top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -061


என் வாழ்வில் மஹாபெரியவா -061

பிரதி வியாழன் தோறும்

நீள் முடி தாள் வரை கொண்டவனே

திரு நீறு பூசியவனே

இமைப்பொழுதும் எங்கள் நெஞ்சில் வாழ்பவனே

மாயபிறப்றுக்கும் மாயாவா

பிறவிப்பிணியை அறுப்பவனே

எங்களை காத்து அருள்பவனே

விண்ணையே இல்லமாக கொண்டவனே

மண்ணில் நாங்கள் இருப்பது தெரியவில்லையா?

கலியின் தாக்கத்தால் இமைப்பொழுதும் கலங்குகிறோமே

எங்களுக்கு விடிவு காலமே இல்லையா

எங்களை உன் கரங்களால் பற்றிக்கொள்

ஜென்மத்தின் இறுதியில் எங்களை அழைத்துக்கொள்

பரமேஸ்வரா மஹாபெரியவா எங்களுக்கு

பயமில்லாத நோய் நொடியற்ற வறுமை இல்லாத

இந்த கலியின் காலத்தில் வாழ என்ன தேவையோ

அவைகளை எல்லாம் எங்கள் வாழ்க்கைக்கு தந்தருள்வாய்

நின் பாதம் சரணம்

மஹாபெரியவா ஈஸ்வர அவதாரம்

கங்கை அணிந்தவா

கங்கையின் புனித தீர்த்தம் என் இல்லத்திலிருந்த ஏழு நாட்களும் கங்கை மாதாவே என் இல்லத்திற்கு வந்தது போல இருந்தது.. பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா என் உள்ளத்திற்குள்ளும் இலத்திற்குள்ளும் வந்து எனக்கும் என் வாழ்க்கைக்கும் புனிதத்தை சேர்த்தார்... தன்னுடைய சிரசில் கங்கையை தரித்திருக்கும் மஹாபெரியவா கங்கையை என் இல்லத்திற்குள்ளும் பிரவாகமாக நுழைய செய்தார்.

எனக்கு கிடைத்த இந்த கங்கை புனிதத்தை உங்களுக்கும் பகிர்ந்து அளிக்கிறேன். மஹாபெரியவா எனக்கு கொடுத்த ஆசிர்வாதகங்களையும் அனுகிரஹத்தையும் எப்படி பகிர்ந்து அளித்து கொண்டிருக்கிறேனோ அதே போல் இந்த கங்கை புனிதத்தையும் இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு பகிர்ந்து அளிக்கிறேன்..

கங்கை மாதா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சகல ஐஸ்வர்யங்களையும் ஆயுள் ஆரோக்கியங்களையும் அள்ளி வழங்கட்டும்.

கங்கைக்கே என் இல்லத்தில் ஒரு கங்கை

ஜோதி ஸ்வரூபமாய் ஆசிர்வாதம் செய்யும்

அபய கரங்களுடன் மஹாபெரியவா தெரிகிறதா உங்களுக்கு

இந்த கங்கை கைங்கர்யத்திற்கு உதவிய நல்ல உள்ளங்கள்

குமுதவல்லி ராமானுஜம் தம்பதியினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர். 15,000/-

திருமதி ப்ரீத்தி 3,000/-

திரு நந்தகுமார் 3,000/-

திருமதி ராஜலக்ஷ்மி மோகன் 1,000/-

திருமதி அனுஷா 4,000/-

திருமதி சக்தி பிரபா 2,002/-

மற்றும் உள்ளத்தளவில் வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த இணைய தளம் நன்றி சொல்கிறது. மஹாபெரியவா அனுகிரஹமும் ஆசிர்வாதங்களும் உங்களுக்கு நிரம்ப கிடைக்கட்டும்.

. பண பலத்தை விட ஆத்ம பலம் கிடைத்தற்கரியது. மஹாபெரியவா அருளால் எனக்கும் அந்த ஆத்ம பலம் கிடைத்து கொண்டு இருக்கிறது.

அந்த புனித ஆத்மாக்கள் ரஞ்சனா பாலசுப்ரமணியம் தம்பதியினர் சவீதா முரளிதர் தம்பதியினர் திருமதி விஜயலட்சுமி ராமச்சந்திரன் தம்பதியினர் இன்னும் பல நல்ல உள்ளங்கள் இந்த கைங்கர்யத்தில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.

இத்தனையும் தாண்டி கங்கையை என் இல்லத்திற்கு கொண்டு சேர்த்த சாஸ்திரிகள் மாமாவிற்கு உங்கள் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

கங்கை மாதா என் இல்லம் வந்த கதை இதோ உங்களுக்காக என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில் மஹாபெரியவா என்னிடம் கேட்டார். "ஏண்டா உன்னோட பிறந்த நாளுக்கு என் கிட்டே பரிசெல்லாம் கேட்டு வாங்கிக்கறயே.. என்னோட ஜெயந்திக்கு என்ன பண்ணப்போறே. என்றார்.

நான் சொன்னேன் நான் என்னசெய்ய முடியும் பெரியவா. உங்கள் அருளால் ஒரு கை ஒரு காலை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் எனக்கிட்ட பணியயை உங்கள் மனசு கோணாமல் பண்ணிண்டு இருக்கேன். வேறே நான் என்னபண்ணனும் சொல்லுங்கோ. உங்கள் அருளும் ஆசிர்வாதமும் இருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியும். சொல்லுங்கள் பெரியவா நான் என்னசெய்யனும்..

அதற்கு பெரியவா சொல்கிறார்" கங்கை தீர்த்தத்தில் எனக்கு அபிஷேகம் பண்ணறயா? என்று கேட்டார்.. நானும் சரியென்றேன். ஒரு வாரத்தில் மஹாபெரியவாளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். பிறகு கங்கை மாதா என் இல்லத்திற்கு பாய்ந்து வந்த அற்புதம் நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

மஹாபெரியவா ஆணையிட்டார். என் மனசு ஆசைப்பட்டது. .நீங்கள் எல்லோரும் சேர்ந்து நடத்தி கொடுத்தீர்கள். ஒரு துரும்பை கூட தூக்கி போடாத எனக்கு கிடைத்த பாகியத்திற்கு நான் மஹாபெரியவாளுக்கு நன்றி சொல்கிறேன்

புனித கங்கை நீர் என் இல்லத்தில் இருந்து வேத கோஷங்கள் முழங்க இருபத்தி ஏழாம் தேதி ஞாயிற்று கிழமை மாலை மூன்று மணி முப்பது நிமிடங்களுக்கு மஹாபெரியவா அதிஷ்டானத்திற்கு வேதம் கற்ற பிராமணர்களால் எடுத்து செல்லப்பட்டது.

அந்த நேரத்தில் நான் உங்களுக்காக வேண்டிக்கொண்டது. இதோ என் வேண்டுதல்கள் உங்களுக்காக.

பெரியவா நீங்கள் எனக்கு ஆணையிடீர்கள். அனுகிரஹமும் செய்தீர்கள்.இந்த புனித விழாவில் பங்கேற்காத ஆத்மாக்களுக்கும் பங்கேற்ற ஆத்மாக்களுக்கும் நோயற்ற வாழ்க்கையும் கலக்கமற்ற மனதையும் எந்த துன்பமும் அவர்களை அண்டாதவாறும் பார்த்துக்கொள்ளுங்கள். என்று வேண்டிக்கொண்டேன். என் பிரார்த்தனை இது நாள் வரை பலிக்காமல் இருந்ததில்லை.

பூமி என்னும் இந்த கிரஹத்தில் நாம் எல்லோருமே சக ஆத்மாக்கள் தானே. நம்முடைய நலனுக்கு நாம் பிரார்த்தனை செய்வோம்.

ப்ரத்யக்ஷ பரமேஸ்வரன்

மஹாபெரியவா எங்களை காத்தருள்வாய்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page