என் வாழ்வில் மஹாபெரியவா -060
என் வாழ்வில் மஹாபெரியவா -060
பிரதி வியாழன் தோறும்
அண்டம் தான் பிண்டம்
பிண்டம் தான் அண்டம்
பிரபஞ்சமே நாம்
நாமே பிரபஞ்சம்
பிரபஞ்சத்துடன் பேசுங்கள்
கேட்டது கிடைக்கும்
மஹாபெரியவாளே பிரபஞ்சம்
இந்த பதிவு தாங்கி வரும் அற்புதம்
கங்கையில் இருந்து தோன்றியது.
ஆகவே கங்கை ஹராத்தியை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

இரவு நேரத்தில் கங்கை மாதாவிற்கு ஹாரத்தி
சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக மேலும் இரண்டு அற்புதங்களை எழுதுவதாக சொல்லியிருந்தேன். ஆனால் அதற்குள் மஹாபெரியவா ஒரு அற்புதத்தை நிகழ்த்தி விட்டார்.. நிகழ்த்திய அற்புதம் மஹாபெரியவாளின் நூற்றி இருபத்தி ஐந்தாவது ஜெயந்தியை ஒட்டி நிகழ்துள்ளதால் அந்த அற்புதத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள என் உள்ளம் துடித்தது. ஆகவே காலம் தாழ்த்தாமல் இந்த பதிவில் நிகழ்ந்த அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். .
இந்த மாதம் இந்த ஐந்தாம் தேதி சனிக்கிழமை காலை வழக்கம் போல் எழுந்து பிரும்ம முகூர்த்த பிரார்த்தனைக்கு தயாரானேன்.மஹாபெரியவா முன் நின்று எல்லோருடைய பிரார்த்தனையையும் முடித்தேன்.
மஹாபெரியவா தன்னுடைய வழக்கமான அழைப்பான ஏண்டா என்றார்.நானும் செல்லுங்கோ பெரியவா என்றேன். இனி சம்பாஷணை வடிவில் உங்களுக்காக இதோ.
பெரியவா:ஏன்டா இந்த மாசம் என்னோட ஜெயந்தி வருது தெரியமா?
G.R.: ஆமாம் பெரியவா இந்த மாசம் இருபத்தி ஒன்பதாம் தேதி வருது பெரியவா.
பெரியவா: உன்னோட பிறந்த நாளுக்கு நீ என்கிட்டே ஏதாவது கேட்டு வாங்கிக்கறே. என்னோட ஜெயந்திக்கு நீ என்னடா பண்ணப்போறே.?
G.R பெரியவா குழந்தை எது வேண்டுமானாலும் தாத்தாவிடம் தான் கேக்கும் , தாத்தா குழந்தையிடம் கேட்பாளா? நீங்களே சொல்லுங்கோ பெரியவா. நான் உங்களுக்கு என்ன செய்யணும். நீங்களே சொல்லிவிட்டால் அதற்கு உரிய வழியையும் பலத்தையும் கொடுத்து விடுவீர்கள்.
பெரியவா: என்னோட ஜெயந்திக்கு கங்கையில் இருந்து தீர்த்தம் கொடுவந்து அபிஷேகம் பண்ணுவியா?
G.R பெரியவா நிச்சயம் பண்ணறேன் பெரியவா. பரமேஸ்வரன் நீங்கள்.. நீங்களே கங்கையை உங்கள் சிரசில் தாங்கியிருக்கிறீர்கள். உங்களுக்கே கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம் செய்வதற்கு நான் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்.. நான் நொண்டி நொண்டியே கங்கை கரையை சென்றடைந்து உங்களுக்கு அங்கிருந்து கங்கை ஜலம் கொண்டு வந்து அபிஷேகம் பண்ணறேன் பெரியவா
பெரியவா: நொண்டிண்டு நீ ஒன்னும் கங்கைக்கு போக வேண்டாம். உன் மனசை தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.
G.R: என்ன பெரியவா என் மனசை கேட்டுத்தான் நீங்கள் தெரிஞ்சுக்கணுமா? நீங்கள் நினைத்தாலே உங்கள் மனத்திரையில் என் மனம் ஓடுமே.
பெரியவா: சரி போடா போய் உன் வேலையை கவனி
G.R: பெரியவா நீங்கள் என்னிடம் கங்கை ஜலத்தில் அபிஷேகம் என்று கேட்டுவிடீர்கள் இப்போ எனக்கு அசையா இருக்கு பெரியவா.. என் சக்தியையும் மீறி உங்களுக்கு அபிஷேகம் செய்யணும்போலே இருக்கு.
G.R:இது வரைக்கும் எனக்குன்னு எதுவும் கேட்டதில்லை. எனக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா என்று கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொண்டேன்.
இது உங்களுக்கு : நான் உங்களுக்காக செய்யும் அத்தனை பிரார்த்தனைகளுக்கும் சளைக்காமல் அனுகிரஹமும் ஆசிர்வரஹமும் செய்து கொண்டிருக்கும் பெரியவாளுக்கு நான் அவர் கேட்காமலேயே செய்ய வேண்டும்..
இருந்தாலும் என் பக்க வாதம் கைகால்களை முடக்கி போட்டுவிட்டது.என்ன செய்வது?.இது வரை நான் என் பக்கவாதத்தை பற்றி கவலை பட்டதில்லை. ஆனால் பெரியவா கேட்ட அந்த நொடியில் வருந்தினேன்.கவலை பட்டேன். எப்படி ஒரு இயலாமை..பரமேஸ்வரன் என்னிடம் கேட்கிறார்.. என்னால் இயல வில்லையே...
பெரியவா: சரி போடா எல்லாம் தன்னாலே நடக்கும் என்றார். நானும் சந்தோஷமாக வந்து விட்டேன்.
இந்த மாதம் பத்தாம் தேதி வியாழக்கிழமை காலையில் எனக்கு ஓரளவு அறிமுகமான சாஸ்திரிகள் ஒருவர் வருகிறார். நான் அவர் என்ன பார்க்க வந்த காரணத்தை கேட்டேன்.
அவர் சொன்னது, " மாமா நீங்கள் மஹாபெரியவாளின் தீவிர பக்தர்..பெரியவாளுக்கு இந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி நூற்றி இருபத்தி ஐந்தாம் ஜெயந்தி வருகிறது. இந்த ஜெயந்திக்கு மஹாபெரியவளுக்கு கங்கை நீரில் அபிஷேகம் செய்தால் நன்றக இருக்கும்.
என்னால் விமானத்தில் சென்று கங்கை நீர் எடுத்தி வர வசதி இல்லை. நீங்கள் விமான பயண செலவை ஏற்றுக்கொண்டால் உங்கள் சார்பில் நானே வாரணாசி சென்று கங்கை நீர் எடுத்து வருகிறேன். மஹாபெரியவா சந்தோஷப்படுவார். என்று சொல்லி முடித்தார்.
இதுவும் மஹாபெரியவாலீலைகளில் ஒன்று என்று எனக்கு தெரியாத என்ன. நான் அவரிடம் சொன்னேன். மஹாபெரியவா ஏற்கனவே சந்தோஷப்பட்டுவிட்டார். இது மஹாபெரியவா எனக்கிட்ட உத்தரவு.
நிச்சயம் செய்து விடலாம். எனக்கு ஒரு இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என்றேன்.. வந்த சாஸ்திரிகளும் என்னிடம் விடைபெற்று சென்றார்.
நானே ஒரு அன்னக்காவடி நான் விமான பயண செலவிற்கு எங்கே போவேன்.ஆகவே இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் எடுத்து கொண்டேன். யாரிடம் இந்த செலவை ஏற்குமாறு கேட்க முடியம் எண்ணென்று எனக்குள் யோசித்து கொண்டே இருந்தேன். என்னையும் அறியாமல் ஒரு பக்தரின் பெயர் என்னுள் உதித்தது. உதிக்க வைத்ததும் மஹாபெரியவா தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?
ஆனால் எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது.. பல மணி நேரம் அந்த பக்தரை அழைத்து பேசாமல் நேரம் கடத்தி கொண்டு இருந்தேன். இந்த இடத்தில நான் மஹாபெரியவளை நினைத்து த்யானம் செய்து கொண்டு இருந்தேன். என் கைபேசி என்னை அழைத்தது. அழைத்தார் யார் தெரியுமா? யாரை நான் மனத்தில் நினைத்து கொண்ட இருந்தேனோ அந்த பக்தர் என்னை அழைத்தார்.. நான் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன்.
நான் நிச்சயம் மிகவும் சங்கோஜப்பட்டு அந்த பக்தரை அழைக்க மாட்டேன் என்று மஹாபெரியவா முடிவு கட்டி விட்டார். மஹாபெரியவா எனக்குள் சொல்கிறார். எடுத்து பேசுடா என்கிறார். நானும் கைபேசியை எடுத்து குரல் கொடுத்தேன். அந்த பக்தர் யார் தெரியுமா? நம்முடைய காணொளியில் உங்களுடன் பேசிய ராமானுஜம் குமுதா வல்லி தம்பதியினர் தான்.. நாம் எடுத்த காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல என்னை அழைத்தார்கள். நானும் பேசிக்கொண்டே இருக்கிறேன்.
மஹாபெரியவா எனக்குள் இருந்து என்னை கேளுடா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.. கடைசியில் நான் கேட்டு விட்டேன்.
"மாமி மஹாபெரியவா நூற்றி இருபத்தி ஐந்தாவது ஜெயந்திக்கு கங்கையில் இருந்து ஜலம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யணும். என்ன பண்ணறதுன்னு தெரியலை என்றேன். “நான் என்ன பண்ணனும்” என்று மாமி கேட்டார்கள்.
நான் சொன்னேன் " மாமி ஒரு சாஸ்திரிகள் மடியாக விமானத்தில் வாரணாசி சென்று கங்கை சென்று தீர்த்தம் கொண்டு வருகிறேன் என்கிறார். ஆனால் விமான செலவு மட்டும் ரூபாய் பதினைந்தாயிரம் ஆகும் என்கிறார்கள்..
உங்களால் விமான பயண செலவை ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்டேன். அதனால் என்ன மாமா நான் உடனே ரூபாய் பதினைந்தாயிரம் அனுப்பி விடுகிறேன். பிறகு என் சகோதரிகளிடம் இருந்து நான் பெற்றுக்கொள்கிறேன்.
நான் சொன்னேன் மாமி நீங்கள் கையில் இருந்து முன் பணமாக போட்டால் உங்களுக்கு கஷ்டமாகி விடப்போகிறது.என்றேன். காரணம் அப்பொழுதான் மாமி பாத்ரூமில் வழுக்கி விழுந்து நடக்க முடியாமல் படுத்து கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்கு உடல் உபாதைகள் தவிர செலவும் காத்துக்கொண்டிருக்கிறது.. அவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற கவலை வேறு எனக்கு.
ஆனால் மாமி சொல்லிவிட்டார். அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.இது மஹாபெரியவா ஜெயந்தி..மஹாபெரியவா கைங்கர்யத்தில் பங்கேற்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.என்று சொல்லி பணத்தை அனுஷா என்னும் பக்தரின் வாங்கி கணக்கில் கட்டி விட்டார்கள்.
உங்களுக்கு விஷ்ணு மாயாவை மறந்திருக்க முடியாது.நம்முடைய முதல் குரு பூஜை அற்புதங்களை அனுபவித்த பக்தைதான் விஷ்ணு மாயா என்னும் அனுஷா.. அனுஷாவே விமான டிக்கெட்டை வாங்கி சாஸ்த்ரீகளுக்கு மின்னஞ்சல் மூலம் சேர்த்தி விட்டார்.
இந்த மாதம் பதினெட்டாம் தேதி சாஸ்திரிகள் வாரணாசி சென்று அங்கு கங்கையில் நீராடி விட்டு மடியாக குடத்தில் தண்ணீர் எடுத்து குடங்களின் வாயை ஈயத்தை வைத்து மூடி பத்தொன்பதாம் தேதி மாலை ஆறு மணிக்கு இல்லம் வந்து சேர்ந்தார்.
என் இல்லத்தில் ஐந்து பெரிய குடங்களில் கங்கை நீர் மஹாபெரியவா பாதுகைக்கு கீழே வைத்திருக்கிறேன். இந்த குடங்கள் எல்லாம் இந்த மாதம் இருபத்தி ஏழாம் தேதி மதியம் மூன்று மணிக்கு வேத கோஷங்கள் முழங்க காஞ்சி மஹாபெரியவா அதிஷ்டானத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது..
இந்த ஐந்து குடங்கள் தவிர வரும் ஆறு மாதங்களுக்கு அனுஷத்தின் நாளன்று திருமஞ்சனம் செய்ய சிறிய குடங்களில் கங்கை நீர் எடுத்து வரப்பட்டிருக்கிறது. இந்த கைங்கரியத்தில் ஈடு பட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மஹாபெரியவா இவர்கள் அனைவரையும் இவர்கள் குடும்பத்தினர் அனைவரையம் தாராளமாக ஆசீர்வதிப்பார்.. இது சத்தியம்.
சற்று சிந்தித்து பாருங்கள்.நான் ஆசை மட்டுமே பட்டேன்.ஒரு இம்மி கூட அசையாமல் நான் ஆசைப்பட்டது அனைத்தையும் மஹாபெரியவா என் கண் முன்னே நடத்தி காட்டினார்.
தனது வயதையும் பாராமல் மஹாபெரியவா கைங்கர்யத்திற்காக தனுடைய உடலை வருத்திக்கொண்டு வாரணாசி வரை சென்று கங்கை ஜலம் கொடு வந்த சாஸ்திரிகளை நாம் மனதார வாழ்த்துவோம்.
மஹாபெரியவா பாதுகை கங்கை நீருடன் குடங்கள் எல்லாவற்றையும் படம் எடுத்து இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும் உங்கள் தரிசனத்திக்காக.
இந்தப்ரபஞ்சத்தின் மொத்த உருவம் தான் மஹாபெரியவா
உங்களுக்கு பிரபஞ்ச மொழி தெரியுமா
பிரபஞ்ச அமைதி தான் பிரபஞ்சத்தின் மொழி
மஹாபெரியவாளுடன் பேசுங்கள்
அது பிரபஞ்ச மொழியாக மாறி பிரபஞ்சத்தில் எதிரொலிக்கும்
நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும்
கங்கை நீர் உட்பட
மஹாபெரியவாளே பிரபஞ்சம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்