திவ்ய தேச திருத்தலம் கபிஸ்தலம் கஜேந்தரவரத பெருமாள் கோவில்
திவ்ய தேச திருத்தலம்
கபிஸ்தலம்
கஜேந்தரவரத பெருமாள் கோவில்

கஜேந்தரவரத பெருமாள் தம்பதி சமேதராய்
அமைவிடம் : தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து பதினைந்தாவது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மூலவர்: இங்கு கஜேந்திர வரதப்பெருமாள் ஆதிமூலம் என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி சயனித்து காட்சி கொடுக்கிறார்.
தாயார்: இங்கு தாயார் ரமாமணி வள்ளி தாயார் என்றும் பொற்றாமரையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
விமானம்: ககனா க்ரித விமானம்

கபிஸ்தலம் கோவிலின் முகப்பு தோற்றம்
ஸ்தல விருக்ஷம் : மகிழம்பூ மரம்
தீர்த்தம்: கஜேந்திர புஷ்காரனி தீர்த்தம் கபில தீர்த்தம்
திரு விழா: ஆடி பௌர்ணமி அன்று நடக்கும் கஜேந்திர மோக்ஷம் லீலை
வைகாசி விசாக தேர் திரு விழா பிரும்மோட்சவம் இங்கு மிகவும் பிரசித்தம்

கஜேந்தரவரதர் சயன கோலத்தில்
ஸ்தல வரலாறு : கபி என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு.ஸ்ரீ ஆஞ்சனேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார். ஆகவே இந்த ஸ்தலம் கபிஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு சமயம் இந்திர யுன்னன் என்னும் மிக சிறந்த விஷ்ணு பக்தர் இங்கு அமர்ந்து தவம் செய்து கொண்டு இருந்தார் . அப்பொழுது அங்கே துர்வாச முனிவர் வந்தார். அரசன் ஆழ்ந்த தவத்தில் இருந்த காரணத்தால் முனிவரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட முனிவர் நீ யானையாக பிறக்க கடவது என்று சாபம் இட்டார்.
பிறகு தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட மன்னனுக்கு நீ யானைகளின் அரசனாகப்பிறந்து பிறகு திருமால் மூலம் சாப விமோச்சனம் அடைவார் என்று முனிவர் சொன்னார். பிறகு ஒரு குளத்தில் முதலையுடன் போராடி திருமால் வந்து காப்பாற்றிய வரலாறு நமக்கு தெரிந்த நிகழ்வு தான்.
பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களில் கபிஸ்தலமும் ஒன்று.

கஜேந்தரன் யானையை முதலையிடம் இருந்து பெருமாள் ரக்ஷிக்கும் காட்சி
பிரார்த்தனைகள்: இங்கு நாள்பட்ட நோய்கள் குணமாகவும் உறவுகளின் பிரிவு , குழந்தைகளின் படிப்பு அலுவலகங்களில் உத்யோக உயர்வு நீண்ட நாள் கடன் பிரச்சனைகள் கணவன் மனைவிக்கு இதய அன்னியோன்யம் ஆகிய எல்லா பிரார்த்தனைகளுக்கும் இங்கே நிரந்தர தீர்வு கிடைக்கும்.
நேர்த்திக்கடன் : உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் தயிர் சாதம் மற்றும் புளியோதரை செய்து பெருமாள் தாயாருக்கு நெய்வேத்தியம் செய்யலாம்.பக்தர்களுக்கு விநியோகமும் செய்யலாம் உங்கள் பிரார்த்தனைகள் இனிதே நிறைவேறி பயணம் மகிழ்ச்சியுடன் அமைய நான் சர்வமும் சகலமும் கொண்ட மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்வோம்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்