பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-048

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-048
பிரதி புதன் கிழமை தோறும்
திருமதி கோகிலா சுப்பையன்
திருமதி கோகிலா சுப்பையன் கோவையை சேர்ந்த அம்மையார். கோவை என்றாலே நமக்கு தெரிந்ததெல்லாம் நூல் நூற்பு ஆலைகளும் இரும்பை உருக்கி வேலை செய்யும் பௌண்டரி ஆலைகளும் தான் .
இந்த அம்மையாரின் கணவரும் கோவைக்கு அருகில் காரமடை என்னும் சிற்றூரில் ஒரு பௌண்டரி வைத்திருக்கிறார்கள்..கல்கத்தாவில் இருந்து இரும்பு வாங்கி இங்கு உருக்கி மற்ற ஆலைகளுக்கு வேண்டிய பொருட்களை செய்து தருவது வழக்கம்.
ஒரு முறை ஒரு தவறான தகவலால் மத்திய அரசாங்கத்தின் ஒரு இலாக்கா இவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புகிறது நீங்கள் இரும்பை உருக்கி எதுவும் செய்யாமல் அப்படியே விற்று விடுவாகக உங்கள் மேல் புகார் வந்திருக்கிறது. உங்கள் லைசென்ஸை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டிருக்குந்தார்கள்.
அம்மையார் கோகிலாவும் கணவரும் செய்வதறியாது விழித்தனர். உடனே காஞ்சி விரைந்தனர். அங்கு மஹாபெரியவாளை பார்த்தனர். மஹாபெரியவாளும் ஆசிர்வதித்தார். அதுவே ஒரு அற்புதநிகழ்வு.
மஹாபெரியவா அன்று ஆசிர்வதித்தார். இன்று வரை அந்த நோட்டீஸ் என்னானது என்று தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகி விட்டது.
அற்புதம் -2
ஒரு முறை மஹாபெரியவா வட நாட்டில் முகாம் இட்டிருந்தார்.அங்கு சென்று தரிசிக்க தம்பதிகள் இருவரும் கிளம்பி விட்டார்கள். அங்கு ஏராளமான கூட்டம் .
கோகிலாவின் கணவருக்கு புகைப்படம் எடுக்கும் பழக்கம். எங்கு சென்றாலும் ஒரு கேமராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு கிளம்பி விடுவார். இந்த முகாமில் மஹாபெரியவா ஸ்னானம் செய்து விட்டு மேலிருந்து ஒரு படி வழியாக இறங்கி கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து சுப்பையன் அவர்கள் பிளாஷ் போட்டு ஒரு புகைப்படம் எடுத்து விட்டார். அந்த பிளாஷ் வெளிச்சம் மஹாபெரியவா முகத்தில் மின்னலை போல அடிக்க மஹாபெரியவா ஒரு அசைவின்றி இவரையே பார்த்தார். அங்கு இருந்தவர்கள் எல்லோருமே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தனர்..
மஹாபெரியவா ஒன்றும் பேசவில்லை.ஆனால் நடந்தது என்ன தெரியுமா? மறு நாள் காலை அவருடைய பெட்டி களவு போய் திரும்பவும் கிடைத்து விட்டது. அந்த பெட்டியில் இருந்த வைர வளையல்கள் பணம் விமான டிக்கெட் எல்லாமே இருந்தது. கேமராவை தவிர. இது தண்டனையா? இல்லை ஆசிர்வாதமா? இந்த காணொளியை காணுங்கள்.
இது போல பல அற்புதங்களை உள்ளடைக்கியதுதான் இந்த காணொளி. இந்த காணொளியில். மஹாபெரியவா நினைத்தாலே நடந்து விடும் என்பதற்கு ஏகப்பட்ட சான்றுகள்.. காலம் தாழ்த்தாதீர்கள். விஸ்வரூப தரிசனத்தை காணுங்கள்.
https://www.youtube.com/watch?v=i68tktk1aV4&t=66s
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்