ஆதித்ய ஹிருதயம்
ஆதித்ய ஹிருதயம்

சூரிய பகவான்
மஹாபெரியவா ஒருமுறை பக்தரின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது ராமாயணத்தை பற்றி பேசி ராம ராவணன் யுத்தத்தில் ராமன் வெற்றி கொண்ட போதும் மனம் கலங்கி இருந்தாராம்.
காரணம் இராவணன் என்னும் ஒரு துஷ்டனுக்காக இத்தனை உயிர்கள் மடிய வேண்டுமா? மேலும் என் மனைவி சீதா தேவி ஒருத்திக்காக இவ்வளவு பெரிய யுத்தம் அவசியதானா ? என்று மனம் கலங்கி அமர்த்திருந்தாராம்.
அப்பொழுது அங்கு வந்த அகத்திய முனிவர் ராமர் மனம் கலங்கி இருப்பதை பார்த்து "ராமா நீ சூரிய குலத்தில் வந்தவன். ஆகவே சூரியனை வழிபட்டால் உன் மனக்கலக்கம் நீங்கும் என்று சொல்லி ஆதித்ய ஹிருதயம் ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்தாராம்.
ஆதித்ய ஹிருதயம் ஸ்லோகத்தை சொல்ல மனம் தெளிவு பெற்றாராம் மேலும் மஹாபெரியவா சொன்னது.:
நமக்கெல்லாம் கண்ணுக்கு தெரியும் கடவுள் சூரிய பகவான்.
ஆஞ்சேநேயருக்கு அத்தனை அற்புதமான பாடங்களை கற்றுக்கொடுத்தது சூரிய பகவான்.
இந்த பூலோகத்தில் உள்ள அத்தனை உயிர்களுக்கும் சூரியனின் ஒளி தேவை படுகிறது.
தை மாதத்தில் நம்முடைய இந்து மதத்தில் சூரிய பகவானுக்கென்றே வழிபாடு செய்யப்படுகிறது.
மேலும் இந்த கலியுகத்தில் மனித ஆத்மாக்கள் எவ்வளவு இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறார்கள். காலையில் இருந்து பொழுது சாயும் வரை வாழ்க்கையே ஒருபோராட்டம் தானே.
ஆதித்ய ஹிருதயம் சுலோகம் சொன்னால் நமக்கு என்னென்ன நிவாரணங்கள் கிடைக்கும்:
கலங்கிய மனம் தெளிவு பெரும்.
வாழ்க்கையில் பயம் அகலும்.
வீட்டில் அமைதி நிலவும்
விரோதிகள் மனம் மாற்றம் அடைந்து உங்கள் வழியில் இருந்து விலகி விடுவார்கள்.
விரோதிகள் உங்கள் முன் முடியாமல் மண்டியிடுவார்கள்
பாதை மாறிப்போன மனிதர்களும் குழந்தைகளும் மனம் தெளிவு பெற்று இதுதான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டு வாழத்தொடங்குவார்கள்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பணக்கஷ்டம் மனக்கஷ்டம் எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
வீட்டில் துர் சம்பவங்கள் நிகழாது.
இல்லமும் உள்ளமும் ஒளிபெற்று விளங்கும்.
சூரிய பகவானை எப்படி வழிபடுவது.?
பிரும்ம முகூர்த்தத்தில் எழுந்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு கைகளை கூப்பி கண்களை மூடி ஸ்லோகங்களை சொல்ல ஆரம்பிக்க வேண்டும். சூரியன் அடி வானிலிருந்து மேலே வரும் பொழுது முதலில் அருணோதயன் வருவார்.
அருணோதயன் என்பவர் சூரியனுக்கு தேரோட்டி.. சூரிய உதயத்தை உலகிற்கு அறிவிக்க முதலில் வருபவர் அருணன் என்னும் தேரோட்டி.. இதனால்தான் காலை வேளை இளம் சிவப்பு அடி வானத்திற்கு அருணோதயம் என்று சொல்கிறோம்.
பிரம்ம முகூர்த்தத்தில் சுலோகம் சொல்ல ஆரம்பித்து சூரியன் கண்ணுக்கு தெரியும் வரை ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.இறுதியில் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் வேண்டி சூரியனை த்யானம் செய்யுங்கள். கேட்டது கிடைக்கும் என்று மஹாபெரியவாளே சொல்லியிருக்கிறார்.
நீங்கள் முதல் சில நாட்களுக்கு இந்த காணொளியில் சொல்லும் ஸ்லோகத்தை புத்தகத்தை வைத்துக்கொண்டு கூடவே சொல்லிக்கொண்டு வாருங்கள் ஸ்லோகத்தை கேட்க கேட்க நீங்களே சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.
உங்கள் வாழ்வும் வளமும் என்றும் மங்காமல் நிறைவான வாழ்க்கை வாழ நானும் உங்களுக்காக என் ஆசான் மஹாபெரியவாளையும் சூரிய பாகவனயும் வேண்டிக்கொள்கிறேன்.. கீழே கொடுத்துள்ள்ள இணைப்பை பயன் படுத்தி காணொளியில் ஆதித்ய ஹிருதய ஸ்லோகத்தை கேளுஙங்கள்
https://www.youtube.com/watch?v=-wlj-GrOv_k
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்