Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-056


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-056

பிரதி செய்வாய்க்கிழமை தோறும்

இந்த பதிவு வேத ரக்ஷ்ணத்திற்கும் வேதத்திற்கும் மஹாபெரியவா கொடுத்த மரியாதையை பறை சாற்றும் ஒரு நிகழ்வு...அப்பொழுது மஹாபெரியவா வட நாட்டில் உள்ள மஹாகாவுன் என்னும் ஊரில் முஹாம் இட்டிருக்கிறார். அங்குள்ள பக்தர்களுக்கு அன்றாடம் தரிசனமும் ஆசிர்வாதமும் கொடுத்து உபன்யாசங்கள் போன்றவைகளை செய்து கொண்டிருந்தார்..

இதேசமயத்தில் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்பவர் வாஜபேய யாகம் செய்து விட்டு குடும்பத்துடன் மஹாபெரியவாளை தரிசனம் காண காஞ்சிக்கு வந்திருந்தார்..

வாஜபேய யாகம் என்றால் என்ன?

வாஜபேய யாகம் என்பது மிகவும் கடினமான யாகம்...கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஒரு யாகம் அது. அவ்வளவு சிரத்தையாக செய்யவேண்டும் என்பது விதி.

சாஸ்திரிகளின் குடும்பமே சேர்ந்து அந்த யாகத்தை செய்து முடித்தனர்..சாஸ்திரிகளுக்கு இன்னொரு பெயரும் உண்டு அவரை யாகாதி என்றும் அழைப்பார்கள். .நிறைய யாகம் செய்பவர்களை அந்தக்காலத்தில் யாகாதிகள் என்று அழைப்பார்கள்..

காஞ்சி மடத்தில் கைங்கர்யம் செய்பவர்கள் மஹாபெரியவா வட நாட்டில் யாத்திரையில் இருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்கள்.. உடனே சாஸ்திரிகள் குடும்பத்துடன் வடநாட்டில் உள்ள மஹாகாவுன் என்ற இடத்திற்கு புறப்படுகிறார்.

மஹாபெரியவா முகாமிட்டிருந்த இடத்திற்கு செல்கிறார் ராமகிருஷ்ண சாஸ்திரிகள்.. அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. சாஸ்திரிகள் அந்தக் முகாமிற்கு வெளியே நின்று கொண்டு கைங்கயம் செய்பவர் ஒருவரிடம் தான் வைத்திருப்பதை தெரிவிக்கிறார்.. அவரும் மஹாபெரியவாளிடம் சென்று செய்தியை சொல்கிறார்.

மஹாபெரியவா சற்று கோபத்துடன் அவரை உடனே திரும்பி போகச்சொல் என்று உத்தரவு இடுகிறார்... சாஸ்திரிகள் நினைத்தது மஹாபெரியவா தன்னை மிகப்பெரிய வரவேற்புடன் அழைப்பார் என்று.. ஆனால் நடந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது சாஸ்திரிகளுக்கு.. குடும்பமே திரும்ப தங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினர்.

அறையில் குடும்பமே அமர்ந்துகொண்டு தாங்கள் என்ன தவறு செய்தோம்..நமக்கே தெரியாமல் ஏதாவது செய்து விட்டோமா? மஹாபெரியவாளுக்கு எல்லாமே ஞான திருஷ்டியில் தெரிந்து விடும்..சாஸ்திரிகளுக்கும் அவர் மனைவிக்கும் கண்களில் கண்ணீர் தாரை தரையாக வருகிறது.

இருவரும் மனதை தேற்றிக்கொண்டு தங்கள் ஊருக்கு அடுத்த ரயிலை பிடித்து கிளம்பலாம் என்று முடிவு செய்தனர். அந்த சமயத்தில் அறை வாசலுக்கு வெளியே ஒரே மேள தாள சப்தம். கொம்பு ஊதுபவர்களும் யானைகளும் அங்கே அணி வகுத்து நிற்கின்றனர்.. செண்டூர் மகாராஜா ஒரு வெண் கொற்றக்குடையுடன் நின்று கொண்டிருக்கிறார்கள்..

உங்களை மஹாபெரியவா உடனே இந்த வாத்தியங்களை வாசித்து முகாமிற்கு அழைத்து வரச்சொன்னார். வாருங்கள் போகலாம் என்று குடும்பத்தையே அழைத்துக்கொண்டு சென்றனர்.

சாஸ்திரிகளும் அவர் குடும்பமும் மஹாபெரியவா முகாமை அடைந்தவுடன் அங்கு பூரண கும்ப மரியாதையை கொடுக்கப்பட்டது.. சாஸ்திரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதேசமயம் தலை கால் புரியவில்லை.

பிறகு மஹாபெரியவாளே விளக்கமும் கொடுக்கிறார்.. சாஸ்திரிகளே உங்களை சும்மா விளையாட்டுக்கு சற்று கோபத்துடன் திரும்பி போக போனேன். பயந்துட்டேளா என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்கிறார்.

சாஸ்திரிகளே உங்களுக்கு தெரியாதது இல்லை. வாஜபேய யாகம் என்பது லோகஷேமத்திற்கும் வேதம் தழைக்கவும் செய்யப்படுவது. இந்த யாகம் செய்வதற்கு மிகுந்த மன உறுதியும் ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் இருக்கவேண்டும்..

நீர் அதை செய்தீர்.. வேதத்தில் சொல்லிய படி நான் உங்களை மேல தாளங்களுடன் ஒரு ராஜா வரவேற்க பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்க வேண்டும். நான் சன்யாசியாகவே இருந்தாலும் உங்களை நமஸ்கரிக்க வேண்டும்.

இங்கு எல்லாமே இருக்கிறது. ஒரு வெண் கொற்றக்கொடை மட்டும்தான் இல்லாமல் இருந்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இங்கு சாமான்கள் போட்டு வைத்திருக்கும் அறையில் ஒரு வெண் கொற்ற கொடை இருந்தது. நான் உங்களை வரவேற்றேன். உண்மையில் ராஜாவே உங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்றவுடன் செண்டூர் மஹாராஜாவும் விழுந்து வணங்கினார்.

மஹாபெரியவா ஞானத்தின் உச்சியில் இருந்தாலும் அதை எப்பொழுதுமே ஒரு பொருட்டாக மதித்து இல்லை..மற்றவர்கள் ஞானத்தை உச்சியில் வைத்து பாராட்டும் குணம் மஹாபெரியவளிடம் இருந்தது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.

வாஜபேய யாகம் என்றால் என்ன? ஏதற்கு செய்வது? செய்தவர்களுக்கு என்ன மரியாதையை செய்ய வேண்டும்? அதை எப்படி செய்ய வேண்டும் ? வாஜபேய யாகம் செய்தவரை அரசரே விழுந்து வணங்க வேண்டும்.சன்யாசியாகவே இருந்தாலும் அவரும் அந்த வேத வித்தகருக்கு மரியாதையை செய்யவேண்டும் என்ற இத்தனை உண்மைகளை உலகத்திற்கு சொல்லிவிட்டார். ஒரு நிகழ்வின் மூலம் இத்தனை விஷயங்களும் விளக்கங்களுமா?

வேகத்திற்கு கொடுக்கவேண்டிய மரியாதை தவறாமல் கொடுப்பட்டது.. ஞானிகளையும் மற்றவர்கள் ஞானத்தையும் கொண்டாடுவது என்பது இறைவனுக்கே உண்டான கல்யாண குணங்களில் ஒன்று.. அப்படியானால் மஹாபெரியவா இறைவன் தானே? மீண்டும் இன்னொரு அற்புத சாரலுடன் சந்திப்போம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square