top of page
Featured Posts

இன்று முதல் சங்கமம் உங்கள் பயன்பாட்டிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது


சங்கமம் மலர்ந்தது

இன்று முதல் உங்கள் பயன் பாட்டிற்கும் வந்தது

சங்கமம் அரும்பாக தோன்றியது. ஒவ்வொரு இதழாக விரிந்து இன்று மஹாபெரியவா அனுகிரஹத்துடனும் ஆசிகளுடனும் முழு தோற்றத்துடன் மலராக மலர்ந்துள்ளது..

இன்று ஆடிவெள்ளிக்கிழமை. காலை நான்கு மணிக்கு என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது எனக்கு பின்வருமாறு கட்டளையிடுகிறார். "ஏண்டா இன்னிக்கு ஆடி வெள்ளிக்கிழமை. சங்கமம் அப்படின்னு ஓர் ஜாதக பரிவர்த்தனை ஆரம்பிச்சியே.இன்னிக்கு ஆடி வெள்ளிக்கிழமையா இருக்கு. இன்னிக்கு அதை மனுஷாளுக்கு சொல்லேண்டா. என்றார். நானும் சரியென்று சொல்லிவிட்டு விடை பெற்றேன்.

நான் சங்கமம் கனவு கண்டேன். அந்த கனவை செயல் படுத்தியதில் முக்கியான பங்கு ஆற்றியவர்கள் திருமதி அனுஷா மற்றும் சௌபாக்யவதி ஆர்த்தி. இருவரும் சேர்ந்து இந்த கனவை உண்மையாக மாறினார்கள். இவர்கள் இருவரையும் வாழ்த்துங்கள்.

சங்கமம் பதிவில் வரன் தேடும் முறை

  1. முதலில் HOME PAGE இல் இருக்கும் மெனு பாரில் சங்கமம் என்னும் எழுத்தை அழுத்தவும்

  2. அது உங்களை ஆண்கள் பெண்கள் என்னும் பகுதிக்கு அழைத்து செல்லும்.ஆண்கள் பகுதியிலும் பெண்கள் பகுதியிலும் பிறந்த தேதி வயதை அடிப்படையாக கொண்டு வரிசை படுத்தப்பட்டிருக்கும்

  3. உங்கள் பெண்ணுக்கோ பையனுக்கோ எந்த வயது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் அழுத்தினால் அந்த பையனின் விவரங்களுக்கும் பெண்ணின் விவரங்களுக்கும் உங்களை அழைத்து செல்லும்.

  4. அங்கு இருக்கும் விவரங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சரியாக இருக்குமேயானால் தொடர்பு விவரங்கள் அங்கேயே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டு மேற்படி விவரங்கள் கேட்டு பெற்று ஆயிரம் காலத்து பயிரான உங்கள் குழந்தைகளின் திருமணத்தை மஹாபெரியவா ஆசியுடன் நடத்துங்கள்.

உங்கள் வீடு திருமணம் இனிதே நிறைவேறி உங்கள் வாழ்வில் அமைதியும் வளமும் என்றும் குன்றாமல் ஓங்கி இருக்க நானும் இந்த இணையதளமும் மஹாபெரியவாளை பிரார்த்தித்து கொள்கிறோம். உங்கள் சொந்தங்களிடமும் சுற்றங்களிடமும் சங்கமம் பற்றி சொல்லுங்கள். சிலாகித்து பேசுங்கள்.பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வரன் தேடுவதை ஒரு போராட்டமாக இல்லாமல் தென்றல் தவழும் ஒரு நந்தவனமாக மற்றும் முயற்சிதான் இந்த சங்கமம்.

நீங்கள் சங்கமத்தில் சங்கமித்து மஹாபெரியவா ஆசிகளுடனும் உலகெங்கிலும் உள்ள புனித ஆத்மாக்களின் வாழ்த்துகளுடனும் ஆசிகளுடனும் உங்கள் குழந்தைகளின் இல்லற வாழ்வை இனிமையான இறைவனே வாழ நினைக்கும் கோவிலாக அமைத்துக்கொடுங்கள்.

இந்த இணைய தளத்தின் வாழ்த்துகளோடு என் வாழ்த்துக்களும் சேரட்டும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page