Featured Posts

குருப்புகழ்


பெரியவா சரணம்.

நம்முடைய பிரார்த்தனையிலே தர்மம் நிலைக்குமானால் உடனே ஓடோடி வந்து அருளும் கருணையுள்ள குருவான நம் உம்மாச்சீ, ஸ்ரீமஹாபெரியவாளை, அந்த ஜகன்மாதாவுக்கு ஒப்பாகச் சொல்வதே, அவர் அருள்வதற்காக அவதாரம் எடுத்தவர் என்பதனால் தானே! உலகிலேயே மிகப்பெரிய தர்மம் எனச் சொன்னால் நாம் அறியாத ஒருவருடைய தெரியாத கஷ்டங்களும் நீங்கி அவர்களும் சுகமாக வாழ்வழி வேண்டி பிரார்த்திப்பது என்பரே நம் ஆன்றோர்கள். அதிலும் கூட்டுப்ரார்த்தனைக்கு கோடி பலனுண்டு என்பரே! இன்றைய தினம் ரோகங்களினாலே அவதியுரும் அத்துனை உறவுகளும் ரோக நிவாரணம் பெற்று பலவானாக, தர்மவானாக, தூயோனாக, ஆனந்தமாக வாழ்தல் வேண்டும் என்பதாக பிரார்த்திப்போமே! அன்புச் சகோதரி ஒருவர் தனது கணவனுக்கு உடல் நிலை சரியில்லாததாலே மன வருத்தத்தோடு அடியேனைத் தொடர்பு கொண்டார். உம்மாச்சீ தாத்தா தான் கதி; அவரோட கருணை என் கணவரையும், தகப்பனையும் காப்பாற்ற வேண்டும் என வேண்டுதலை முன் வைத்தார்கள். மனம் கலங்க, இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவளுக்கு இப்படியொரு நெருக்கடியா? ஒரே நேரத்தில் ஒரு புறம் கணவர்; மறு புறம் தந்தையார் என அவதியுறும் அந்த உறவுக்காக மனம் ஏங்கி ப்ரார்த்திக்கின்றேன் அந்த மஹாதேவனிடத்திலே! உங்கள் ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் அவளுக்கு உறுதுணையாக இருந்து அவள் ஆனந்தமாக வாழ வேண்டும். நம் பிரார்த்தனையிலே தர்மமுண்டு; காரணம் முகமறியாத ஒரு உறவுக்காக அவளுக்கிருக்கும்படியான சோதனையிலிருந்து அவள் மீண்டு ஆனந்தமாக வாழவேண்டும் எனபதே! எனவே அனைவரும் அடியேனுடனாக பிரார்த்திப்பீர்கள் என்பதிலே அடியேனும் ஐயமேதுமில்லையே! இந்தக் குருப்புகழைப் படித்த ஒவ்வொரு மனமும் அவளுறவுகள் நலம் பெறவேண்டுமென ஐயனிடத்திலே ஒரு நொடியேனும் கண்களை மூடிப் ப்ரார்த்தனை செய்யுங்களேன்! இந்த பிரார்த்தனை அவளுக்கும் மட்டுமா? இதுபோலே அவதியுறும் அனைவருக்குமாகத் தானே! சங்கரம் போற்ற சங்கடம் விலகிடும் – சத்தியம். சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர… #குருப்புகழ் ......... சந்தம் ......... தனனந் தனன தந்த ...... தனதான தனனந் தனன தந்த ...... தனதான ......... பாடல் ......... இடரும் துயர மிங்கு … வெகுண்டோட உளமுங் கதறி வந்து …. வுனைநாடி சுடருங் கழல்ப ணிந்து ….. அடியேனும் அபயம் பெறுவ தென்று … அடிபேண கடமுள் படரி முந்து ….. வினையாவும் அகலும் வரமு மிங்கு …. தருவாயே கதியும் தருவ னென்ற … குருநாதா ஒளிரும் காஞ்சி நின்ற …. பெருமாளே!

புண்ணிய க்ஷேத்திரமான காஞ்சியிலே, அழகு வனிதையாம் காமாக்ஷி ஆண்டருளும் தலத்திலே உறையும் அமுதத்தெய்வமான நம் ஆசார்யர்களுடைய அனுக்ரஹத்திலே எல்லோரும் நலமோடு வாழ உங்கள் அனைவரோடுமாக ஒருசேர நின்று பிரார்த்திக்கின்றேன். குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts