Featured Posts

குருப்புகழ்


பெரியவா சரணம் தவத்திரு அருணகிரிநாதர் செந்தூர் வேலனாம், ஞானஸ்கந்தன், தமிழ்கடவுளான முருகப்பெருமானை நாகப்பட்டிணத் திருத்தலத்தில் உறைவோனைப் பாடிய திருப்புகழினுடைய சந்தத்திலே அமைந்த்ஃ இந்த குருப்புகழினை இன்றைய தினம்.பகிரும் வேளையில் இனிய ஹேவிளம்பியின் சித்திரை முதல் நாளான இன்று முதல் அனைவதும் வளமோடி வாழ ப்ரார்த்த்கிப்போமே! சங்கரம் போற்றி! ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…

#குருப்புகழ் “தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான” ......... பாடல் ......... படுமா வலியே உறுமூ வினையா லணைவா தமென …. அறியாமல் மனமே விடுசூ ழிருளா யுளவாழ் நிலையே சுகமென ...... உழலாமல் விரைவா தமொடு இருளா கிடவே நிறைமா யுநிலை …… மாறிடவே நினைவே யுனதா யுளதாய் வரமாய் அருளே பொழிவா ….. யருளாளா கதியா யுனையே யடைவோர் நிலையே இனிதா கிடவே …. தொழுவேனே சுரர்பூ பதியே குருவா யெமையே குளிர்வா வியதாய் …. காத்திடவே இறைவா மறைமா’ தவமே வடிவே நிறைவா யெமையே ….. ஆள்வாயே வழுவா நிலையா லருள்வே தமுமாய் திருகாஞ் சியிலே …… யுறைவோனே! பதப் பொருள்: படு மாவலி – தொடரும் இன்னல்கள் உறு மூவினையால் – நம் முன் சென்ம பாவ வினைகளால் விரைவாதமொடு – வேகமாகப் பரவுகின்ற தீமைகளாலே நிறை மாயு நிலை – நிறைவாக இருக்க வேண்டிய சுகங்கள் காணாமற் போகும் நிலை சுரர்பூ பதியே – பரமேஸ்வரனே (பொதுவாக தேவர்களின் அரசன் எனும் பொருள் தருகின்ற பதத்தினை இங்கே சற்று வித்தியாசமாக, தேவர்களுக்கு ஒரு துன்பம் வரும்போதெல்லாம் அவர்களைக் காத்தருளும் வேதத்தேவனான பரமேஸ்வரனே என பொருள்பதிய முயற்சி செய்துள்ளேன்) குளிர்வா வியதாய் – குளிர்ச்சி தரக்கூடிய நீர் நிலை உயிர் காக்கும் அமிர்தமாகவும் இருப்பது போலே வழுவா நிலையா லருள்வே தமுமாய் – வேதமும் ஸ்ரீசரணாளும் ஒன்று என்பர். வேதமானது தர்மம் வழுவாதவரையிலும் நமை வாழ்வாங்கு வாழ்விக்குமாம். அப்படியாக தர்ம நியாயத்துக்கு உட்பட்டவர்களை என்றுமே கைவிடமாட்டார் நம் ஸ்ரீசரணாள். சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்! ஸ்ரீசரணாளோட கமலபாதங்களை எண்ணிப் பாருங்களேன்… அழகான பாதங்களை இன்றைய நாளிலே நினைந்து ஒரு குருப்புகழ் கொண்டு போற்றி நமஸ்கரிக்கையில், எல்லோரும் நலமாக வாழ அருள் புரியுங்கள் ஸ்வாமி என்பதாக ப்ரார்த்திப்போமே! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts