Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -063


என் வாழ்வில் மஹாபெரியவா -063

பிரதி வியாழன் தோறும்

அன்று ராமாயண காவியம் எழுதப்பட்டது

இன்று மஹாபெரியவளால் அருளப்படுகிறது.

மாசற்ற பக்தி செய்யுங்கள் ராம தரிசனமும் கிடைக்கும்

இது என் அனுபவம்

என்னுடைய அறுபத்தி மூன்று வருட மனித வாழ்க்கையில் குழந்தை பிராயம் முதல் பத்து வருடங்கள் மிகவும் அழகான பட்டாம்பூச்சி வாழ்க்கை. மத்தாப்பு கற்பனைகள். காத்தாடி கனவுகள்... உலக வாழ்க்கையில் ஈடு படாத நாட்கள் அவை..கவலை கிடையாது. மன வருத்தம் கிடையாது..கோபம் கூட ஒரு சில நிமிடங்கள்தான்.

அதற்கு பிறகு நான் வாழ்ந்த ஐம்பது வருட வாழ்க்கையும் ஒரே போராட்டம் தான். வாழ்ந்தாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கற்ற கல்வி காற்றில் பறந்தது. பெற்ற ஞானம் ஞாபகத்திற்கு வர மறுத்தது. பெற்ற அனுபவம் கை கொடுக்கவில்லை.

வாழ்க்கை எங்கே ஆரம்பித்தது.?. எப்படி சென்று கொண்டிருக்கிறது?.எங்கே முடியப்போகிறது?. எதற்கும் விடை தெரியாத நாட்கள். அறுபது வயதில் பந்தயத்தில் ஓடி முடித்து விட்டு வெற்றி தோல்வி தெரியாத குதிரை போல சாய்வு நாற்காலியில் சாயும் பொழுது என் ஆத்மா என்னை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்ட சரமாரியான கேள்விகள் .

எவ்வளவு இழந்தாய்? எவ்வளவு பெற்றாய்? என்ன இழந்தாய்? என்ன பெற்றாய்? வாழ்க்கை தோல்வியில் முடிந்ததா? இல்லை வெற்றியில் முடிந்ததா? என் ஆத்மாவின் அடுக்கடுக்கான கேள்விகள். ஆனால் எல்லாமே விடை சொல்ல முடியாத கேள்விகள்.

இந்த பதிவின் அற்புதத்திற்கு முன்னால் என் ஆத்மா என்னை பார்த்து கேட்ட சில விடை தெரியாத கேள்விகளும் என் மன நிலையையும் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் ஆத்மா என்னை தூண்டியது. .

என் வாழ்கை மட்டும்தான் இப்படியா இல்லை என்னைப்போல் உங்களில் பலருக்கும் இப்படித்தான் வாழ்கை அமைந்ததா ? எனக்கு சொல்லுங்களேன் உங்கள் கமெண்டுகள் வாயிலாக.

இனி இந்த பதிவின் அற்புதத்திற்குள் நுழைவோம்.

அன்று காலை மணி நான்கு முப்பது. என்னுடைய வழக்கமான பிரார்த்தனைகள் முடிந்து மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தேன். மஹாபெரியவாளின் வழக்கமான ஏண்டா என்னும் குரல்.

G.R. : சொல்லுங்கோ பெரியவா.என்றேன்.

பெரியவா: ஏண்டா உங்க தாத்தா பாடி காலத்துக்கே எல்லாம் ராமாயணம் மஹாபாரதம் எல்லாம் சொல்லி தானே தங்களுடைய பேரக்குழந்தைகளை வளர்த்தார்கள். குழந்தைகளுக்கும் நீதி நேர்மை தர்மம் ஒழுக்கம் சத்தியம் சனாதன தர்மம் எல்லாம் தெரிந்திருந்தது.

இன்று எதுவுமே தெரியாமல் வளரும் குழந்தைகள் எதை பற்றியுமே கவலைப்படாமல் சமூக ஓழுக்கங்களை காற்றில் பறக்கவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். நினைத்தது அப்பொழுதே கை மேல் கிடைக்கவே வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இன்று சகிப்புத்தன்மை இல்லை. வாழும் முறை தெரியவில்லை. போட்டியும் பொறாமையுமே மேலோங்கி இருக்கு. அடங்காத பிடிவாதம். இதுக்கு ஏதாவது பண்ணனும்.. இதுக்கு ஏதாவது பண்ணுடா

G.R. :: நான் என்ன பண்ணனும் பெரியவா சொல்லுங்கோ பண்ணறேன்.

பெரியவா: நீ ஒன்னு செய். ராமாயணத்தை குழந்தைகளுக்கு புரியமாதிரி ஒவ்வொரு நிகழ்வயும் சொல்லி அதுக்கு பின்னலே இருக்கும் நீதியையும் சத்தியத்தையும் ஒழுக்கத்தையும் எடுத்து சொல்லு.

G.R. பெரியவா எனக்கு ரமணாயணத்தை பத்தி முழுசா எதுவும் தெரியாது. நான் மிகவும் எளிமையான ராமாயணத்தை படித்தால் ஒழிய ராமாயணத்தை புரிந்து கொண்டு எழுதுவது மிகவும் கடினம்.

பெரியவா: நீ ராமாயண புஸ்தகம் ஒன்னு வாங்கி படியேன்.

G.R. எளிமையான ராமாயணம் எங்கே கிடைக்குமோ தெரியவில்லை. நான் எங்கே போய் வாங்குவேன். பெரியவா.

பெரியவா: நீ எங்கயும் வாங்கபோக வேண்டாம். உன்னை தேடிண்டு ஒரு பக்தர் குரு பூஜை பிரார்த்தனைக்கு வருவார்.. அவரே கொண்டு வருவார். அதை படித்து எழுத ஆரம்பி. என்றார்.

G.R. வரும் பக்தருக்கு எனக்கு எளிமையான ராமாயணம் வேணம்னு எப்படி தெரியும் பெரியவா.

பெரியவா: என்னடா நீ கேட்டா எல்லாம் உன்னைத்தடி வருது.நான் வழக்கமா சொல்லிக்கொடுத்த மாதிரி மனசில சங்கல்பம் பண்ணிக்கோ.. அது உன்னை வந்து அடையச்செய்வது என் பொறுப்பு. என்றார்

G.R. சரி பெரியவா என்று கண்களை மூடிக்கொண்டு மனசிற்குள் சங்கல்பம் செய்து கொண்டேன்.

அற்புதம் அரங்கேறியது

சரியாக ஒரு வாரம் இருக்கும்.. உங்களுக்கெல்லாம் தெரியும். விஜயலக்ஷ்மி மாமி என் இல்லத்திற்கு வந்து இரண்டு சிறுவர்களின் படிப்பு செலவிற்கு காசோலை வழங்கி விட்டு ஸ்மார்ட் கைங்கர்யத்திற்கு ஒரு லக்ஷத்து இருபது ஆயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கி வாழ்த்திய நிகழ்வு நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

அன்று விஜயலக்ஷ்மி மாமியுடன் கூட அவரது உறவினர் தருமி கணேஷ் என்பவரும் வந்தார். அவர் கையில் அழகாக ஒரு பார்சல் இருந்தது.. என் கண்கள் ஒரு கவலையுடன் அந்த பார்சலையே பார்த்தது. ஏனென்றால் என் பிரார்த்தனைகளுக்கு நான் எதுவுமே பெற்றுக்கொள்வதில்லை. இது மஹாபெரியவளுக்கும் தெரியும் உங்கள் எல்லோருக்குமே தெரியும். அந்த பார்சலை மறுக்கும் மன நிலையில் இருந்தேன்.

தருமி என்ன செய்தார் தெரியுமா?

அந்த பார்சலை என் கண்களில் காண்பித்து சில வாக்கியங்களை சொன்னர். " இது வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணத்தின் தமிழாக்கம்.. குழந்தைகளுக்கு கூட புரியும் வண்ணம் மொழி பெயர்த்து எழுதி இருக்கிறேன். இதன் எட்டு தொகுப்பையும் உங்களுக்கு என் சார்பில் அன்பளிப்பாக கொடுக்க நினைக்கிறேன். இதை படித்து குழந்தைகளுக்கு புரியற மாதிரி எழுதுங்கோ. என்று பார்சலை என் கைகளில் கொடுத்தார். .

தருமியின் இடத்தில் என்னால் மஹாபெரியவளை பார்க்க முடிந்தது.. மஹாபெரியவா புன்னகைத்துக்கொண்டே என் கைகளில் ராமாயண மொழிபெயர்ப்பு புத்தகங்களை தவழ விட்டார். என் நன்றிக்கடனாக கண்களில் துளிர்த்த கண்ணீரால் ராமனின் பாதங்களுக்கும் மஹாபெரியவாளின் பாதங்களுக்கும் பாத பூஜை செய்தேன்.

நினைத்து பாருங்கள் தூய உள்ளத்துடன் மனதிலொன்றை சங்கல்பித்துக்கொண்டால் இந்த எல்லையற்ற பிரபஞ்சம் அதை உங்களிடம் கொடு வந்து சேர்க்கும். இது சத்திய வார்த்தை.. பிரபஞ்சத்தின் மறு உருவம் தான் மஹாபெரியவா.

உங்கள் சிந்தனையில் மஹாபெரியவா

உங்கள் எண்ணத்தில் மஹாபெரியவா

உங்கள் பேச்சில் மஹாபெரியவா

உங்கள் செயல்களில் மஹாபெரியவா

மஹாபெரியவா உள்ளத்தில் நீங்கள்

வேறு என்ன வேண்டும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்