மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-057

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-057
பிரதி செய்வாய்க்கிழமை தோறும்
இறைவன் இருக்கின்றான்
அவன் நினைத்தால் அசையாத அணு கூட அசையும்
பிரபஞ்சத்தின் தொடக்கமும் அவனே முடிவும் அவனே
கண்ணுக்கு தெரியும் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா
இதை மெய்ப்பிக்கும் ஒரு நிகழ்வு
நம்முடைய காஞ்சி மடத்தின் ஆஸ்தான சிற்பி கணபதி ஸ்தபதி என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று. பரம்பரை பரம்பரையாக செய்து வரும் இந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக ஒரிக்கையில் இருக்கும் மஹாபெரியவா மணி மண்டபம் ஒரு எடுத்து காட்டு.
கணபதி ஸ்தபதியின் சிற்பக்கலைக்கு கிடைத்த சரியான அங்கீகாரம் தான் ஆந்திர மாநிலத்தின் ஆஸ்தான சிற்பியாக நியமிக்கப்பட்டார். அப்பொழுது ஆந்திராவின் முதல்வராக இருந்த N.T.ராமராவ் இவரை ஆஸ்தான சிற்பியாக நியமித்து சகல மரியாதைகளையும் செய்தார், உங்களுக்கு தெரியுமா ஆந்திராவில் உள்ள ஹுசைன் சாகர் லேக்கில் உள்ள புத்தர் சிலையை கணபதி ஸ்தபதிதான் வடித்தார்.
ஒரு நாள் கணபதி ஸ்தபதி மஹாபெரியவாளை தரிசனம் செய்யும் பொருட்டு காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது மஹாபெரியவா என்ன கணபதி ஸ்தபதியாரே எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது தான் ஆந்திர அரசாங்கத்த்தின் ஆஸ்தான சிற்பியாக நியமிக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் வந்து வருவதாக மிகவும் சந்தோஷமாக சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்ட மஹாபெரியவா ஒரு சிலநிமிடங்கள் கண்ணை மூடி யோசித்தார், பிறகு கணபதி ஸ்தபதிக்கு ஒரு உத்தரவிட்டார். என்ன உத்தரவு தெரியுமா ?
பெரியவா :நீ உடனே அந்த வேலையை ராஜினாமா செய்து விடு என்பதுதான் அது.
மஹாபெரியவா ஒன்று சொல்லிவிட்டால் காரணம் கேட்க முடியுமா? பின்னால் நடக்கப்போவதை யாரறிவார்? மஹாபெரியவா ஒருவரே அறிவார்.
ஸ்தபதி: சரி பெரியவா நான் உடனே ஹைதெராபாத் கிளம்பி போய் ராஜினாமா செய்து விடுகிறேன் என்றார்.
பெரியவா: அதெல்லாம் வேண்டாம் இங்கிருந்தே தபாலில் அனுப்பிவை என்கிறார்.
ஸ்தபதி: அது அவ்வளவு மரியாதையாக இருக்காது பெரியவா :. நான் போய் சம்பந்தப்பட்ட அதிகாரியை பார்த்து என்னுடைய ராஜினாமாவை கொடுத்து விடுகிறேன் என்றார் ஸ்தபதி.
பெரியவா:: இதோ பார் நீங்கே போய் பார்க்கவேண்டிய அதிகாரி இங்கயே இருக்கிறார் இவரிடம் இங்கயே கொடுத்து விடு என்கிறார்.
அடுத்த சிலநாட்களில் ராமராவ் அரசாங்கம் சூழ்ச்சியால் கவிழ்ந்து விட்டது. ராமராவ் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். கணபதி ஸ்தபதி ராஜினாமா செய்யாமல் இருந்துருந்தால் என்ன பாவங்களும் பழி சொற்களும் வந்திருக்குமோ. மஹாபெரியவா காப்பாற்றி விட்டார்.
மூன்று காலங்களையும் உணர்ந்த பரமேஸ்வரன் அல்லவா மஹாபெரியவா. இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பமும் அவரே முடிவும் அவரே.
இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம்
சென்ற ஜென்மம் இந்த ஜென்மம் வரும் ஜென்மம்
சர்வத்தையும் சகலத்தையும் அறிந்த
பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா
நம்பினோர் கைவிடப்படார்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்