Featured Posts

சங்கமம்- திருமண பரிவர்த்தனை இன்று பிறந்தது


இன்று சங்கமம்- பிறந்தது- திருமண பரிவர்த்தனை

குருவே சரணம் குரு பாதமே சரணம்

நூறு கண்ட மஹாபெரியவா

தம்பதியரை நூறு காண வாழ்த்துங்கள்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்

மஹாபெரியவா பக்த கோடிகளே உங்களுக்கு என் நமஸ்கரங்கள்.

என்னுடைய வழக்கமான பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் மஹாபெரியவாளிடம் நான் மிகவும் அதிகமாக வேண்டுவது திருமணம் சம்பந்தமான பிரார்த்தனைகள்தான். திருமண தாமதம் இரண்டாம் திருமணம் திருமணம் ஆன சில நாட்களில் திருமண முறிவு ஒரு குழந்தையுடன் இருக்கும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் திருமணம் இன்னும் எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.

எவ்வளவு நாட்கள் நான் தூங்கமுடியாமல் தவித்தேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். ஒரு புறம் இந்த அவலங்களை நினைத்து நெஞ்சு விம்மியது. மறுபுறம் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்னும் இயலாமை வாட்டியது.. என்ன செய்ய. எனக்கு இந்த உலகத்தில் எனக்கென்று இருக்கும் ஒரே ஆசான் மஹாபெரியவா தான்.. மஹாபெரியவாளிடம் ஒரு நாள் காலை பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டேன். .அந்த சம்பாஷணை உங்களுக்காக.

G.R. : பெரியவா:

பெரியவா: என்னடா ?

G.R. : பெரியவா எனக்கு மனசே சரியில்லை.. என்றேன்.

பெரியவா: உனக்கு என்னடா குறை. சொல்லு.

G.R. பெரியவா அந்தகாலத்திலே கல்யாணம் என்பது இரு குடும்பங்களுக்கு மட்டுமல்ல. இரு கிராமத்திற்கு இடையே நடக்கும் ஒரு வைபவமாகவே நடந்தது. அதுவும் ஐந்து நாட்கள் கல்யாணம். இரு இதயங்கள் வாழ்க்கை என்னும் சாகரத்தில் சங்கமிக்கும் ஒரு நல்ல நாள்.

பொன் பொருள் எல்லாமே முதன்மை இடத்தில் இல்லாமல் இரு குடும்பங்களின் ஒழுக்கம் தர்மம் நீதி சனாதன தர்மமும் சமுதாயத்தில் அந்த குடும்பத்தின் மதிப்பும் மாறியதாயுமுமே முதன்மை இடத்தில் இருந்தது. இன்றைய சூழலில் பாழாய் போன பணம் தங்கம் வீடு இவைகளே முதன்மை பட்டு நிற்கின்ற அவலத்தை என்னவென்று சொல்வது.

பெரியவா: இது எல்லாமே கலி காலத்தின் விகாரங்கள் விநோதங்கள்.நானும் இந்த அவலங்களை எதிர்த்து போராடிவிட்டுதான் போனேன். நீயும் போராடு. உனக்கு பிறகு யாராவது ஒருவர் போராடுவார். இது ஒரு தொடர்கதை. நீ நன்னா பண்ணு. நான் உன்னோடயே இருக்கேன்.

G.R. உங்களோட ஆசிகள் இருந்தால் எல்லாமே ஜெயம் தான் பெரியவா.

பெரியவா: இந்த கைங்கர்யத்திற்கு என்ன பேர் வைக்கப்போறே.

G.R. பெரியவா இரு இதயங்களின் சங்கமம் தானே திருமணம் என்பது. அதுனாலே இந்த கைங்கர்யத்திற்கு சங்கமம் அப்படின்னு பெயர் வைக்கலாம்னு நினைக்கிறேன்.

பெரியவா : பெயர் நன்னந்தான் இருக்கு. வெச்சு பேஷா பண்ணு. கல்யாணம்ங்கறது ஆயிரம் காலத்து பயிர் அப்படின்னு அந்தகாலத்துலே சொல்லவா. அந்த காலத்திலே அது உண்மையும் கூட. உன்னுள்ளே ஒரு சமுதாய சீர்திருத்தம் அப்படிங்கற நெருப்பு எரியறது எனக்கு புரியறது.. நன்னா பண்ணு. உனக்கு என்னோட வாழ்த்துக்கள் என்று சொன்னார்.

இன்று மஹாபெரியவா ஆசியுடன் சங்கமம் உதயமாகிறது. இது முழுக்க முழுக்க ஒரு மஹாபெரியவா கைங்கர்யமாக மட்டுமே செயல்படுகிறது

.

எனக்கு உங்கள் இல்லத்து திருமணத்தையே ஏற்று நடத்த வேண்டும் என்று ஆசை. என்னசெய்வது. என்னிடம் ஆசை மட்டும்தான் இருக்கிறது. ஆனால் எனக்குள் ஒரு சமாதானம். என்ன தெரியுமா அது.? என் ஆசைகளை மஹாபெரியவா ஆசிர்வதித்து கனவுகளை நினைவாக்கிக்கொண்டு இருக்கிறார்.

இந்த நம்பிக்கையிலும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் இந்த புதிய கைங்கர்யம் சங்கமத்தில் முதல் அடி எடுத்து வைக்கிறேன். வாருங்கள் நாம் எல்லோருமே சேர்ந்து தடம் புரண்ட நம்முடைய குடும்பம் என்ற காலத்தை வென்றக்கலாச்சாரத்தை மீண்டும் அரங்கேற்றுவோம்.

ஆண்டாள் ரங்கமானார் திருக்கல்யாணம்

நீங்கள் என்ன செய்யவேண்டும் தெரியுமா?

  1. உங்கள் வீடுகளில் உள்ள பெண்ணுக்கோ பிள்ளைக்கோ வரன் தேடும் முயற்சியில் நம்முடைய சங்கமத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

  2. இன்றய தேவைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுங்கள்.

  3. நம்முடைய முன்னோர்கள் குடும்பம் என்ற அமைப்பிற்கு முன்னுரை எழுதி விட்டு போனார்கள். குடும்ப அத்யாயங்களை நீங்கள் எழுதுங்கள். தயவு செய்து முடிவுரை எழுதி விடாதீர்கள்.

  4. உங்கள் பெண்ணோ பிள்ளையோ நிறைய படித்திருக்கலாம்.நன்றாகசம்பாதிக்கலாம். அதற்காக திருமணத்தை சந்தை படுத்தி விடாதீர்கள். பணம் என்பது இன்று உங்களிடம் இருக்கும். நாளை வேறு ஒருவரிடம் இருக்கும்.ஆனால் குணம் என்பது பரம்பரையில் வரக்கூடியது.ஒவ்வொரு குடும்பமும் குணத்தை முன் நிறுத்தி பணத்தை பின்னுக்கு தள்ளி திருமண வைபவத்தை நடத்தினால் குணம் வளரும்.பணமும் பின்தொடரும்.. சற்று சிந்தியுங்கள்.

  5. சங்கமத்தின் கொள்கைகள் வரை முறைகள் சுயகட்டுப்பாடுகள் ஆகியவைகளை படியுங்கள். படித்து விட்டு இன்று தனியாக கொடுக்கப்பட்டுள்ள "சங்கமம்-விண்ணப்படிவம்" பதிவில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களுக்கு பதில் கொடுத்து மீண்டும் பதிவு ஏற்றம் செய்யுங்கள். இதற்காகவே தனியாக ஒரு மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய இணைய தளத்தில் இருந்து பதிவு இரக்கம் செய்து பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் பதிவு ஏற்றம் செய்யுங்கள். விவரங்கள் சரிப்பர்கப்ட்டு பிறகு நம்முடைய இணையதளத்தில் "சங்கமம் -வரன்கள் " என்ற பகுதியில் உங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெளியிடப்படும்..

Periyavaarul.sangamam@gmail.com

  1. திங்கள் கிழமையிலிருந்து ஞாயிற்று கிழமை வரை எல்லா நாட்களிலும் பிள்ளைகளின் விவரங்கள் வெளியிடப்படும்.

  2. உங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எங்களுக்கு கிடைத்த நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும். ஏதோ ஒரு காரணத்தால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள தகுதி இல்லாம இருந்தால் அந்த விண்ணப்பத்தை நிராகரிக்க இந்த இணைய தளத்திற்கு சகல உரிமைகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

நாம் இதுவரை அரங்கேற்றிய கைங்கர்யங்களைவிரல் விட்டு எண்ணிவிடலாம் என்றாலும் கூட கிடைத்த பாராட்டுகளும் உற்சாக வார்த்தைகளும் நாம் செல்லும் பாதை சரியே என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இதுவும் என்னுடைய ஒரு விரலில் பிரசவிக்கும் கைங்கர்யம் தான். என் ஒரு விரலில் வாசம் செய்துகொண்டு மஹாபெரியவா செய்யும் அற்புதங்களுக்கு அளவே இல்லை.இது ஒரு விஸ்வ கர்மா சிருஷ்டி, இதுவும் விண்ணை தொடும் என்பதில் சந்தேகமில்லை.

வயதான காலத்தில் பெற்றோர்கள் படும்அவஸ்தைக்கு நம்மால் ஆன ஒரு சிறு உதவி. இந்த கைங்கர்யத்தை உங்கள் சொந்தங்களிடமும் சுற்றங்களிடமும் நட்பு வட்டாரங்களிடமும் சொல்லுங்கள்.