Featured Posts

குரு ஸ்துதி


பெரியவா சரணம். ஆச்சார்யாள் கருணையில் அவ்வப்போது அடியேனை அழகுற அந்த மாஹேசனை ஸ்மரிக்கச் செய்யும் அன்பு அம்மா Saraswathi Thyagarajan அவர்களுக்கு எந்தன் நமஸ்காரங்கள். ஓர் இரவு அம்மாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "கண்ணா, திருச்சிற்றம்பலம்னு சொல்லிச் சொல்லி அந்த ஈச்வரனைப் பாடிய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பலனைத் தரும். அப்படியாக சுந்தரப் பெருமான் பாடிய மீளாஅடிமை-ன்னு ஆரம்பிச்சு எழுதப்பெற்ற பாடல் வலது இடது கண்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்க்குமாம். நீயும் பெரியவாளை பாடிக் கூப்பிடு. அதனைப் பாடுவோர்க்கெல்லாம் கண் சம்பத்தப் பட்ட பிரச்சனைகள் தீரட்டும் என்றார். விசேஷம் என்னவென்றால், அடியேன் இச்சமயம் சங்கர நேத்ராலயாவிலே உள்ளேன். அம்மாவுக்கு இது விவரம் தெரிய வாய்ப்பேயில்லை. பெரியவான்னா கருணாசமுத்ரமாச்சே. என்னைப்ன்பாட வைத்து எனக்கு அருள்புரிய வருகிறாரா? அதோடு கூடி அனைவரையும் ரக்ஷிக்கவும் செய்ய வருகிறாரா? அன்றைய இரவிலே அம்மாவுக்கும் Geetha Kalyan அம்மாவுக்கும் அனுப்பிய அந்த துதியினை இப்போது உங்களிஅமும் பகிர்கின்றேன். சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்! #ஸ்ரீகுருதுதி கண் வளம் பெற கண்மணியாம் கருணாகர சசிசேகர சங்கர துதி! மீளா அடிமை அருகாய் உணர்த்தும் உருவாய் வந்தோனே மீளா தெமக்கு மருள்சேர் வரத்தை இனிதாய் அளிப்பீரே மூளாத் தீயதும் சாடா திருக்கத் தாயாய் காத்திடவும் தாளாத் துயரெதும் சேரா தெம்மையும் காப்பாய் சங்கரனே! (1) ஏற்றுக் கொள்வீர்! ஆற்றித் தொழுதோம்; விரும்பிச் சரண்புகுந்தோம்; சுற்றம் ஏதும் உடையோம் யாமும் நின்பதம் தனையல்லால்; குற்றம் குறையும் அறியோம் வாழ்வில் குருவைத் தொழ விரைந்தோம்; கற்றோர் உறவால் கதியாம் உம்மைத் தொழுதோம் சங்கரனே! (2) நலம் இலாதெது நிறைவாம் வாழ்வினில் நின்னடி சேராமல்; வளம் புகாதோ வந்துமைச் சேர்வார் வரமாய் வாழ்விதுமே குலம் குன்றாத நிறைவாய் வாழ்ந்திட வரமாய் அருள்வோனே தலம் தலமாய் நடைபயின் றருளிய திவ்வியச் சங்கரனே! (3) திரியும் முப்புரம் எரித்தோன் அருளாய் தரணியில் வாய்த்தவனே வறியர் வாழ்வும் இனிதாய் மாற்றிட தருமம் உணர்த்திடவே அறிவாய் குருவாய் உருவாய் அமைந்தே அன்பும் நிறைத்தவனே பெரியோய் நின்னருள் பெறவே நித்தமும் பணிந்தோம் சங்கரனே! (4) மாயா மதியதும் விழா நிலையதும் வேண்டிப் பணிந்தனமே! சாயா தருமத் திருவென ஒளிரும் சங்கர குருபரனே! காயா மனமிதில் நிறைவாய் அருட்திரு சசிசேகர குருவே! தாயா யெம்நலம் காப்பாய் தன்னருள் புரிவாய் சங்கரனே! (5) கண்டதும் கேட்டதும் நின்திரு மகிமை உணர்த்துஞ் சத்தியமே மூண்டமும் மலமும் அகற்றும் பொன்னருள் புரியும் மா'தவனே கொண்டது வும்மைத் தந்தது மெம்மைச் சந்ததம் பெற்றனமே அண்டின மும்பதம் பற்றிய தெம்மனம் அருள்வாய் சங்கரனே! (6) வஞ்சனை வீண்பழி செய்வினை பிணியெதும் அண்டா நல்வாழ்வும் குஞ்சித சங்கரம் போற்றிட வரமாய் அமைந்திடுஞ் சத்தியமே அஞ்சுக அன்னையள் அரசாள் தலமுறை சசிசேகர குருவே துஞ்சுறு வேயுனை யனுதினந் துதித்தோம் கற்பகச் சங்கரனே! (7) வண்ணமு மெழிலுடை சிவபார்வதி யுமைச் சரண்புகுந் தாற்றினமே கண்ணிது நற்பொருள் கண்டிடக் காத்தருள் புரிவாய் கருணாளா பண்ணிது மேற்றுநல் லொளிதர வேண்டினம் அருள்வாய் குருநாதா எண்ணமு மெதனிலுந் தர்மமுஞ் செழித்திடக் காப்பாய் சங்கரனே (8) அன்றைய தினம் எழுதப் பெற்றதென்னவோ ஐந்து விருத்தங்கள் தாம்.. ஆனால் ஐயனோ இதனைப் பகிரும் தருவாயிம் அஷ்டகமாய் எட்டு விருத்தங்களோடு எழுதிடப் பணித்தனரோ! ஹே, மஹாபிரபு! மந்திரமும் தந்திரமும் யந்திரமும் சாத்திரமும் முற்றிலும் அறியாத சென்மம் எனது. சுந்தக்கண்ணனாம் பரமாத்மா மாயை காட்டி எம்மை தன்னிலே ஆட்கொண்டான் அன்று... இன்றோ சங்கரக் கண்ணனாய் இங்கே எம்மோடு பிறந்து வாழ்ந்து வழிசொல்லி வினைபுரிந்து வழிகாட்டி நல்லறம் உணர்த்தியத்தியதோடு, எம்க்கு நல்லோர் நட்பும், நிறையோர் வாழ்த்தும் கிட்டிடச் செய்து எம்மிலே நிறைந்து காக்க வந்த கருணாகரா! நின் பத்மபாதம் சரண் புகுந்து எல்லோருக்கும் கண்வளம் தந்து காப்பாய் க்ருபாகரா! என ப்ரார்த்தித்து, கண் வளம் பெற கண்மணியாம் கருணாகர சசிசேகர சங்கர துதியிதனை உங்கள்.அனைவரோடுமாக ஒருசேர அவர் தாள் வணங்கி அவரருள் ஏற்றிட வேண்டிப் பகிர்கின்றேன். சர்வமும் அவராலே! நம்முள் நிறைந்து நம்மை இயக்குபவர் அவரே! பூரண சரணாகதி அடையும் வல்லமை அவர் தந்தாலொழிய வேறுப்கதியில்லையே! அவர் அருளால் அவர் தாள் வணங்குவோம்! ஆனந்தம் எனும் முக்தியை இவ்வாழ்விலேயே அனுபவமாய் பெறுவோம்! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.