top of page
Featured Posts

Feed back on என் வாழ்வில் மஹாபெரியவா by Mrs.Savitha Muralidhar


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர மஹாபெரியவா பாதமே சரணம்

"இவன் வேறு தொழில் செய்து பணம் சம்பாதித்து, இந்திரிய சுகங்களில் விழுந்து விடக்கூடாது .பணம் சம்பாதிக்கிற லக்ஷ்யம் இவனுக்கு உதவாது.பரம தியாகியாக ,லோக க்ஷேமார்த்தமாக ,வேத ரக்ஷணம், கர்மாநுஷ்டானங்கள் செய்து கொண்டே காலம் கழிக்க வேண்டும்"

தெய்வத்தின் குரல் --முதற்பகுதி . பக்கம் :260 .

நமஸ்காரம்.GR சாரின் முதல் புத்தகமான "என் வாழ்வில் மஹாபெரியவா ;பாகம் -1 " வெளியாகி நல்ல முறையில் பக்தர்களிடம் சென்று அடைய ஆரம்பித்துள்ளது.இதை படித்த அன்பர்கள் மனம் விட்டு எழுதியுள்ள பதிவுகளை படிக்கும் போது நானும் என் எண்ணங்களை பதிவு செய்ய விரும்பினேன்.

ஒரு அந்தணனுக்கு உரிய லக்ஷணங்களை மஹாபெரியவா மிகவும் விரிவாக விளக்கியுள்ளார்கள் .அதில் மேலே நான் குறிப்பிட்டுள்ள வாக்கியங்கள் GR சாருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். சாரின் ஒரு விரல் பிரசவிக்கும் அற்புதங்கள் மஹாபெரியவாளின் உத்தரவு தான் என்பது அனைவருக்கும் புரியும்.

முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை ஒவ்வொரு வார்த்தையும் பட்டை தீட்டிய வைரம் தான். பெரியவா அனுக்கிரஹம் வேறு எப்படி இருக்க முடியும்?? இதில் முதல் 35 அத்தியாயங்கள் தான் அடக்கம் .ஏற்கனவே நாம் இணையத்தில் படித்தது தான். பின் எதற்காக மீண்டும் புத்தகமாக படிக்க வேண்டும்?

எந்த வகையில் வந்தாலும் அது மஹாபெரியவா அனுகிரஹத்தில் GR சாரின் எழுத்துக்கள். கையடக்கமான இந்த நூலை எங்கும் எடுத்து செல்லலாம்.கணினி பிடிபடாத பெரியோர்கள்; உபயோகிக்க தெரிந்தாலும் தனக்கென தனி கணினி இல்லாமல் இதை படிக்க துடிக்கும் ஆத்மாக்கள் எல்லோருக்கும் இது ஒரு வரப்பிரசாதம் .

தவிர,இதை புத்தக வடிவில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது மஹாபெரியவா உத்தரவு. இந்த ஒரு காரணம் நமக்கு போதாதா இந்த புத்தகத்தை வாங்க? இது மஹாபெரியவா பிரசாதம் .இந்த நூல் நம் இல்லத்தில் இருந்தாலே பெரியவா அனுக்கிரஹம் நமக்கு கிடைத்து விட்டது என்றே பொருள்.

நம் மனதில் ஒரு கலக்கம் என்றால்,இதை எடுத்து படித்தாலே நமக்கு பதில் கிடைத்து விடுகிறது."தெய்வத்தின் குரல் " போல ,"ஏணிப்படிகளில் மாந்தர்கள் " போல .இது மிகையல்ல நிஜம்.காரணம், இதுவும் மஹாபெரியவா நமக்கு கொடுத்த கருணை பரிசு.ஒவ்வொரு நொடியும் GR சாரின் அருகிலேயே இருந்து காக்கும் தெய்வம் சாரை மட்டுமல்ல நம் அனைவரையும் தான் காக்கிறது.

இந்த புத்தகம் மூலம் வரும் தொகை ஒரு பகுதி SMART TRUST இற்கு போவதால் அதன் மூலம் சார் செய்யும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் நாமும் மஹாபெரியவா அருளால் கைங்கர்யம் செய்தவர்கள் ஆகிறோம்.ஜி.ஆர் .சாரின் தொலைநோக்கு பார்வையில் ,கோ சம்ரக்ஷணம் ,வேத ரக்ஷணம் ,நலிந்த கோவில்களின் புனருத்தாரணம் ,உபநயனங்கள் ,திருமணங்கள்,வேலை வாய்ப்பு,"சங்கமம் " மூலம் ஜாதக பரிவர்த்தனை என்று அவர் மனதில் ஓடும் திட்டங்கள் காட்டாறு போல பெருக்கெடுத்து செல்கிறது. மஹாபெரியவா கருணையால் எல்லாமே கைகூடும்.இதன் முதல் கட்டமாக நம்மால் முடிந்தது இந்த நூலை வாங்கி மஹாபெரியவா பக்தர்களுக்கு பரிசளிப்போம்.

மஹாபெரியா அருளால்,மேலும் பல பாகங்கள் வெளி வந்து அனைவரும் பயன் பெற "அவன் அருளாலே அவன் தாள் பணிவோம் "

Hara Hara Sankara Jaya Jaya Sankara

என்றும் உங்கள்

சவிதா முரளிதர்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page