Guru Pooja Experience BY Mrs.Kousalya – Chennai

Guru Pooja Experience BY Mrs.Kousalya – Chennai
நமஸ்காரம் மாமா,
நலமா இருக்கிறீர்களா ?
9 வது குரு பூஜை போன வாரம் மகா பெரியவா ஆஸியில் நல்ல படியா முடிந்தது. உங்களுக்கு whatsapp இல் அனுப்பி இருந்தேன்.
அவர் அருளினால், மறுநாள் skype மூலம் இறுதி கட்ட நேர்காணல் நடந்தது. அதுவும் அவர்களுக்கு திருப்தி அளித்து விட்டது.
இனிமேல் HR இடம் இருந்து அழைப்பு வரும் என சொல்லி விட்டார்கள். 90 % முடிந்தது. திங்கள் அல்லது செவ்வாய் கிழமைக்குள் அவர்கள் கூப்பிட்டு வேலையில் சேரும் நாள், சம்பள விஷயம், etc. பேசுவார்கள் என சொன்னார்கள். வேலை தற்சமயம் பெங்களூரு தான்.
நாங்கள் இப்போது அந்த அழைப்பைத்தான், எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம். எல்லாம் வல்ல மகா பெரியவா அதற்கும் விரைவில் அருள் புரிவார்.
இந்த குருபூஜை ஆரம்பித்து முடிப்பதற்குள், பெரியவா, ஆசீர்வாதங்களையும், அற்புதங்களையும், நிகழ்த்தி இருக்கிறார். இவை அனைத்துக்கும் நீங்கள் தான் காரணம். எல்லாம் வல்ல இறைவனும், மஹா பெரியவாளும் உங்களுக்கு என்றும் அருள் புரிய வேண்டும். உங்கள் மூலமா எங்களுக்கு அவர்களின் ஆசியை தரவேண்டும்.
மாமா, என் மகனுக்கு வேலை உத்தரவு வந்ததும், உங்களுக்கு உடனே தெரிவிக்கிறேன்.
நீங்க என்றும் நலமா வாழ நான் பிரார்த்திகிறேன்.
பெரியவா திருவடிகளே சரணம்.
என்றும் பணிவுடன்
கௌசல்யா.