Featured Posts

ஆடிப்பூரம் ஈச்சங்குடி மஹாபெரியவா


ஆடிப்பூரம் ஈச்சங்குடி மஹாபெரியவா

மஹாபெரியவா பக்தர்களின் கவனத்திற்கு

நேற்று ஆடிப்பூரம் என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று.. ஸ்ரீவில்லி புத்தூர் தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது என்பதை அறிவோம்.

இந்த புனிதமான நாளில் நம்முடைய மஹாபெரியவா அவதரித்த காவேரி கரையில் இருக்கும் ஈச்சங்குடி என்ற பசுமை நிறைந்த எழில் கொஞ்சும் கிராமம் என்பதும் நமக்கு தெரியும். நேற்று ஈச்சங்குடியில் மஹாபெரியவாளுக்கு அலங்கார அர்ச்சனைகள் நடந்தேறியது.

நாம் ஈச்சங்குடி போக முடியாவிட்டாலும் மஹாபெரியவா பக்தர் லக்ஷ்மிநரசிம்மன் ராமசந்திரன் என்னும் பக்தர் ஈச்சங்குடியில் மஹாபெரியவாளுக்கு அலங்காரம் செய்த படம் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். பக்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று உங்களுக்கு அந்த படத்தை பிரசுக்கிறேன்.

ஈச்சங்குடி செல்ல முடியாவிட்டாலும் இங்கிருந்த படியே நீங்கள் தரிசனம் செய்து கொள்ளுங்கள் . மஹாபெரியவா படத்தை பகிர்ந்து கொண்ட பக்தருக்கு உங்கள் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts