மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-063

தெரிந்தது கடுகளவு தெரியாதது கடலளவு இது மானிடர்களுக்கு பொருந்தும் நீயே ஒருகடல் அதில் சிறு துளி நாங்கள் எங்கும் நீ எதிலும் நீ பிரபஞ்சமும் நீ உனக்கு தெரியாதது என்றும் ஒன்று உண்டோ?
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-063
பிரதி செய்வாய்க்கிழமை தோறும்

கணபதி ஹோமம்
முழு முதல் கடவுள் விநாயகப்பெருமாள்
உலகில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. அத்தனை மதங்களுக்கும் தாய் மதம் தான் இந்து மதம். .இந்து மதம் பல பரிமாணங்களை கொண்டது.அஹிம்சை ஜீவ காருண்யம் நீதி நேர்மை வாழும் தர்மங்கள் என்னும் எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மதமும் இந்து மதத்தின் ஒரு பரிமாணத்தை மட்டுமே எடுத்து கொண்டு அந்த மதத்தின் கொள்கையாக ஸ்தாபித்தார்கள்.
இந்து மதத்தின் மற்றும் ஒரு சிறப்பு விண்ணுலகையும் மண்ணுலகையும் இணைக்கும் யாகம் ஹோமமம் போன்றவற்றை உருவாக்கி தேவர்களையும் மனிதர்களையும் இணைக்கும் பலமாக ஹோமத்தை உருவாக்கினார்கள்.. ஒவ்வொரு ஹோமத்திற்கும் ஒரு மந்திரம், செய்யும் முறை போன்றவற்றையும் உருவாக்கி கொடுத்தார்கள்.
ஹோம மந்திரங்களை ஒருகுறிப்பிட்ட சபதத்துடன் உச்சரித்தால் உச்சரிக்கப்படும் சப்தம் விண்ணிலும் பயணம் செய்யக்கூடிய சக்தியை பெற்று விடுகிறது. அந்த மந்திரத்திற்கு தொடர்புள்ள தேவர்களையும் கடவுள்களையும் சென்று அடைந்து விடுகிறது நாம்.என்ன வேண்டுகிறமோ அதை தேவர்கள் நேரிலேயே வந்து நாம் கொடுக்கும் அவிர் பாகத்தை பெற்றுக்கொண்டு நமக்கு வேண்டியதை கொடுத்து விட்டு செல்வார்கள்..

இந்த தொடரில் நாம் பல விஷயங்களை தெரிந்து கொள்ளப்போகிறோம்.அவைகளில் முதலில் கணபதி ஹோமம் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
விநாயகர் முழு முதல் கடவுள். விக்னம் அற்றவன் என்பது நமக்கெல்லாம் தெரியும்.நம்முடைய இல்லங்களிலும் அலுவலகங்களிலும் புதியதாக ஏதாவது ஒன்றை துவங்கி வேண்டுமானால் நாம் முதலில் செய்வது கணபதி ஹோமம்..
கணபதி ஹோமத்தை செய்கிறோமே தவிர செய்து வைப்பவருக்கும் செய்பவர்களுக்கும் சரி. அதனுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமலே ஒரு இயந்திர கதியில் செய்து விடுகிறோம். ஒரு சில விதி விலக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். ஆனால் விதி விலக்குகள் எல்லாம் விதியாகி விடாதே..
கணபதி ஹோமத்தை பற்றி மஹாபெரியவா ஒரு பாமரனுக்கு கூட புரியும் வண்ணம் சொல்லியிருக்கிறார்.. மஹாபெரியவா என்ன சொன்னார் என்று பார்ப்போம்.
பொதுவாகவே ஹோமங்கள் என்பது நமக்கும் பிரபஞ்சத்தில் இருக்கும் சக்திகளுக்கும் தொடர்பு கொள்ளும் ஒரு பாலம் போன்றது. ஹோமம் செய்யும் பொழுது அதில் இருந்து வரும் தீ ஜவாலைகள் சாட்சியாக ஹோமத்திற்கு வருகை தரும் தேவர்கள் தங்களுக்குண்டான அவிர் பாகத்தை பெற்றுக்கொண்டு நாம் வேண்டியதை நமக்கு தந்துவிட்டு செல்வார்கள். இது சத்தியம்.
ஆத்மார்த்தமாக ஒரு ஹோமத்தையோ பூஜையையோ செய்யும் பொழுது அக்னி சாட்சியாக அங்கு தேவர்கள் வருவார்கள். வரும் தேவர்களை நாம் பக்தி சிரத்தையுடன் வரவேற்று பூஜை செய்து அவேகளுக்கு சேர வேண்டியதை கொடுத்து விட்டால் நம் வேண்டுதல்களுக்கு அவர்கள் பதில் கொடுத்து விட்டு செல்வார்கள்.
ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்கு பிரபஞ்சத்தில் பயணம் செய்து அடைய வேண்டிய இலக்கை அடைந்து அழைப்பவர்களை அழைத்து வேண்டியவற்றை வாங்கி கொடுத்து விடும்.சக்தி இருக்கிறது.
உதாரணமாக நாம் வீட்டிலிருக்கும் தொலை காட்சி பெட்டிகளில் உலகின் ஒரு மூலையில் நிகழும் நிகழ்வுகளை அதே வினாடி மறு முனையில் பார்த்து ரசிக்கிறோம். கண்ணுக்கு தெரியாமல் தொடர்பு சாதனங்கள் எதுவுமில்லாமல் இந்த நிகழ்வு நிகழ்கிறதே.
அதே ;போல் வானில் கண்ணுக்கு தெரியாமல் பிரபஞ்ச சக்திகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. நாம் அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொழுது நம் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்கிறார்கள்..
கணபதி ஹோமத்தை கண்டுபிடித்தது யார்? செயல்படுத்தியது யார்?
கணபதி ஹோமம் என்று சொல்லும்பொழுதே அதற்கு பின்னால் இருக்கும் இருவரை நாம் மறக்க முடியாது. ஒன்று கணபதி ஹோமத்தை உருவாக்கியவர் கனக ரிஷி என்பவர். இவர் தவம் வேள்விகள் யாகம் போன்றவற்றை இரவு பகல் என்றில்லாமல் தொடர்ந்து இறைவனை அணுகி இந்த கணபதி ஹோமத்தை உருவாக்கினார்.
இரண்டாவது கனக ரிஷி உருவாக்கிய கணபதி ஹோமத்தை செயல் படுத்தியவர் க்யாஷிப ரிஷி. கணபதி ஹோமத்திற்கு செய்ய வேண்டிய க்ரமங்கள் முறைகள் எல்லாவற்றையும் உருவாக்கி செயல் படுத்தியவர் க்யாஷிப ரிஷி.
கணபதி ஹோமத்தை பக்தி சிரத்தையுடன் செய்தால் ஹோமத்தில் இருந்து வரும் தீ ஜிவாலையில் யானையின் உருவம் அசைத்து வருவதை காணலாம்.யானையின் நான்கு கால்கள் மற்றும் வயிறு பெருத்த உருவம் தெரியும். இது தெரிந்து விட்டால் நாம் செய்யும் ஹோமத்தின் புனிதம் தெரிந்து விடும்.
ஹோமத்தில் சீந்தில் கொடியின் தண்டுகளை ஒடித்து போடுவார்கள். இந்த சீந்தல் கொடியின் தண்டுகளில் இருக்கும் ஈரம் ஹோமத்தில் மற்ற பொருள்களுடன் கலக்கும் பொழுது அங்கு ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இந்த ரசாயன மாற்றம் கொண்ட ஹோம புகை நம்மீது படும் பொழுதும் நாம் சுவாசிக்கும் பொழுதும் நாள் பட்ட நோய்கள் மற்றும் தீர்க்க முடியாத மன நோய்கள் எல்லாமே குணமாகிவிடும்.
கணபதி ஹோமத்தின் அருமை பெருமைகளை சிவபெருமானே ஒருமுறை தன்னை தாழ்த்திக்கொண்டு கணபதியின் பெருமைகளை உலகிற்கு உணர்த்திய சம்பவம் நிகழ்வு ஒன்றையும் நாம் தெரிந்து கொள்வோம்..
ஒரு முறை அசுரர்களை அழிக்க சிவபெருமான் தன்னுடைய ரதத்தில் ஏறி போருக்கு புறப்படுகிறார்.அப்படி கிளம்பும் பொழுது தேரின் அச்சாணி ஒடிந்து விட்டது. இதை அபசகுனமாக நினைத்த சிவ பெருமான் கண்களை மூடிக்கொண்டு தன்னுடைய ஞான திருஷ்டியால் பார்த்தார்.
பிறகுதான் புரிந்தது தான் விநாயகனை கும்பிடாமல் கிளம்பி விட்டோம் என்று புரிந்து விட்டது. உடனே சிவபெருமான் விநாயகரை வழிபட்டுவிட்டு மீண்டும் போருக்கு கிளம்பினார். வெற்றியும் பெற்றார்.
இது போன்ற விஷயங்களை இன்னும் வரும் வாரங்களில் அலசுவோம்.கணபதி ஹோமத்தின் அருமை பெருமைகளை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்