Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -068


என் வாழ்வில் மஹாபெரியவா -068

பிரதி வியாழன் தோறும்

மஹாபெரியவா சங்கல்பம்

செய்து கொண்ட மாத்திரத்தில்

இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி விடுகிறது

சங்கல்பத்தை நிறைவேற்ற

இசையை சங்கல்பித்துக்கொண்டார்

இசையே அவர் முன் வந்து நின்ற அற்புதம்

இந்த பதிவை படித்து அற்புதத்தை அனுபவியுங்கள்

என் வாழ்க்கையை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று மஹாபெரியவா என்னை ஆட்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு.. இரண்டு. ஆட்கொண்ட நாள். மூன்று ஆட்கொண்ட மறு நாள்.

மஹாபெரியவா என்னை ஆட்கொண்ட நாள் ஒரு மாற்றத்தை எனக்குள் உண்டு பண்ணியது. நானும் மாற்றத்தை உள் வாங்கி என்னையும் அறியாமல். மாற்றத்தை நோக்கிய என் பயணத்தை தொடர்ந்த நாள். பயணம் புதிது.. பாதை புதிது. செல்லும் பாதையில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் புதிது. அனுபவங்கள் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல..

நான் ஒரு புதிய உலகத்தில் பிரவேசிப்பதை என்னால் உணர முடிந்தது. புதிய உலகம் என்றாலே ஒரு வித சொல்லத்தெரியாத பயமும் அச்சமும் இருக்குமல்லவா?.

ஆனால் இந்த மாற்றத்தில் எனக்கு ஒரு பயமோ அச்சமோ நிச்சயமாக இல்லை. என் கண்களில் காண்பவர்கள் எல்லோருமே என்னுடைய சக ஆத்மாவாகத்தான் என்னால் பார்க்க முடிந்தது. இதுவரை இப்படி ஒரு உலகத்தை என் வாழ்நாளில் அனுபவித்தது இல்லை.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால் என் அனுபவம் பயணிக்கும் பாதை எல்லாமே புதியதாக அமானுஷ்யமான இருந்தாலும் நான் பயமின்றி அம்மாவின் மடியில் படுத்திருக்கும் குழந்தையின் பயமற்ற நிம்மதியான மன நிலையில் தான் இருந்தேன்.

இந்த மாற்றம் என் சிந்தனைகளை மாற்றியது. எண்ணங்களை மாற்றியது. பேசும் வார்த்தைகளை மாற்றியது. செயல்களை மாற்றியது. என்னையும் அறியாமல் எண்ணங்கள் செயல் படுத்தப்பட்டு கனவுகள் நினைவுகளாக மாறும் அற்புதங்கள் அரங்கேறின.

எனக்குள் தோன்றியது என்ன தெரியுமா?. இவ்வளவு அற்புதங்கள் அரங்கேற வேண்டுமானால் நான் பல வருடங்கள் காட்டில் தவம் செய்து இயற்கையையும் இறைவனையும் அறிந்து புரிந்து நான் எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஒன்றாக கலந்தால் தான் முடியும்.. எனக்கு அவ்வாவு சக்தி எல்லாம் கிடையாது. மஹாபெரியவா தன்னுடைய தவ வலிமையை என்னுடன் பங்கு போட்டுக்கொண்டு விட்டார்களா?. ஒன்றும் புரியவில்லை.

ஆனால் ஒன்று நிச்சயம். மஹாபெரியவா சொல்லிக்கொடுத்தபடி சரீர சுத்தியும் ஆத்ம சுத்தியும் அடைந்து தூமையான மனதில் ஒன்றை சங்கல்பித்து கொண்டால் அந்த சங்கல்பத்தை மஹாபெரியவா நிச்சயம் நிறையவேற்றி தருவார் என்பது என்னுடைய அனுபவ உண்மை.

எப்பொழுது உள்ளம்

வெண்மையின் புனிதத்தை அடைகிறதோ

அடுத்த நொடி

அந்த மனதை இறைவன் திருடி விடுகிறான்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்,

  1. என்னுடைய புற்று நோய் முற்றிலுமாக குணமடைய வேண்டுமென்ற சங்கல்பம். குஎணமடைந்தது.

  2. என்னுடைய லௌகீக வாழ்க்கையில் இருந்த கவலைகள் முற்றிலும் என்னை விட்டு அகல வேண்டும் என்ற சங்கல்பம். அகன்றது.

  3. நடு இரவில் அடுத்த நாள் பூஜைக்கு புஷ்பம் வேண்டும் என்ற சங்கல்பம்.

புஷ்பமும் கிடைத்தது.

  1. நான் மற்றவர்கள் நலனுக்காக செய்யும் பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் சங்கல்பங்கள் எல்லாமே நிறைவேறிக்கொண்டிருக்கும் அற்புதங்கள்

இன்னும் எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் சமீபத்தில் மஹாபெரியவா எனக்கிட்ட உத்தரவு அந்த உத்தரவை நான் சங்கல்பித்து கொண்ட இருபத்தி நாலு மணி நேரத்தில் நிறைவேறிய அற்புதத்தை இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இனி அற்புதத்திற்குள் நுழைவோம்.

சென்ற மாதத்தில் ஒருநாள் காலை பொழுது பிரும்ம முகூர்த்த நேரம் என் மற்றவர்களுக்காக செய்யும் பிரார்த்தனைகள் முடிந்த நேரம். நான் மஹாபெரியவாளிடம் விடை பெற்று அன்றைய நாளை துவங்கும் நேரம்.

மஹாபெரியவா வழக்கம் போல் என்னை அழைத்தார். இனி சம்பாஷணை உங்களுக்காக.

பெரியவா: ஏண்டா!

G.R: சொல்லுங்கோ பெரியவா.

பெரியவா: ஏண்டா நீ எல்லோருடைய கஷ்டங்களையும் என்னிடம் சமர்ப்பித்து தீர்வு கேக்கிறாய். உனைத்தேடிண்டு இவ்வளவு பேர் வராளே. யாரையாவது இரண்டு கீர்த்தனைகளை பாட சொல்லி கேட்டால் எனக்கும் மனசு லேசாகும். உனக்கும் ஒரு ஆத்ம சந்தோஷம் கிடைக்கும் இல்லையா.? யாரையாவது பாடச்சொல்லேண்டா.

G.R: பெரியவா உங்கள் முன்னாடி யாராவது பாட வேண்டுமானால் அவர்கள் சங்கீதத்தில் ஓரளவிற்கு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் எனக்கு யாரைத்தெரியும். இந்த நொண்டி எங்கே போய் தேடுவேன். யாரை கேப்பேன், ஒன்னும் தெரியல்லையே பெரியவா.

பெரியவா: நீ எங்கயும் நொண்டின்னுடு போக வேண்டாம்.உன்னைத்தான் ஆத்ம சுத்தி பண்ணியிருக்கேன். மனசுலே சங்கல்பம் பண்ணிக்கோ. உன்னை தேடிண்டு என் பக்தாள் வருவா.அவாளிடம் சொல்லு அவா படுவா என்றார்.

G.R: சரி பெரியவா. நான் வரவா கிட்டே கேடிக்கிறேன் என்று சொல்லி விடை பெற்றேன்.

எனக்கும் ஒன்றும் புரியவில்லை. எந்த சங்கீத வித்வான் நான் உங்காத்துலே பாடறேன்னு வரப்போறா. பெரியவா பாட்டுக்கு சொல்லிட்டா என்று எனக்குள் சொல்லிக்கொண்டே அன்றைய நாளை கழித்து கொண்டிருந்தேன்.

அன்று இரவு வரை ஒன்றும் நடக்கவில்லை. என்னை தேடிண்டு யாரும் வரவில்லை. எனக்கு அன்றைய பொழுது . வழக்கம் போல் முடிந்தது. என் வேலைகளை எல்லாம் முடித்தேன்.

காலை பத்து மணி இருக்கலாம்.. அப்பொழுது தான் நான் பக்தர்களை பார்க்கும் நேரம் துவங்கும். .வீட்டின் அழைப்பு மணி அழைத்தது. நான் சென்று கதவை திறந்தேன். வெளியில் ஒரு பக்தர் தன்னுடைய மனைவியுடன் நின்று கொண்டிருந்தார். அவரின் தோற்றத்திலேயே தெரிந்தது அவர் மிகவும் சாத்வீகமான ஒரு வாலிபன் என்று. மனைவியுடன் நின்று கொண்டிருந்தார்.

அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தேன். வழக்கமாக என்னை பார்க்க வருபவர்களை நான் இயற்கு முன் பார்த்திருக்க மாட்டேன். இருந்தாலும் எல்லோரையும் மிகவும் வாத்சல்யமாக அழைத்து கனிவுடன் அவர்களிடம் அவர்ளை பற்றி ஒரு சில விவரங்கள் கேட்பேன்.

வந்தவர்களை சந்திக்க மறுப்பதில்லை

வராதவர்களை நிந்திப்பதும் இல்லை

அப்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்த பொழுது அவர்கள் என்ன வேலையில் இருக்கிறார்கள் என்பதை எல்லம் . சொல்லிவிட்டு அமர்ந்திருந்தார்கள்.

வந்தவரின் மனைவி மட்டும் தன்னை அறிமுக படுத்திக்கொள்ளும் பொழுது தான் ஒரு பாடகி என்றும் தன்னுடைய சகோதரியும் ஒரு பாடகி என்றும் தாங்கள் ஒரு இரட்டை குழந்தைகள் என்றும் தாங்கள் இருவருமே தொழில் முறை பாடகிகள். பல நாடுகளுக்கு சென்று பாடிக்கொண்டிருக்கிறோம். பல தொலை காட்சி நிலையங்களில் பாடிக்கொண்டிருக்கிறோம்.என்று தன்னை அறிமுகபடுத்தி முடித்தார்.

என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் மஹாபெரியவா என்னை பார்த்து இடுப்பில் கை வைத்து கொண்டு சிரித்துக்கொண்டே நின்றார்.

எனக்கு அந்த நொடி என் மனக்கண்ணில் ஓடிய காட்சி என்ன தெரியுமா ?

குழந்தை கண்ணன் விஷமம் செய்து விட்டு ஒரு குறும்பு சிரிப்பு செய்து கொண்டே இடுப்பில் கை வைத்துக்கொண்டு யசோதையை அழவைப்பானே. அதை போல் நான் உணர்ந்தேன்.

அந்த நொடியில் மஹாபெரியவா எனக்குள் இருந்து இவா கிட்டே கேளு என்கிறார். மஹாபெரியவளே சொல்லிவிட்டார். கேட்டு விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.

நான் அவர்களிடம் கேட்டேன். எங்காத்து மஹாபெரியவா முன் கைங்கர்யமாக இரண்டு மூன்று கீர்த்தனைகள் பாட முடியுமா என்று கேட்டேன்.கரும்பு தின்ன கூலியா மாமா. நிச்சயம் நானும் என் சகோதரியும் வந்து படறோம். என்னிக்கு வரணும்னு மட்டும் சொல்லுங்கோ என்றார்.

மீண்டும் மஹாபெரியவா சொல்கிறார். வெள்ளிக்கிழமை வந்து அம்பாள் மேலே பாட சொல்லுடா என்றார்.