top of page
Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -II-ப்ரியா சுதாகர் தம்பதியினர்


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34

பாகம் -II

ப்ரியா சுதாகர் தம்பதியினர்

பிரதி திங்கட்கிழமை தோறும்

இவர்கள் ஒரு பாதையை தேடவில்லை

மஹாபெரியவா போட்டுக்கொடுத்த பாதையில்

மஹாபெரியவா கை விரல்களை பிடித்து கொண்டு

வாழ்க்கையில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்

சென்ற பதிவில் நான் குறிப்பிட்ட மூன்று பிரார்த்தனைகளில் முதல் ப்ரார்தனையான ப்ரியாவிற்கு வேலை என்ற பிரார்த்தனைக்கு நான் மஹாபெரியவா முன் வைத்த முதல் பிரார்த்தனை.

அதற்கு மஹாபெரியவா சொன்ன பதில், நான் பிரியவாவிற்கு சொன்ன புத்திமதிகள், நான் சொன்ன உறுதி மொழிகளுக்கு மஹாபெரியவா தன்னுடைய அற்புதத்தால் எப்படி வலு சேர்த்தார்.? இறுதியில் எப்படி வேலை கிடைத்தது.. எதிர்பார்த்ததை விட எவ்வளவு பெரிய வேலை கிடைத்தது.. என்பது தான் இதில் அற்புதம்

எதிர்பார்த்த சம்பளத்தை விட மனது கொள்ளாத அளவுக்கு என்ன சம்பளம் கிடைத்தது... வாழ்க்கையில் பயம் போவதற்கு இந்த வேலை எப்படி அஸ்திவாரமாக இருந்தது. என்பதை எல்லாம் இந்த பதிவில் அனுபவிப்போம்.

ப்ரியாவின் பெற்றோர்களிடம் பேசி தைரியம் சொல்லி அனுப்பிவிட்டு நான் என்னுடைய அன்றாட அனுஷ்டானங்களை கவனிக்க தொடங்கினேன்... பிறகு அன்று செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, இரவு மஹாபெரியவாளை சேவித்து விட்டு படுக்க சென்று விட்டேன்.

இரவு முழுவதும் எனக்கு உறக்கம் வரவில்லை..ப்ரியா சுதாகர் அவர்களின் பிரச்சனைகள் என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.. அடுத்த நாள் மஹாபெரியவாளிடம் இவர்களுக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனைகளுக்கு எனக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன்..எனக்கு இந்த சந்திப்பு ஒரு புது அனுபவமாக இருந்தது..

வழக்கமாக ஒரு நாளைக்கு நான் சந்திக்கும் பக்தர்களின் பிரச்சனைகள் அழைப்புகள் அழைத்தவர்கள் பிரச்சனைகள் அவர்களின் ஏமாற்றங்கள் அவர்களின் சந்தோஷங்கள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு என்னுடைய மன நிலை பாதிக்காமல் ஒரு காலில் நிற்கமுடியாமல் நின்று கொண்டு வலது கையை மஹாபெரியவாளின் பாதங்களுக்கு அருகில் ஊன்றிக்கொண்டு அத்தனை பிரார்த்தனைகளையும் முடித்து கொண்டு ஒரு மன நிலை பாதிப்பும் இல்லாமல் வருவேன்..

ஆனால் ப்ரியா சுதாகர் அவர்களின் பிரச்சனைகள் என்னையும் மீறி என் மன நிலையை பாதித்தது.. கண்களில் கண்ணீர் வந்து விட்டது.. நான் அடுத்த நாள் மஹாபெரியவாளிடம் பேசும் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பிரார்த்தனைக்கு தயாரானேன்... எனக்கு ஏதோ பூர்வ ஜென்ம உறவின் வாசனை போலே இருந்தது.. போன ஜென்மத்தில் என்னுடைய குழந்தைகளாக இருந்திருப்பார்களோ என்னவோ? தெரியவில்லை.

அடுத்த நாள் காலை வழக்கம்போல் எழுந்திருந்து என்னுடைய அன்றைய கடமைகளை ஆரம்பித்து முடித்து விட்டு ப்ரார்தனைகளுக்காக மஹாபெரியவா முன் நின்றேன்.. அன்று மட்டும் என்னுடைய முதல் பிரார்த்தனையாக ப்ரியா சுதாகர் அவர்களின் பிரார்த்தனையை பின்வருமாறு சமர்பித்தேன்..

"என்னுடைய மஹாபெரியவா வந்தனத்தை செய்து விட்டு இந்த இளம் தம்பதிகளுக்கு செய்ய வேண்டிய பிரார்த்தனைகளை பின்வருமாறு சமர்பித்தேன்.

"பெரியவா, இன்னிக்கு என் மனதை மிகவும் பாதித்த வெளிநாட்டில் வாழும் இளம் தம்பதியினரின் கஷ்டங்களுக்கு உங்கள் ஆசிர்வாதங்களையும் ஒரு நல்ல தீர்வையும் வேண்டுகிறேன் பெரியவா.

பெரியவா: என்னடா சொல்லு

G.R.: பெரியவா நானும் எத்தனையோ என் சக ஆத்மாக்களின் பலவித கஷ்டங்களை காது கொடுத்து கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்குள் இதயம் அழும்.. ஒரு நாள் பூராவும் அந்த வருத்தத்திலேயே இருப்பேன்.

ஆனால் இந்த பிரியா சுதாகர் தம்பதியினரின் கஷ்டங்களை கேட்கும் பொழுது நான் அந்த கஷ்டங்கள் எனக்கே வந்தது போல் உணர்ந்தேன்.. கண்கள் கலங்கி விட்டன பெரியவா.. எனக்கு முப்பது வருஷத்துக்கு முன்னாலே நான் பட்ட கஷ்டங்கள் என் நினைவுக்கு வந்து விட்டது. பெரியவா. அப்பொழுது எனக்கும் யாருடைய ஆதரவும் இல்லை.. தனித்து விடப்பட்டேன்.. சொந்தங்கள். கேலி பேசினார்கள்.. ரத்தம் ஒழுகும் இதயத்தில் சமுதாயம் உப்பை தடவி மகிழ்ந்தது. .

இந்த இளம் குருத்துக்களை நினைத்து பார்த்தேன்.. கண்கள் கலங்கின. இதயமும் சேர்ந்து அழுதது பெரியவா.. இவர்கள் பிரச்சனைக்கு ஓர் தீர்வு வேணும் பெரியவா. முதலில் குரு பூஜைக்கு உத்தரவு கொடுங்கள் பெரியவா. பிறகு ப்ரியா பெண்ணுக்கு ஒரு நல்ல வேலை வாங்கித்தாங்கோ பெரியவா என்றேன்.

பெரியவா. நீ நாளையில் இருந்தே அவாளை என்னுடைய குரு பூஜையை ஆரம்பிக்க சொல்.அவளுக்கு சீக்கிரத்திலேயே நல்ல வேலை கிடைக்கும். அவா நன்னா இருப்பா. என்றார்..

G.R.:: எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பெரியவா.. அந்த குடும்பம் இந்த கஷ்டங்களில் இருந்து வெளியில் வர வேணும் பெரியவா நீங்கள் கூடவே இருந்து அனுக்கிரஹம் பண்ணுங்கோ பெரியவா என்றேன்..

நான் அன்றே ப்ரியாவையும் சுதாகரையும் அழைத்து மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்தரவு கொடுத்துட்டா.. நீங்கள் நாளையிலிருந்தே பூஜையை ஆரம்பித்து விடலாம்... முதலில் பிரியாவிற்கு வேலைக்கு மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டேன். நிச்சயம் வேலை நல்ல வேலை கிடைக்கும் என்றார். என்று அவர்களிடம் சொன்னேன்.. அவர்களுக்கும் மிகுந்த சந்தோஷம்..

அன்று வரை வேலைக்கு அப்ளை செய்வதோடு சரி. ஒரு அழைப்பும் வராது. ஆனால் பூஜை செய்ய ஆரம்பித்தவுடன் மனதில் ஒரு தைரியம் வந்து விட்டது என்று சொன்னார்கள். தொடர்ந்து செய்து வாருங்கள். என்று சொன்னேன்.

இந்த சமயத்தில் மஹாபெரியவா குரு பூஜை ஒவ்வொரு வாரமும் செய்து கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் ப்ரியா தன்னுடைய தகுதியை ஒரு தேர்வு எழுதி அதிகப்படுத்தி கொள்ள நினைத்தாள்.. அந்த தேர்வுக்கு பணம் நிறையச்செலவாகும். மேலும் தேர்வு பெருவது அவ்வள்வு சுலபமல்ல.. இந்த விஷயத்தை என்னிடம் சொல்லி மஹாபெரியவாளிடம் கேட்க சொன்னார்கள்.

நானும் மறு நாள் காலையில் பிரும்ம முகூர்த்த நேர பிரார்த்தனையின் பொழுது பின்வருமாறு கேட்டேன்.

G.R.: பெரியவா ப்ரியா இப்பொழுது ஒரு தேர்வு எழுத முயற்சிக்கிறாள்.. அதற்கு கொஞ்சம் செலவாகும்.தேர்வு பெறுவதும் கஷ்டம். ஆனால் தேர்வு பெற்று விட்டால் வேலை இன்னும் கொஞ்சம் எளிதில் கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள். ப்ரியா தேர்வு எழுதலாமா பெரியவா? தேர்வு எழுதினால் பாஸ் செய்து விடுவாளா? கொஞ்சம் நீங்கள் சொன்னால் அதை அவர்களிடம் சொல்லிவிடுவேன் பெரியவா என்றேன்.

பெரியவா: அவளை தேர்வு எழுதச்சொல்லு. நிச்சயம் நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணுவா.. வேலையும் கிடைத்து விடும் என்றார்..

நானும் அவர்களை அழைத்து விவரங்களை சொல்லி பணம் கட்டி தேர்வு எழுதலாம் என்று மஹாபெரியவா சொல்லிவிட்டார்.. என்ற விவரங்களை சொன்னேன்.. அவர்களும் சரி மாமா இன்னிக்கே பணம் கட்டிவிடுகிறேன். என்று சொன்னார்கள்.

மஹாபெரியவா குரு பூஜை நடந்துகொண்டிருந்தது.. ப்ரியா பணமும் கட்டி தேர்வும் எழுதினாள்.. மஹாபெரியவா சொன்ன மாதிரியே நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தாள் ப்ரியா..

தன்னுடைய விண்ணபடிவத்தை புதிய தகுதியுடன் விண்ணப்பம் செய்ய ஆரம்பித்தாள். நேர் காணலுக்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன. ஒரு வங்கியில் தொலை பேசி வாயிலாக கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் ப்ரியா தேர்ச்சி அடைந்தாள்.. இன்னும் எத்தனையோ அற்புதங்கள் அரங்கேறின.. அவைகளை நீங்கள் காணொளியில் பார்த்து அவர்கள் வாயிலாகவே கேட்டு அனுபவியுங்கள். இருந்தாலும் ஒரு சில அற்புதங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

எட்டு வாரம் ஆகியும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. ப்ரியா தன்னுடைய நம்பிக்கையை இழந்தாள்.. இனிமேல் எனக்கு வேலை கிடைக்காது மாமா. நான் இனிமேல் பூஜை எல்லாம் செய்ய மாட்டேன் என்று கோபத்துடன் என்னிடம் சொன்னாள்...

நானும் இரண்டு நாட்களுக்கு மௌனமாக இருந்தேன்.. ஆனால் மஹாபெரியவாளிடம் என்னுடைய பிரார்த்தனை ப்ரியா சுதாகருக்காக தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது நான் பின்வருமாறு மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்தேன்..

"பெரியவா ப்ரியாவிற்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அவளுக்கு நம்பிக்கை போய் விட்டது. பெரியவா. அவளுக்கு ஏதாவது பண்ணுங்கோ பெரியவா என்றேன்.

பெரியவா சொன்னார். அவள் குழந்தை மாதிரிடா. எல்லாம் வேலை கிடைச்சப்புறம் நம்பிக்கை தானே வந்துடும்.என்றார்.

நானும் ப்ரியாவை அழைத்து உனக்கு நிச்சயம் வேலை கிடைத்து விடும். கவலைப்படாதே என்றேன்... அவள் சற்று சமாதானம் அடைந்தாள். அன்று பூஜையின் பொழுது மஹாபெரியவாளே அங்கு உட்கார்ந்திருப்பது போல நினைத்து கொண்டு பெரியவாளை ப்ரதக்ஷிணம் செய்து கொண்டிருக்கும் பொழுது தனக்குள் நினைத்துக்கொள்கிறாள். மஹாபெரியவாளை தலையில் ஒரு மலர் கிரீடத்துடன் கற்பனை செய்துகொண்டே ப்ரதக்ஷிணம் செய்கிறாள்..

பூஜை முடிந்தவுடன் மஹாபெரியவாளிடம் பேசுகிறாள்..பெரியவா நான் உங்களை மலர் கிரீடத்துடன் கற்பனை செய்தேன்.. அதே கிரீடத்துடன் இன்று எனக்கு இணைய தளத்தில் காட்சி கொடுத்தால் எனக்கு நிச்சயம் வேலை கிடைத்து விடும் என்று நான் முடிவு செய்து கொள்கிறேன் பெரியவா என்று சொன்னாள். சொல்லிவிட்டு இணைய தளத்தில் தேட ஆரம்பித்தாள் ப்ரியா..

சற்று நேரம் கழித்து கற்பனையில் கண்ட பெரியவா இணைய தளத்திலும் காட்சி கொடுத்து விட்டார்... மஹாபெரியவா ப்ரியாவை எங்கு அழைத்து சென்றார் தெரியுமா?. நான் முதலில் எழுதிக்கொண்டிருந்த இணைய தளமான Periyavaarul.wordpress.com.அழைத்து சென்றார்..

ஒவ்வொரு பதிவின் தலைப்பிலும் நன் ஒரு மகா பெரியவா படம் போடுவேன். அன்று நான் எழுதிய சிவபார்வதி குரு பூஜைஅற்புதங்களில் அவளுக்கு ப்ரியா போலவே வேலை கிடைக்காமல் வாழ்க்கையின் விளிம்பிற்கே சென்று விட்டாள் சிவா பார்வதி... ஒன்பதாவது வார பூஜை முடிந்தவுடன் அடுத்த நொடி அவளுக்கு வேலைக்கான கடிதம் வந்தது..

இந்த பதிவை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.. அந்த இணையதளத்தின் முகவரி. Periyavaarul.wordpress.com.. இன்று நான் எழுதிக்கொண்டிருக்கும் இணைய தளம் periyavaarul.com.

இந்த நிகழ்வு மஹாபெரியவா குரு பூஜைக்கு மஹாபெரியவா எனக்கு கொடுத்த அங்கீகாரம் என்று நிச்சயம் தெரியும்.. மேலும் நான் எழுதிய இணையதளத்திற்கு கூட்டிச்சென்றது, மஹாபெரியவா என் பக்திக்கு கொடுத்த சான்று..

பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும் என்னை பற்றி பக்தர்களுக்கும் பக்தர்களின் கஷ்டங்களை பற்றி எனக்கும் தெரியப்படுத்தி இருவரையும் மனதோடு மனதாக கலந்து விடுமாறு செய்து விடுகிறார் மஹாபெரியவா..

இப்படியே குரு பூஜையும் நாட்களும் கழிந்து கொண்டிருந்தன.. ப்ரியா என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். மாமா எனக்கு வேலை கிடைத்து விடும் அல்லவா ? என்று.. நான் அவளிடம் சொன்னேன். ப்ரியா நீ வேலைக்கு செல்வதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை கையில் வைத்து கொண்டு எதை தேர்ந்தெடுப்பது என்று திணரப்போகிறாய். என்று சொன்னேன்..

அவள் சொன்னால் மாமா ஒரு வேலைக்கே இங்கு தலை கீழாக நிற்க வேண்டியிருக்கிறது.. பல வேலைகள் ஒரு பேராசை மாமா என்றாள்.. நான் சொன்னேன் என் மனதிற்கு தோன்றுகிறது..

நீ ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை கையில் வைத்திருப்பாய் என்று சொன்னேன். அதைப்போலவே பல வேலைக்கான கடிதங்களை கையில் வைத்து கொண்டு திணறிக்கொண்டு இருந்தாள். கையில் வைத்துக்கொண்டிருக்கும் வேலைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து நல்ல சம்பளம் நல்ல எதிர்காலம் உள்ள வேலையை தேர்ந்தேடுத்து முடிவு செய்தாள்..

அடுத்த நாள் காலையில் முன்னூறு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் அந்த ஊருக்கு சென்றாள்.... செல்லும் வழி சரியாக தெரிந்து கொண்டு செல்வதற்காக GOOGLE. மேப்பில் வழியை தேட தன்னுடைய கைபேசியை திறந்தாள். அங்கு நெட்ஒர்க் கிடைக்கவில்லை. சற்றே மனம் பாதிக்கப்பட்டாள் ப்ரியா. சகுனம் சரியில்லையா என்று குழம்பினாள்..

இப்படி குழம்பிக்கொண்டிருக்கும் போது அவளுடைய கைபேசியில் ஒரு குறும் செய்தி வருகிறது. அந்த செய்தி என்னுடைய கைபேசியில் இருந்து அனுப்பப்பட்ட செய்தி. அந்த செய்தி கிடைத்தவுடன் நெட் ஒர்க் வந்து விட்டது என்பது தெரிந்தது. ப்ரியா பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்து வழக்கமான மன நிலைக்கு வந்தாள்..

இதில் ஒரு அமானுஷ்யம் என்னவென்றால் நான் எப்பொழுதுமே பிரியாவிற்கு குறும் செய்து அனுப்பும் வழக்கம் கிடையாது. ப்ரியா இந்த விஷயத்தை என்னிடம் சொன்னவுடன் நான் குழம்பிப்போனேன்..கைபேசியில் தேடினேன்.. நான் நிச்சயம் அனுப்பவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு ப்ரியாவிடம் சொன்னேன்.. இதுவும் மஹாபெரியவா அற்புதங்களில் ஒன்று. நேர்காணலுக்கு செல்லும் ப்ரியா எந்த விதத்திலும் மனதளவில் பாதிக்கூடாது என்று மஹாபெரியவாளே இந்த அற்புதத்தை செய்து இருக்கிறார்.. என்று சொன்னேன்..

இந்த அற்புதம் மஹாபெரியவா எல்லா ஆத்மாக்களுக்கும் சொல்லும் செய்தி குரு பூஜை அற்புதங்கள் அற்புதங்களையும் தாண்டி உங்களை தாங்கிப்பிடிக்கும் என்பது தான் அந்த செய்தி.. இதுவும் உங்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகளுக்கு ஒரு அழிக்க முடியாத சான்று...

நேர்காணலுக்கு சென்ற வங்கியில் எல்லா கேள்வுகளுக்கும் விடை சொல்லிவிட்டாள் ப்ரியா. ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லை.. நான் முன்பே சொல்லியிருந்தேன்.. மஹாபெரியவா உனக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து இருப்பார் என்று..

ப்ரியா மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். “பெரியவா இந்தக்கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்லுகிறீர்கள் என்று சொல்லிவிட்டு தன்னுடைய பதிலை சொல்லத்தொடங்கினாள். எப்படி சொன்னாளோ தெரியவில்லை.. வார்த்தைகள் பிரவாகமாக தெறித்து விழுந்தன. மஹாபெரியவா கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டார்... இந்த அற்புதத்தை ப்ரியாவே சொல்லுவாள் கேளுங்கள்.

ப்ரியா சுதாகர் காணொளி இந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி மஹாபெரியவா நூற்றி இருபத்தி ஐந்தாம் ஜெயந்தி விழா அன்று வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

ப்ரியா வேலையில் தேர்வாகி விட்டாள். . எல்லாம் நல்ல படியாக முடிந்தது.வேலைக்கு சேரும் நல்ல நாள் பார்க்கவேண்டும். நல்ல நாளும் பார்த்தாகி விட்டது. வேலையில் சேர வேண்டும்.

வாழ்க்கையில் விதி எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை தாக்கி விடும்.தாக்கிய பிறகுதான் நமக்கு தெரியும்.. அப்படி ஒரு விதியின் விளையாட்டு எதிர்பாராத .திசையில் இருந்து இவர்களை தாக்கி விட்டது.. ப்ரியா சுதாகர் இருவரும் மனம் கலங்கி விட்டார்கள்.

என்னை தொலை பேசியில் .அழைத்து விவரங்களை சொன்னார்கள். அவர்கள் தொலை பேசியில் என்னிடம் சொன்னதை என்னால் இங்கே குறிப்பிட முடியவில்லை.. அவர்களும் காணொளியில் தாங்கள் எதிர் கொண்ட பிரச்சனைகளை மட்டும் சொல்வார்கள்.பிரச்சனைகளின் விவரங்களை அவர்களால் சொல்ல இயலாது. இங்கு மஹாபெரியவாளின் அற்புதங்களை மட்டும் அனுபவிப்போம்.

இந்த விதியின் விளையாட்டை மஹாபெரியவா அற்புதம் எப்படி முறியடித்து பிரியாவிற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்தது என்பதை வரும் வாரத்தில் அனுபவிப்போம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page