top of page
Featured Posts

என் வாழ்வில் மஹா பெரியவா- feedback from Mrs.Prema Mohan


என் வாழ்வில் மஹா பெரியவா- feedback from Mrs.Prema Mohan

மஹா பெரியவா சரணம். மாமாவிற்கு எனது நமஸ்காரங்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில் அடுத்து என்ன செய் வது என திகைத்த நிலையில் நின்றபோது பெரியவா அனுக்கிரகத்தால் ஜி.ஆர். மாமா வுடன் ஆன முதல் சந்திப்பில் "என் வாழ்வில் மஹா பெரியவா" புத்தகத்தை மாமாவின் கையால் பெற்றுகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

மிக எளிமையான நடையில் மாமாவின் வாழ்வில் பெரியவா நிகழ்த்திய அற்புதங்களை மாமா பதிவு செய்த விதம் மிகவும் அருமை. பத்ரிநாத் புனித யாத்திரையில் மாமா எதிர் கொண்ட இன்னல்களை மஹா பெரியவா அருளால் அவர் கடந்து வந்த வித்திலேயே பூர்ணமான நம்பிக்கையுடனும் உண்மையான பக்தியுடன் மஹா பெரியவாளை சரணடைந்தால் அவர் நம்மைக் காப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் புத்தகம் நம் அனைவருடைய இல்லங்களில் பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. மாமாவின் இந்த படைப்பு எல்லோரையும் குறிப்பாக இளம் வயதினரிடம் சென்று சேர வேண்டும் என்ற விருப்பத்துடன்(அவர்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தி கொள்ள உதவும்) பெரியவா பக்தர்களின் நலனுக்காக தன்னலம் இல்லாமல் அவரிடம் பிரார்த்தனை செய்யும் ஜி.ஆர. மாமா அவர்களின் தேக ஆரோக்கியத்திற்கும் நிம்மதியான வாழ்கைக்கும் மஹாபெரியவாளை பிரார்த்திக்கிறேன்.

.

மஹா பெரியவாளின் அநுக்ரஹத்தினால் தான் மாமாவை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது என இப்போது புரிகிறது.அவருடைய முக்கியமான பணிகளின் நடுவே அவரை சந்தித்த போது அவருடைய பரிவான அணுகுமுறையும் அன்பான வார்த்தைகளும் நமக்குள் மன அமைதியையும் தெளிவையும் ஏற்படுத்துவதைஉணர முடிகிறது.

மஹா பெரியவா அருளுடன் மாமாவின் இந்த தெய்வீக இறைபணி என்றும் தொடரவேண்டும் .

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

இப்படிக்கு பிரேமா மோகன்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page