Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -III - ப்ரியா சுதாகர் தம்பதியினர்


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -III

பிரதி திங்கட்கிழமை தோறும்

ப்ரியா சுதாகர் தம்பதியினர்

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காது என்பார் நடந்து விடும்

எது எப்படி இருந்தாலும்

மஹாபெரியவா இருக்கும் வரை

நினைத்தது நடந்து விடும்.

சென்ற வாரம் ப்ரியா சுதாகர் வாழ்க்கையில் விளையாடிய விதியை பார்தோம்... இந்த வாரம் அந்த விதி எப்படிப்பட்டது.. எவ்வளவு ஆழமான ஆபத்துகளை விளைவிக்கக்கூடியது.. இந்த விதியை மஹாபெரியவா கையாண்ட விதம் எல்லாமே ஒரு இனிய அனுபவம் அற்புதம். இனி அந்த விதியை பற்றி பார்ப்போம்.

ஒரு முக்கியமான டாக்குமெண்ட்.. இந்த டாகுமெண்ட்டை ப்ரியா தேர்வு ஆகியிருக்கும் அலுவலகத்தில் கேட்காமல் இருக்க வேண்டுமே என்று அவர்கள் வேண்டிக்கொண்டார்கள்.. அந்த வங்கி இந்த முக்கியமான டாக்குமெண்டை கேட்டுவிட்டது என்று எனக்கு தெரியாது.. இந்த டாக்குமெண்டை கொடுக்காமலும் இருக்க முடியாது. அப்படியே கொடுத்து விட்டால் பிரியாவிற்கு வேலை என்பது கேள்விக்குறி ஆகி விடும்.

அடுத்த நாள் அந்த தம்பதியினர் என்னை தொடர்பு கொண்டார்கள்.அப்பொழுது தான் இந்த டாக்குமெண்ட் விஷயம் எனக்கு தெரியும். அவர்கள் இருவரும் பேசியதில் இருந்து நான் புரிந்து கொண்டது..

இங்கு தான் சுதாகர் மிகவும் பயத்தால் பீடிக்கப்பட்டார். ப்ரியாவிடம் அழுது விட்டார். "உன்னை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் என்னுடைய கெட்ட காலம் உன்னையும் குழந்தைகளையும் துரத்துகிறது..

என் விதி உன்னையும் குழந்தைகளையும் பாதித்து விட்டால் அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்று விடும். நான் எங்கயாவது போய் விடுகிறேன். நீங்களாவது நன்றாக இருங்கள்.என்று சொல்லிக்கொண்டே நெஞ்சு வெடித்து குமுறி அழுது விட்டார். சுதாகர் தலை சாய்ந்து அழுவதற்கு பிரியா தன்னுடைய தோள்களை கொடுத்தார் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நினைத்து பாருங்கள் தன்னுடைய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய ஆண் மகன் தன்னம்பிக்கை இழந்து துவண்டு வாழ்க்கையில் நிராயுத பணியாக நின்று விட்டால் யாரால் அந்த ஆண் மகனுக்கு ஆறுதல் சொல்ல முடியும்..

நடு இரவில் கடலில் சூறாவெளியில் சிக்கிய பாய்மர கப்பல் போல அவர்கள் வாழ்க்கை தத்தளிக்க தொடங்கியது.. கப்பலை செலுத்தும் மாலுமி கடலில் விழுந்து விட்டால் அந்தக்கப்பலை யார் கரை சேர்ப்பார்கள்?. சற்று கற்பனை செய்து பாருங்கள்..

குடும்பமே ஒருவரை ஒருவர் பயத்தால் கட்டிக்கொண்டு அடுத்த்து என்ன நடக்குமோ என்ற தவிக்கும் நிலைமையை என்னவென்று சொல்ல?.. வார்த்தைகளால் வடிக்கக்கூடிய நிகழ்வா இது.?

இத்தனை நாளும் சுதாகருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த ப்ரியாவும் சோகத்தில் மூழ்கினாள்.. சுருக்கமாக சொல்லப்போனால் வாழ்க்கை என்னும் வண்டி சக்கரத்தில் இரண்டில் ஒன்று பழுதடைந்தால் கூட வண்டி ஓரளவிற்கு நகரும். சக்கரங்கள் இரண்டுமே கழன்று வண்டி சாலையில் உட்கார்ந்து விட்டால் என்ன ஆவது.? வண்டியில் கரை சேர்க்க வேண்டிய குழந்தைகள்.

இருவரும் இப்படியொரு சூழலில் என்னை அழைத்தார்கள். தங்களுடைய நிலையை எடுத்து சொன்னார்கள். எனக்கு ஒன்று புரிந்தது.. தங்களுடைய கடைசி பிடியான மஹாபெரியவாளும் கையை விட்டு நழுவி கொண்டிருக்கிறாரா?

நிச்சயம் மஹாபெரியவா பிடியயை தளர்த்த மாட்டார். நாம் பயத்தினாலோ நம்பிக்கையின்மையினாலோ பிடியையை நாம் தளர்த்தினாலும் தளர்த்தவோம். ஆனால் மஹாபெரியவா என்றுமே அதை செய்ய மாட்டார்.

மஹாபெரியவாளே பலமுறை சொல்லியிருக்கிறா. ஒருவரை என் அருகில் அனுமதிப்பதற்கு முன்னால் பதினான்கு முறை சல்லடையில் சலித்த பிறகுதான் அனுமதிப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அருகில் அனுமதித்து தானும் ஆட்கொண்டு விட்டால் இந்தப்ரபஞ்சமே சொன்னால் கூட கேட்க மாட்டார். இறுதி வரை ஆட்கொண்டு விடுவார்... ஏன் தெரியுமா? மஹாபெரியவா மனிதரல்லவே. அவர் தெய்வமல்லவா? இந்த உண்மை இந்த சின்னங்சிறுசுகளுக்கு . தெரிய வாய்ப்பில்லையே. முதல் அனுபவமல்லவா. அவர்களை பயம் கவ்விக்கொண்டது நியாயம் தான்.

அவர்கள் என்னிடம் மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் மாமா. வேலை போவது மட்டுமல்ல. அதன் விளைவுகள் எத்தனையோ எங்களுக்கு தெரியாது. நீங்கள் எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றார்கள். நானும் தைரியமாக இருங்கள் என்று சொன்னேன்..

மஹாபெரியவா முன் நெய் தீபம் ஏற்றி வைத்து கண்ணை மூடி தியானம் செய்யுங்கள்.. உங்கள் உள்ளத்தில் இருக்கும் பயத்தையும் கவலைகளையும் மஹாபெரியவா முன் கொட்டி அழுது பேசுங்கள். நானும் இங்கு பிரார்த்தனை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு விடை பெற்றேன்.

அது மதிய நேரம். குளித்து விட்டு மஹாபெரியவா முன் விளக்கேற்றி வைத்து விட்டு கண்களை மூடி நின்று கொண்டிருந்தேன்.ஒரு இருபது நிமிடங்கள் நின்றிருப்பேன். என்னால் உட்கார முடியாது. ஆகவே நின்று கொண்டிருந்தேன்

இப்படி மதிய நேரத்தில் குளித்து விட்டு மஹாபெரியவா முன் நின்று கொண்டிருந்தால் "என்னாடா என்று பெரிவாளே பேசஆரம்பித்து விடுவார். அன்றும் அப்படிதான் என்னடா விஷயம் என்று ஆரம்பித்து விட்டார்.

நான் மஹாபெரியவாளிடம் அவர்களுக்காக என் பிரார்த்தனையை பின்வருமாறு சமரித்தேன்.

G.R.:"பெரியவா, பிரியா சுதாகர் இருவரும் சின்னஞ்சிறுசுகள். வாழ்க்கை பாடத்தை இப்பொழுதான் படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வளவு பெரிய சோதனைகள் வேண்டாமே. பிரியா நேர்காணலுக்கு செல்லும் பொழுது அவளுக்கு இன்டர்நெட் கிடைக்காமல் இருந்தபொழுது அவளுடைய மன நிலை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் அனுப்பிய மாதிரி அவளுக்கு ஒரு கூறும் செய்தி அனுப்பி அவள் மனதளவில் சோர்ந்து போகாமல் பார்த்து கொண்டீர்கள். அவளை இறுதி வரை கூடவே இருந்து கரையேற்ற வேண்டும் என்பதற்க்காக அவள் கேட்காமலேயே என்னென்னவோ செய்தீர்கள். அந்த சிறுசுகள் பாவம் பெரியவா.

அவர்கள் கொடுத்த அந்த டாக்குமெண்டால் அவர்களுக்கு ஒன்னும் ஆக வேண்டாம் பெரியவா.. தாய் பறவையை காணாமல் குஞ்சு பறவைகள் கூட்டிற்குள் நடுங்கிக்கொண்டே இருபது போலெ இருவரும் நடுக்கத்தில் இருக்கின்றனர்.

நீங்கள் நினைத்தால் நொடிபொழுது பெரியவா. கொஞ்சம் அந்த சின்னங்சிறுசுகளுக்கு கருணை காட்டுங்கள் பெரியவா.. எனக்கும் அது சந்தோஷமா இருக்கும். அவர்களுக்கு அனுகிரஹமும் ஆசிர்வாதங்களும் பண்ணுங்கள் பெரியவா என்று கண்ணீர் மல்க கேட்டேன்.

இவ்வளவு பேசியபிறகு மஹாபெரியவா என்னிடம் சொன்னார்.

பெரியவா: என்னடா நீ பெத்த பொண்ணு மாதிரி இப்படி கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்யரே.

G.R: ஆமாம் பெரியவா. நான் ஒரு பெண்ணை பெத்து அவளுக்காக வேண்டினால் நீங்கள் செய்யமாட்டேளா? அதுபோலத்தான் ப்ரியாவை என் பெண்ணா நினைத்து நான் உங்ககிட்டே வேண்டிக்கறேன். அவளுக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கோ பெரியவா என்றேன்.

பெரியவா: சரி போடா நீ கேட்டுத்தான் அவளுக்கு அனுக்கிரஹம் பண்ணனுமா? நான் தான் அவா கூடயே இருக்கேனேடா. அவா மாதிரியே உனக்கும் சந்தேகமா. ?

G.R:: இல்லைபெரியவா அவா ரெண்டுபேரும் அழுததை பார்த்து நான் பயந்து போய்ட்டேன்.

பெரியவா: அவாளுக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொல்லு.நான் இருக்கேன். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு சொல்லு. இன்னிக்கு மூன்று மணிக்கு அவளுக்கு ஒரு செய்தி வரும். அந்த செய்தி அவாளுக்கு சதோஷத்தையும் மன அமைதியும் தரும்.என்று சொன்னார்.. நானும் அவர்களிடம் இருந்து தகவல் வரும் என்று காத்திருந்தேன்.

நேரம் சரியாக மூன்று முப்பது மணி. ப்ரியாவிடம் இருந்து எனக்கு ஒரு தொலை அழைப்பு. அவள் சொன்ன விவரம் இதோ உங்களுக்காக.

"மாமா எனக்கு நான் தேர்வு ஆகி இருக்கும் வங்கியில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கு. அதன் சாராம்சம் இதுதான்.

எல்லா சோதனைகளும் முடிந்தது. காவல் துறை விசாரிப்பு முதல் C.I.D சோதனைகள் வரை எல்லாம் முடிந்து விட்டது.அடுத்து உங்கள் இப்போதைய விசாவை ரத்து செய்து விட்டு வங்கியின் சார்பில் ஒரு புதிய விசா வாங்க வேண்டும். நீங்கள் உங்கள் பழைய விசாவை கொடுத்து விட்டு எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று வந்த செய்தி சொல்லியது.

இவர்கள் பயந்து கொண்டிருந்த டாக்குமெண்ட் என்ன ஆனதென்று தெரியவில்லை. வங்கி அதிகாரிகள் எப்படி அந்த டாக்குமெண்டை பார்க்காமல் விட்டார்கள். அங்கு என்ன அதிசியம் நடந்தது. பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் ஒரு நாட்டிற்கு சென்று மஹாபெரியவா என்ன செய்தார். ஆனால் பிரார்த்தனை பலித்து விட்டது.

இது நடந்த பிறகு என் மனத்திரையி