Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா புத்தக வெளீயீடு


எனக்கும் ஒரு அர்த்தமுள்ள புது வாழ்வு கொடுத்த மகாபெரியவா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்கரங்கள்

உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

என் வாழ்வில் மஹாபெரியவா புத்தக வெளீயீடு

என் வாழ்வில் மஹாபெரியவா -பாகம் -1

இந்த புத்தக வெளியீடு பதிவை எழுதுவதற்கு முன்னால் நான் சற்று பின்னோக்கி கடந்து வந்த பாதையை பார்க்கிறேன். நான் காண்பது பகல் கனவா? இல்லை கண் முன்னே நிகழும் உண்மையா? இது உண்மை என்று நினைத்து பார்க்கவே எனக்கு மலைப்பாக இருக்கிறது.

முப்பது வருடத்திற்கு முன்னால் திசை தெரியாமல் காற்றில் பறந்து கொண்டிருந்த குப்பை காகிதம் இன்று புத்தகம் எழுதுகிறது என்றால் யாரால் நம்ப முடியும். என் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற நிலையில் இரு முறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தரையில் தவழ்ந்து கொண்டிருந்த என்னை ஏழ வைத்து ஒரு கை ஒரு காலால் நடக்க வைத்து மற்றவர்கள் சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த என்னை நான் சமைத்து இன்று மற்றவர்கள் சாப்பிடும் அற்புதத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் மஹாபெரியவா.

என் வாழ்க்கையில் நிகந்த நிகழ்ந்துகொண்டிருக்கிற அற்புதங்கள் மூலம் பிரபஞ்ச தெய்வம் இந்த பூவுலகிற்கு மஹாபெரியவா அவதாரமாய் இறங்கி வந்திருக்கிற செய்தியை சொல்லாமல் சொல்லி எல்லோருக்கும் புரிய வைத்து கொண்டிருக்கிறார்

.

இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில் மற்றவர்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனை முடிந்த நேரம். மஹாபெரியவா என்னிடம் கேட்கிறார் " ஏண்டா நீ அனுபவித்த அற்புதங்களையும் நான் சொல்லிட்டு போன அறிவுரைகளையும் மத்தவாளுக்காக எழுதறயா? என்று கேட்டார்

நான் சொன்னேன் " பெரியவா என்னுடைய இடதுபுறம் ஸ்வாதீனமிலாமல் போயிடுத்து பெரியவா. வலது கை விரல்களில் நடு விரலில் மட்டும் தான் என்னால் எழுத முடிகிறது.. நான் எப்படி புத்தகம் எழுவவேன் பெரியவா? என்றேன்.

அதற்கு பெரியவா சொன்னார் " நீ அனுபவித்த அத்தனை அற்புதங்களையும் மத்தவாளுக்கு எடுத்து சொல்லி கஷ்டப்படும் ஆத்மாக்களுக்காக என்னிடம் பிரார்த்தனை செய். நான் அவாளுக்கு அனுக்கிரஹம் பண்ணறேன் என்றார்.

நான் கேட்டேன். பெரியவா மெதுமெதுவா எழுதினா ரொம்ப நாள் ஆகுமே பரவாயில்லையா? என்றேன். அதற்கு பெரியவா நீ ஒரு விரலில் எழுதினா தானே நாளாகும். பத்து விரல்களின் பலத்தை உன்னோட ஒரு விரலில் தருகிறேன். எழுதறயா ? என்றார்.

கரும்பு தின்ன கூலியா பெரியவா. உங்கள் அற்புதங்களை எழுதுவதற்கு என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும். நீங்களே சொல்லிருக்கேள் ஒரு ஆத்மா உங்களை நெருங்க வேண்டுமானால் பதினான்கு முறை சல்லடையால் சலித்து தான் நெருங்க முடியும் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.

நீங்கள் என்னை அழைத்து எனக்கு அனுக்கிரஹம் செய்து இந்த நொடி வரை என்னுடனே இருந்து என்னை வழி நடத்துகிறீர்கள் . எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை கொடுத்திருக்கிறீர்கள்.

இத்தனை கோடி பேரில் என்னை மட்டும் தேர்ந்தேடுத்து காஞ்சிக்கு அழைத்து எனக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்து எனக்கு உங்கள் கைகளாலேயே பிரசாதம் கொடுத்த அன்றைய நாளும் நேரமும் இன்னும் என் மனதில் பசுமையாக நிற்கிறது .அப்படியானால் நான் யார் என்ற கேள்விக்கு போகப்போக உனக்கு புரியும் என்றீர்கள். இன்று வரை எனக்கு புரியவில்லை.

ஆனால் ஒன்று புரிகிறது. நீங்கள் என்னை அழைத்து சங்கல்பித்து கொண்ட ஒரு விஷயம் என்னை ஒரு இலக்கை நோக்கி அழைத்து செல்கிறது. சக ஆத்மாக்களின் துன்பங்களுக்கும் அல்லல்களுக்கும் உங்களை ஒரு கரையேறும் துடுப்பாக காண்பித்து உங்களிடம் இருந்து குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி கொடுத்து பூஜையை செய்ய வைத்து கரையேற்றும் பணியை செய்து கொண்டிருக்கிறேன்.

நீங்கள் உத்தரவிட்ட ஒன்பது புத்தகங்களில் முதல் புத்தகத்தின் முதல் பாகம் வெளியாகப்போகிறது. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.என் ஒரு விரல் பிரசவிக்கும் அத்தனை வார்த்தை குழந்தைகளும் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பிரசாதம் என்று.

முதல் முறையா ஒரு பிரசாதம் புத்தகம் வடிவில் வழங்கப்படுகிறது. இந்த புத்தகம் வரும் இருபத்தி ஐந்தாம் தேதி மஹாபெரியவா திரு நக்ஷத்திரமான அனுஷம் நன்னாளில் உங்கள் ஆசியுடன் வெளியாகிறது.

இது உங்களுக்காக- இந்த புத்தகத்தை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்.

  1. இந்த புத்தகம் மஹாபெரியவா உங்களுக்கு கொடுக்கும் பிரசாதம்.

  2. இந்த புத்தகத்தில் எழுதப்பட்ட ஒவ்வொரு அக்க்ஷரமும் உங்களை காக்கும் கலியுக கவசம்.

  3. உங்கள் குழந்தைகளுக்கு பொன்னும் பொருளும் நிலம் நீச்சும் வாங்குகிறீர்கள். அந்த சொத்துக்கள் முழுவதும் தலைமுறைகளை தாண்டி நீங்கள் சேர்த்த சொத்துக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக அமையும்.

  4. இந்த புத்தகத்தை நீங்கள் வாங்கும் பொழுது கொடுக்கும் தொகையில் பாதி தொகை அரசாங்க வரிகள் போக ஸ்மார்ட் அறக்கட்டளைக்கு சென்று விடுகிறது. அங்கு சேர்ந்த தொகையை மஷாபெரியவா நமக்கு சொல்லிவிட்டு போன கோவில் புணருத்தாரணம் கோ ஸம்ரக்ஷிணம் வேத ரக்க்ஷணம் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவுவது போன்ற எண்ணற்ற கைங்கர்யங்களை செய்யப்போகிறோம். இந்த மாதிரி கைங்கர்யங்களை செய்யும் பொழுது வரும் புண்ணியங்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சென்று சேரும். இன்று தெரிந்தோ தெரியாமலோ செய்யும் அத்தனை பாவங்களுக்கும். இது ஒரு பரிகாரமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

  5. இந்த புத்தத்தை மொத்தமாக பத்து புத்தகம் இருபது புத்தகம் வாங்கி நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் சுற்றங்களுக்கும் அன்பளிப்பாக கொடுக்கும் பொழுது நீங்கள் மற்றவர்களுக்கு மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச தெய்வத்தை கை காண்பிக்கிறீர்கள் உங்கள் சக ஆத்மாவையும் புண்ணியம் செய்ய வைக்கிறீர்கள்.

  6. வாழ்கையில் நீங்கள் மனம் சோர்த்து இருக்கும் நேரங்களில் இந்தப்புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து படிக்கும் பொழுது உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் பல மடங்கு வெளிப்படும் என்பது நிச்சயம். இந்த அனுபவத்தை பலரும் என்னிடம் எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.

  7. புத்தகம் வாங்கக்கூட முடியாமல் திணறும் ஏழை ஆத்மாக்கள் எவ்வளவு பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் ஒவொருவரும் பத்து பேருக்காவது இந்த புத்தகத்தை வாங்கி பரிசாக குடுத்தால் அவர்கள் உள்ளம் நெகிழ்ந்து போய் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் வாழ்த்துவார்கள். இந்த ஜென்மமே உங்களுக்கு இறுதி இருக்கட்டும்.

புத்தகத்தை பற்றிய விவரங்கள்

  1. சற்று ஏறத்தாழ முன்னூறு பக்கங்கள் கொண்டது.

  2. ஒவ்வொரு அத்யாயமும் நமக்கு மஹாபெரியவா கொடுத்துவிட்டு போன பொன் மொழிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  3. தேவையான இடத்தில் .கண்களை கவரும் வண்ணப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

  4. இந்த புத்தகத்தில் எழுத்துக்கள் சற்று பெரியதாக வயதானவர்களும் கஷ்டப்படாமல் படிக்குமாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தப்பட்ட காகிதமும் தலைமுறைகளையும் கடந்து நிற்கும்.

  5. இந்த புத்தகம் மஹாபெரியவா பக்தியை மட்டும் அல்ல பல புண்ணிய காரியங்கள் மூலம் கிடைக்கும் புண்னனியங்களையும் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து கொடுக்கும்

  6. ஒவ்வொரு வார்த்தையும் யார் மனதையும் புண்படுத்தாதவாறு தேர்ந்தேடுத்து எழுதப்பட்டுள்ளது.

  7. இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பக்கமும் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க ஏதுவாக இருக்கும்.

  8. இந்த புத்தகம் உங்கள் புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  9. கலிகாலத்தில் கண்ணுக்கு தெரியாத ஆபத்துகள் உங்களை நெருங்கும் பொழுது அதற்கு கண்ணுக்கு தெரிந்த ஒரு மஹாபெரியவா கவசமாக இருக்கும் இந்த புத்தகம்

  10. உங்கள் மஹாபெரியவா பக்தி ஒவ்வொரு நொடியும் வானளவு உயரும் என்பது நிச்சயம்.

  11. மொத்தத்தில் இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு இன்னொருமுறை படிக்கமாட்டோமா என்ற உணர்வு நிச்சயம் இருக்கும்.

  12. இந்த புத்தகத்தை படிக்கும் நேரத்தில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை உங்கள் உள்ளத்தை ஆட்கொள்ளும் சக்தி படைத்தது.

  13. புத்தகம் வெளி வருவதற்கு முன்னே இவ்வளவு விஷயங்கள் எப்படி தெரியும் என்கிறீர்களா? கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு பதிவாக வேறு வேறு இணையதளங்களில் வெளி வந்து உலகம் முழுவதும் உள்ள மஹாபெரியவா பக்தர்கள் ஒவ்வொரு பதிவையும் படித்த பிறகு தங்கள் எண்ணங்களை தங்கள் கமெண்டுகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

  14. இந்த புத்தகத்தின் விலை Rs.500/- (ருபாய் ஐநூறு வரிகள் உட்பட) கூரியர் தபால் செலவுகள் தனி.

இந்த புத்தகத்தை எப்படி வாங்குவது

  • கீழே அறிவிக்கப்பட்டுள்ள தோலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு நீங்கள் புத்தகம் வாங்கலாம்.

  • சவீதா முரளிதர் திரு ரவி - விக்னேஷ் பிரின்டர்ஸ்

  • 9841633261 9840016655

  • தபாலிலோ அல்லது கூரியர் மூலமாக அனுப்பவேண்டுமானால் அந்த செலவு உங்களுடையது.

  • நேரில் வர முடியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் முன் பணம் செலுத்திவிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் உங்கள் விவரங்களை அனுப்பவும்.

  • மஹாபெரியவா அருள் டிரஸ்ட்

  • கணக்கு எண்: 500101011876937

  • IFSC: CIUB-0000279

  • வங்கியின் பெயர்: City Union Bank - Mylapore Branch- Chennai

  • மின்னஞ்சல் : booksbygr@gmail.com

  • வங்கியில் பணம் செலுத்திய விவரங்கள் மேலும் உங்களை பற்றிய விவரங்கள் அடங்கிய குறிப்புகளை மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.

பெயர்:

தொடர்பு விவரங்கள்:

முகவரி தொலைபேசி மின்னஞ்சல்:

புத்தகம் எண்ணிக்கை:

வங்கியில் பணம் செலுத்திய விவரங்கள்:

  • வெளிநாட்டில் உள்ள பக்தர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களுக்கு உரிய தொகையை வங்கியில் செலுத்திவிட்டு அதன் விவரங்களை இந்த பதிவில் இணைத்துள்ள அட்டவணையில் குறிப்பிடவும். வெளிநாடுகளுக்கு கூறியரிலோ தபாலிலோ அனுப்புவது என்றால் செலவு அதிகமாகும். ஆகவே உங்கள் உறவினர்கள் இந்தியாவில் இருந்து உங்கள் நாட்டிற்கு வருவதாக இருந்தால் அவர்கள் மூலம் புத்தகங்களை அனுப்பலாம். நீங்களே இந்தியா வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே தெரியப்படுத்தினால் நீங்கள் உங்களுடன் எடுத்து செல்வதற்கு வசதியாக வைக்கப்படும்.

  • இந்த புத்தகத்தை படித்து முடித்தபிறகு உங்கள் எண்ணங்களை இந்த இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.

உங்கள் சொந்தங்களிடமும் சுற்றங்களிடமும் நண்பர்களிடமும் இந்த புத்தகத்தை பற்றியும் மஹாபெரியவா மஹிமைகள் பற்றியும் எடுத்து சொல்லுங்கள். அவர்களும் இந்த புத்தகத்தை வாங்கட்டும்.

உங்களுக்கு தனிப்பட்ட முறையில் என் சார்பிலும் இந்த இணைய தளத்தின் சார்பிலும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வாழ்வில் கவலைகள் அகன்று பயம் நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வளமுடன் வாழ உங்கள் சார்பில் நான் மஹாபெரியவாளை மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்களில் ஒருவன்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square