top of page
Featured Posts

ஸ்ரீகுருகானம் - பரத அபிநயம்.


ஸ்ரீகுருகானம் - பரத அபிநயம்.

https://www.youtube.com/watch?v=_413znMXioc&feature=youtu.be

Mahaperiyava Stuthi | Kanchi Nagar Veedhiyile

www.youtube.com

Lyrics: Shri. Saanu Puthiran Translations: Shri. Puducode Ramachandra Iyer Mridangam: Bhargav Raguraman Vocal: Vivek Sivaraman Violin: Shreyas Ravishankar Da.

சங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தன்று ஆரிசோனா மாகாணத்திலே நடைபெற்ற ஸ்ரீமஹாகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக வைபவ கலை நிகழ்ச்சிகளிலே நம் உம்மாச்சீ ஸ்மரணையும் அமைந்திருப்பது விசேஷமல்லவோ! அவ்யாஜ கருணாமூர்த்தியின் கருணாகடாக்ஷத்திலே எழுதப்பெற்ற " காஞ்சி நகர் வீதியிலே..." கானத்திற்கு அபினயத்துடனாக ஒரு குரு ஸ்மரணை. பெரியவான்னு உச்சரித்தால் நேஷனல் இண்டெகரேஷன் இல்லே... யுனிவர்சல் இண்டெகரேஷன் தான் என்பதற்கு ஒரு சான்று. தமிழ்நாட்டில் சென்னையில் வசிக்கும் இந்தப் பித்துக்குளி ஸ்மரிச்சு எழுதின கானத்திற்கு கர்நாடகத்திலே பெங்களூருவில் வசிக்கும் அன்புள்ளம் Puducode Rama Iyer Ramachander ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலே ஆரிசோனாவிலே வசிக்கும் Miruthula Jegadesan மற்றும் செல்வங்கள் Bhargav Raghuraman, Shreyas Ravishankar, Vivek Sivaraman ஆகியோர்கள் தாளமிட்டுப் பாட, அபுச் சகோதரன் Raghu Pradeep Narayanan அழகுற பாடலின் பொருளை அங்குன்குழுமியிருந்த ஆயிரமாயிரம்.மனங்களிலே விதைக்க... அத்புதமான வைபவம்... குரு ஸ்மரணை... நீங்களும் கண்டு இன்புற்று, செல்வங்களை வாழ்த்துங்களேன். பெரியவா கருணையிலே இந்தக் குழு நம் பாரதத்திருநாடிலே ஓர் நாள் நிச்சயமாக குருஸ்மதணைதனை எல்லோரும் கண்டுகளித்து இன்புறுமாறு ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக நடக்க நம் அனைவருடைய பிரார்த்தனைகளும் பலனளிக்கட்டும். சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம்.

என்றும் உங்கள் சாணு புத்திரன்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page