாட்டில், சக மனிதன் சறுக்கி விழுந்தால் கை கொட்டி சிரிக்கும் சமுதாயம்.. அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதில் இல்லை. மனதில் குழப்பம். பயம்.அடுத்த அடி எங்கு வைப்பது என்று தெரியவில்லை.

இருவரது பெற்றோர்களும் அதிர்ந்து போனார்கள். உடனே வீட்டில் .பெரியவர்கள் ஜாதக பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.. ஜாதகம் ஆருடம் கைரேகை என் கணிதம் போன்ற எல்லா வழிகளிலும் சென்று இந்த இரு குழந்தைகளின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முயன்றார்கள். இந்த முயற்ச்சியின் தொடர்ச்சியாக என்னுடைய நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி என்னை பார்க்க வந்தார்கள்..

என்னுடைய வீட்டிற்கு ப்ரியாவின் பெற்றோர்கள் வந்தார்கள். நீங்கள் இத்தனை நேரம் படித்த அனைத்தையும் அவர்கள் நடையில் என்னிடம் சொன்னார்கள்..

இவர்கள் வருவதற்கு முன் ஒரு நிமிடம் நான் தினம் வணங்கும் மஹாபெரியவா முன் நின்று தியானம் செய்தேன்..இவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது.. என்ன சொன்னால் இவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு வரும் வரை தாக்குப்பிடித்து நிற்பார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்று எனக்குள் நானே யோசித்தேன். அவர்கள் சூழ்நிலையில் நான் சில நொடிகள் வாழ்ந்து பார்த்தேன்.. அவர்களின் பிரச்னையின் ஆழமும் அடிநாதமும் எனக்கு புரிந்தது.

எனக்கு கைரேகை தெரியாது எண் கணிதம் என்னால் எண்ணி பார்க்கக்கூட முடியாது ஜாதகம் எல்லா கட்டங்களிலும் எனக்கு தெரிந்த ஒரே பிரபஞ்ச கிரஹம் மஹாபெரியவா தான். இவர்கள் பிரச்னையில் வாழ்ந்து பார்த்தேன்.. அவர்கள் சொல்வதையும் கேட்டேன்.எனக்குள் நானே முடிவு செய்து கொண்டேன்

மஹாபெரியவா பாதங்களை பிடித்தபிறகு,

நடந்ததை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்

நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மடையன்

வருவதை எதிர்கொண்டு வாழ்வோம் என்ற எண்ணமே