மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-059

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-059
பிரதி செய்வாய்க்கிழமை தோறும்
மனித வாழ்வில் சத்தியம்
என்ற வார்த்தை எப்பொழுது
வேண்டுமானாலும் தடுமாறும்
ஆனால் மஹாபெரியவா ஒரு சத்திய தாய்
சத்தியத்தின் வயிற்றில் சிசுவாக வளர்ந்து
சத்தியமாகவே பிறந்தார்
மஹாபெரியவா என்னும் சொல்லுக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உயிர் இருக்கும் என்பதற்கு பல நிகழ்வுகளை சொல்லலாம்.. மஹாபெரியவா வடக்கே காசி வரை நடை பயணமாகவே இருபத்தி ஒரு ஆண்டுகள் நடந்து தன்னுடைய யாத்திரையை முடித்தார்.
மஹாபெரியவா காசி சென்று திரும்பும் வழியில் கேரளாவில் பாலக்காட்டுக்கு அருகில் நெல்லிசேரி என்னும் இடத்தில் முகாம் இட்டிருந்தார். அப்பொழுது மஹாத்மா காந்தியும் தன்னுடைய சுதந்தர போராட்ட பயணத்தில் அங்கு வந்திருந்தார்.
அப்பொழுது நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான அன்றைய முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் மஹாபெரியவளாயும் மஹாத்மா காந்தியையும் சந்திக்க ஏற்பாடு செய்தார். இருவரையும் தனியாக பேசவிட்டு தான் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
இருவருக்கும் நேரம் போவதே தெரியாமல் மிகவும் சுவாரஸ்யத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.. மாலை ஆறு மணிக்கு காந்திஜிக்கு சாப்பிடும் நேரம் ஆகி விட்டது அப்பொழுது ராஜாஜி அவர்கள் உள்ளே சென்று மஹாத்மாவிடம் சாப்பிடும் நேரத்தை நினைவு படுத்தினார்.
மஹாத்மா சொன்னாராம் எனக்கு வயிறு நிறைந்து விட்டது. சாப்பிடவே தோன்ற வில்லை.இதுவும் மஹாபெரியவாளின் இறை சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர்கள் சம்பாஷணையின் பொழுது காந்திஜிக்கு ஒரு செய்தி வருகிறது.
ஒரு முகமதியர் ஷரத்தானந்தா என்னும் இந்து சாமியாரை சுட்டு கொன்று விட்டாராம் என்பதுதான் அந்தச்செய்தி. அப்பொழுது மஹாத்மா மஹாபெரியவாளிடம் சொன்னாராம் "இப்படி செய்தால் முகமதிய சமுதாயத்துக்கே கெட்டபெயர் வந்து விடும்.என்று கவலை பட்டாராம்..
அதற்கு மஹாபெரியவா சொன்னாராம் " ஒரு முஸ்லீம் நபர் செய்த தவறால் எப்படி அந்த சமுதாயத்தையே குறை சொல்ல முடியும்.. மஹாபெரியவா மஹாத்மாவிடம் சொன்னாராம் "உதாரணத்திற்கு உங்களை ஒரு இந்து சுட்டுக்கொன்று விட்டால் மொத்த இந்துக்களையும் குறை சொல்லமுடியுமா?” என்று கேட்டாராம்
சரியாக இருபது ஆண்டுகளுக்கு பிறகு நம்முடைய மஹாத்மா காந்தி நாதுராம் கோட்ஸே என்ற இந்துவால் சுடப்பட்டு இறந்தார்.. மஹாபெரியவா வாக்கிற்கு அப்படியொரு பிரபஞ்ச சக்தி.
மஹாபெரியவா சத்தியத்தை பேசுகிறாரா? இல்லை
மஹாபெரியவா பேசுவதெல்லாம் சத்தியமாகி விடுகிறதா?
ஒன்றும் புரியவில்லை தெரியவில்லை
ஏனென்றால் மஹாபெரியவா என்ற சொல்லே
சத்தியம் தானே
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்