Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 - துருவன் பாகம்-II


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 - துருவன்

பாகம்-II

பிரதி திங்கட்கிழமை தோறும்

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் உறவின் அழகு

மகன் தோளுக்கு வரும் வரை தந்தை தோள் கொடுப்பார்

தோளுக்கு மேல் வளர்ந்தவுடன் மகன் தந்தைக்கு தோள் கொடுப்பான்

உறவின் அழகே இதுதானே

தந்தை துவளும் பொழுது தலை சாய்த்து அழ

ஒரு தோள் இல்லையென்றால்

இந்த உறவின் கொடுமையை என்னவென்று சொல்ல

உறவின் அழகை மீட்டெடுத்த மஹாபெரியவா அற்புதம்

இன்றைய சூழலில் வாழ்கை பூந்தோட்டமா? இல்லை போராட்டமா என்ற வினாவுக்கு பதில் என்ன தெரியுமா? வாழ்கை போராட்டமே என்னும் கசப்பான உண்மையை யாரும்மறுக்க இயலாதே. எனக்கு தெரிந்ததை உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள்.

பணமும் பொன்னும் பொருளும் வாழ்க்கைக்கு தேவைதான். இதோடு உறவின் ஸ்பரிசம் மனசாட்சி ஓரளவு நீதி நேர்மை இவைகளையும் கடைபிடித்து வாழுங்கள்.

பணத்தை தாண்டி பார்க்கக்கற்றுக்கொள்ளுங்கள்.வாழ்க்கையின் அழகு உங்களுக்கு புரியம்.. ஒருவர் வாழ்க்கையில் உறவு பலமாக இருந்தால் மீதம் உள்ள அத்தனையும் ஒரு சேர தன்னால் வந்து சேரும்.. உறவுகள் சீரழிந்து போனால் வாழ்க்கையே சீரழிந்து போகும். இதை நினைவில் வைத்துக்கொண்டு வாழக்கற்றுக்கொள்ளுங்கள். .வாழ்க்கையின் அழகு உங்களுக்கு புரியும்

இப்பொழுது நம்முடைய நாயகன் துருவன் வாழ்க்கைக்கு வருவோம். தாய் மகள் உறவு எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது தந்தை மகன் உறவு. இந்த உறவுகள் அனைத்தும் பிறப்பிலேயே சீரழிந்து விடுவதில்லை

குழந்தை வளர்ந்து உலக வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது தான் சீரழிந்து விடுகிறது. குழந்தை பிறந்து பேசஆரம்பிக்கும் பொழுது சரியாக பேசத்தெரிவதில்லை. சரியாக பேசத்தெரியாத பொழுது சரியாக பேசுகிறான். வளர்ந்து சரியாக பேசத்தெரிந்தவுடன் தப்பு தப்பாய் பேசுகிறான்.

இதுதான் இயற்கையின் நியதியா? மனிதனின் அணுகுமுறை மாறி விட்டதா? அல்லது கலியின் விஹாரங்களா? முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

துருவனும் தன்னுடைய மகன் பிறந்தவுடன் எத்தனை எத்தனை கனவுகளின் கற்பனையில் வாழ்ந்திருப்பார். நாட்களும் நகர்ந்தன. குழந்தையும் வளர்ந்தது. குழந்தை வளர்ந்த மகன் ஆனான். தாயும் மாமியாரும் குழந்தைக்கு சாதம் ஊட்டினார்களோ இல்லையோ தந்தை மகனுக்கு இடையே வெறுப்பை ஊட்டினார்கள். வெளிப்பட்ட வெறுப்பு நெருப்பாகமாறியது. உறவின் புனிதம் கெட்டது. தந்தைக்கும் மகனுக்கும் பகைமை கொழுந்து விட்டு எரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதையே தவிர்த்தனர்.

இது யார் செய்த குற்றம்? விதி செய்த குற்றமா ? இல்லை உறவுகளின் சதி செய்த குற்றமா.? இல்லை கலியின் விகாரங்களா? என்னை பொறுத்தவரை உறவுகளின் சதியும் கலியின் விஹாரங்களுமே உறவுகள் கெடுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. துருவன் சொந்தங்களின் சதி என்னும் வலையில் விழுந்து மாட்டிக்கொண்டார். துருவனின் மகனும் இந்த சதியில் மாட்டி கொண்டார்.

பிறக்கும் பொழுது கள்ளம்கபடமற்ற குழந்தை சதியில் விழுந்து கள்ளமும் கபடமும் கொண்ட குழந்தையாக மாறிவிடுகிறது. இந்த சமயத்தில்தான் துருவன் என்னிடம் வந்தார்.

ஒரு நாள் இரவும் பகலும் சந்திக்கும் வேளை. இரவு ஏழு மணிக்கு வந்தார். வெளியில் மழை கொட்டிக்கொண்டு இருந்தது.

யார் என்ன பார்க்க வந்தாலும் அவர்களுக்கு குளிர் பானங்கள் கொடுத்து அவர்களின் சங்கோஜத்தை போக்கி ஒரு நெருக்கத்தை வெளிக்கொண்டு வருவேன். அவரகள் கஷ்டங்களையோ ப்ரார்தனைகளையோ கேட்பதற்கு முன்னால் அவர்களை ஒரு பத்து நிமிட நேரம் மஹாபெரியவா முன் அமர்ந்து தியானம் செய்யச்சொல்வேன்.

இது போல் தியானம் செய்யும் பொழுது மஹாபெரியவா அவர்கள் மனதில் உள்ளதை அறிந்து கொள்வார்..அவர்கள் என்னிடம் அவர்கள் பிரார்த்தனைகளை சொல்லும்பொழுது ஒளிவு மறைவில்லாமல் சொல்லி விடுவார்கள்.இன்னும் சிலர் என்னிடம் பேசும்பொழுது அழுது விடுவார்கள்.

பிறகு அவர்களுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லி பிறகு பேச சொல்லுவேன். துருவனும் அழுதார். அவர் அழுததில் இருந்து பிரச்சனையின் ஆழமும் அடிநாதமும் எனக்கு புரிய ஆரம்பித்தது.

நான் நினைத்தது கடன் பிரச்சனையோ உடல் நலம் சம்பந்த்ப்பட்ட பிரச்சனையோ என்று தான் நினைத்தேன். ஆனால் துருவன் சொல்ல ஆரம்பித்தவுடன் தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

அவர் சொல்ல ஆரம்பித்தார். "எனக்கு இருப்பது ஒரே மகன். என் மனைவியும் மாமியரும் சேர்ந்து என் மகனுக்கு மனசில் எளிதில் போக்க முடியாத விஷத்தை விதைத்து விட்டார்கள். என்னுடன் என் மகன் பேசுவதையே தவிர்த்தான். என்னை ஒரு பரம வைரி போல் பார்க்கிறான்.. சமயத்தில் எனக்கு பயமாக இருக்கும்..

இப்பொழுது என் பையன் நல்ல வேலைக்கு போய் கைநிறைய சம்பாதிக்கிறான். என் மகன் எனக்கு வேணும் மாமா. நீங்கள் மஹாபெரியவாளிடம் பேசி எங்கள் மகன் தந்தை உறவை சரிப்படுத்தி எங்களை வாழ வைக்கவேண்டும்.

வெளியில் சொல்லமுடியாத இந்தப்பிரச்னையை உங்களிடமும் மஹாபெரியவாளிடமும் சொல்லிவிட்டேன்.மனசில் பாரம் குறைந்தது போல இருக்கு மாமா. நீங்கள் மஹாபெரியவாளிடம் எனக்காக பிரார்த்தனை செய்து குரு பூஜைக்கு உத்தரவு வாங்கிக்கொடுங்கள். நானும் மற்றவர்களை போல் வாழ்கிறேன். என்று கேட்டுக்கொண்டார்.

நானும் சரி துருவன். நான் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். எல்லாம் சரியாகி விடும்.எப்பொழுது என் இல்லத்தில் காலடி எடுத்து வைத்தீர்களோ அப்பொழுதே உங்கள் பிரச்சனை முடிவுக்கு வர அரபித்து விட்டது என்று அர்த்தம்.அவரும் என்னிடம் விடை பெற்று சென்றார்.

நானும் மறு நாள் காலையில் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது துருவனுக்காக அவர் சார்பில் பிரார்த்தனையை பின் வருமாறு சமர்பித்தேன்.

G.R.: "பெரியவா இன்று உங்களுடைய பக்தர் ஒருவர் வினோதமான பிராத்தனையுடன் வந்திருந்தார் பெரியவா,

பெரியவா: என்னவாம்?

G.R. பெரியவா அவருக்கும் அவர் மகனுக்கும் ஏழாம் பொருத்தமாம்.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதே இல்லை, பார்த்தாலும் ஏதாவது சண்டை வந்துவிடும்.

பெரியவா: ஆமாண்டா குழந்தையில் இருந்தே அவனுக்கு விஷத்தை ஊட்டி வளர்த்திருக்கா. இனிமேல் அவளே சொன்னாலும் இவன் கேட்க மாட்டான். இது அவளுக்கே கடைசிக்காலத்தில் வினையாக முடியும். இதை மத்தவாளுக்கும் சொல்லு. என்றார்.

G.R. துருவனுக்கு ஏதாவது அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா.என்றேன்.

பெரியவா: சரிடா அவனை ஒன்பது வாரம் குரு பூஜை பண்ண சொல்லு.என்றார்.

G.R. சரி பெரியவா என்று சொல்லி விடைபெற்றேன்.

துருவனும் இரண்டு நாட்கள் கழித்து என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். அன்றும் அவர் கலக்கமாகத்தான் இருந்தார். அவருக்கும் அவர் மகனுக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அவருக்கு ஆறுதலாக சில நிமிடங்கள் பேசிவிட்டு மஹாபெரியவா சொன்ன குரு பூஜையை பற்றி சொல்லி நம்பிக்கையுடன் செய்யுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி அனுப்பினேன்.

மறு நாள் துருவன் தன்னுடைய முதல் வார பூஜையை வியாழக்கிழமை அதிகாலையே எழுந்து செய்ய ஆரம்பித்தார். நல்ல படியாக முடிந்தது என்றார். நானும் எல்லாம் நல்ல படியாகவே முடியும் கவலை வேண