Featured Posts

SMART-உதவிக்கரம்


மற்றவர் துயர் துடைக்க நாங்கள் கரம் நீட்டுகிறோம் ஆசீர்வதியுங்கள் பெரியவா

மஹாபெரியவா பக்த கோடிகளுக்கு என் நமஸ்காரங்கள்.

இந்த நொடி செய்யும் தான தர்மங்கள்

வாழ்நாள் முழுவதும் உங்களை

வரவிருக்கும் கண்ணுக்கு தெரியாத

ஆபத்துகளில் இருந்து காக்கும்.

இது ஒரு அனுபவ மொழி

வாழ்க்கையில் எதிர்பாராமல் அடித்தபுயலால் தாக்கப்பட்ட ஒரு இல்லத்தரசிக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக உங்களிடம் உதவி கோரும் ஒரு பதிவு இது. அது மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ ஆத்மாக்கள் என்னை ஒரு விமோச்சனத்திற்கு நாடுகின்றனர். அவ்வளவு பேருக்கும் சேர்த்து இந்த பதிவு. இது தான் துன்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்காக உங்கள் உதவி கேட்டு வரும் முதல் பதிவு என்பதும் உங்களுக்கு தெரியும்.

சக ஆத்மாவின் துன்பம்:

ஒரு அழகான வைஷ்ணவ குடும்பம்.கணவன் மனைவி இரண்டு குழந்தைகள். ஒரு மகன் ஒரு மகள். மத்தாப்பு கற்பனைகளுடன் பூந்தோட்டத்தில் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியை போல இரண்டு குழந்தைகள். இருவரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் இவர்கள் குடும்பத்தை ஒரு புயல் தாக்கியது. குழந்தைகளின் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே மருத்துவம் பார்த்தார்கள். பரிசோதனை முடிவில் இரண்டு சிறு நீரகங்களுமே பழுதடைந்து விட்டது என்று கண்டு பிடித்தார்கள்.

இறைவன் அருளால் விரைவிலேயே மூளைச்சாவு அடைந்தவரின் சிறு நீரகம் பொருத்தப்பட்டது. அடிக்கும் புயலும் ஓய்ந்தது. இழந்த வாழ்க்கையும் திரும்ப கிடைத்தது என்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தோஷம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. தாயின் உடல் மாற்று சிறு நீரகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நிராகரித்து விட்டது.

நினைத்து பாருங்கள். என்ன செய்ய முடியும். இப்பொழுது டயாலிசிஸ் என்னும் சிகிச்சை முறையை ஆரம்பித்தார்கள். தற்பொழுது வாரத்திற்கு நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டி இருக்கிறது. ஒருமுறை டயாலிசிஸ் செய்து கொள்ள ரூபாய் ஆயிரத்து எழுநூற்றி ஐம்பது ரூபாய் ஆகிறது.

இந்த நான்கு டயாலிசிஸ் இல் மூன்று டயாலிசிஸ் முதல் அமைச்சர் காப்பீடு திட்டத்தில் சென்று விடுகிறது.. வாரம் ஒரு டயாலிசிஸ் வீதம் மாதம் நான்கு டயாலிசிஸ் க்கு பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. மாதம் ரூபாய் ஏழாயிரம் செலுத்த வேண்டியிருக்கிறது. வருடத்திற்கு எண்பத்தி நான்காயிரம் செலவாகிறது.

இதற்கு ஒரு நிரந்திர தீர்வு என்னவென்றால் மீண்டும் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை க்கு தயாராக வேண்டும். இது இன்றோ நாளையோ நடக்கக்கூடிய சமாச்சாரம் இல்லை. இப்பொழுது பதிவு செய்தால் ஒரு வருடமோ இரண்டு வருடங்களோ ஆகலாம். ஆனால் அது வரை டயாலிசிஸ்க்கு தேவையான பணத்தை இந்த தம்பதிகள் தங்கள் வங்கி கணக்கில் வைத்திருக்க வேண்டும்.இந்த தொகையில் இவர்களின் போக்கு வரத்து செலவுகள் மற்றும் மருந்துகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

இதே போல் பலரும் என்னிடத்தில் தங்களுடைய நிலையை விளக்கி சொல்லி உதவி கேட்கிறார்கள். வாழ்க்கையில் அடிக்கும் புயலின் தாக்கம் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் தாக்கம் என்பது எழுத்தில் அடங்காது. சிந்தனைகள் செயல்கள் எல்லாமே சிதறி சின்னாபின்னமாகிவிடும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல. என்ன செய்வது? அவர்கள் என்னிடம் அழுது விட்டு சென்ற பிறகு நான் அவர்களுக்காக மஹாபெரியவாளின் காலை கட்டிக்கொண்டு அழுவேன்.

என் அழுகைக்கு மஹாபெரியவா கொடுக்கும் பதில் “என்னோட பக்தர்கள் எவ்வளவு பேர் பிரார்த்தனைக்கு வரா. அவா கிட்டே மத்தவாளுக்காக நீ உதவி கேளேன், நிச்சயம் கொடுப்பா. நீயே ஒரு விரலாலே எழுதி பாதிப்பணத்தை மத்தவாளுக்காக கொடுத்து ஒரு முன் உதாரணமா இருக்கே. கேளுடா எல்லோரும் அவா சக்திக்கு ஏத்தமாதிரி குடுப்பா. கேளு என்றார்.

நான் உங்களிடம் மற்றவர்கள் துயர் துடைக்க கை ஏந்துகிறேன்.உதவுங்கள். கேட்கிறேன்.

நான் ஒரு விரலில் எழுதி வெளியாகும் புத்தகங்களின் மூலம் வரும் வருமானத்தில் அணைத்து வரிகளையும் கட்டியது போக பாதிக்கு பாதி பெரியவா அருள் டிரஸ்ட் க்கு செலுத்தி விடுகிறேன். மீதி தொகையை என்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு வைத்து கொள்கிறேன்.. என்னை நாடி வரும் பலருக்கும் என்னால் முடிந்த வரை உங்களுடன் சேர்ந்து அவர்கள் துயர் துடைக்க முயல்கிறேன்.

என்னை நாடி வரும் அத்தனை பேருக்கும் உதவ வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. நான் ஒரு கர்ணன் பரம்பரையில் வந்திருந்தால் தான் இது சாத்தியம். இது ஒரு பேராசையாக கூட தோன்றலாம். நான் நினைக்கிறேன் இது ஒரு பெரிய ஆசை என்று. எந்த ஒரு பெரிய ஆசைக்கும்ஆத்மாவிற்கு மட்டுமே தெரியும் நியாயம் ஒன்று புதைந்து கிடக்கும். அந்த நியாயம்தான் நம்முடைய சக ஆத்மாவிற்கு உதவிக்கரம் கொடுத்து வாழ்க்கையில் கரையேற்றி விடுவது.

அதை செய்யும் தைரியமும் துணிச்சலும் எனக்கு வந்ததற்கு காரணம் இரண்டு.ஒன்று மஹாபெரியவா அருளும் ஆசிகளும் இரண்டு மஹாபெரியவா எனக்காக உருவாக்கி கொடுத்த ஆத்மார்த்தமான ஒரு குடும்பம். நீங்கள் எல்லாம் அந்த ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர்கள்.

பிறக்கிறோம் வளர்கிறோம் வாழ்கிறோம். இறைவன் கொடுத்த வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறோம்.ஆனால் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறோமா? நாம் செய்யும் நல்ல காரியங்களின் புண்ணியங்கள் நம் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் ஒரு இறை பாதுகாப்பையும் புண்ணியத்தையும் கொடுக்கிறது. குடும்பத்தின் பாதுகாப்பிக்காக சம்பாதிக்கும் பொன் பொருளுடன் பொருளை காக்கும் புண்ணியத்தையும் செய்து விட்டு செல்வோமே.

துன்பத்தில் உழலும் ஒவ்வொருவருக்கும் இந்தமாதிரி ஒரு பதிவை வெளியிட நான் விரும்பவில்லை. ஆனால் நீங்கள் ஆத்மார்த்தமாக கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயையும் சேர்த்து துன்பத்தில் உழலும் ஆத்மாக்களுக்கு தேவைக்கேற்ப உங்கள் சார்பில் உதவி செய்து விட்டு முடிந்தவரை பயன் பெற்றவர்களின் நேர்காணலையும் இந்த இணையதளத்தில் வெளியிடுகிறேன்.

கோ சம்ரக்ஷணம்

மனிதர்களுக்கு வாய் இருக்கிறது. பேசுகிறார்கள் கேட்டுவிடுகிறார்கள். வாய் இல்லாத ஜீவன்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.அவைகளுக்கு இறைவன் தெரியுமா ? பிரார்த்தனைகள் தெரியுமா? கர்மாக்கள் பற்றி தெரியுமா? அவைகள் உணர்வுகளின் அடிப்படையில் வாழுகின்றன. மனிதர்கள் அறிவு சிந்தனை ஞானத்தை ஆதாரமாக கொண்டு வாழ்கிறோம்.

மனிதர்களுக்கு ஒரு படி மேலே இருக்கும் பசு மாடுகளை இறைவனுக்கு சமமாக வழி படுகிறோம். கோ மாதா என்று கூட பூஜிக்கிறோம்.அந்த பசு மாடுகளை இறைச்சிக்காக கொன்று வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் கொடுமையை தடுத்து நிறுத்துமாறு மஹாபெரியவா எவ்வளவோ சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள்.

தனி மனிதனாக ஆசை வேண்டுமானால் படலாம்.ஆனால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் ஒரு சில அடிகளாவது மஹாபெரியவா காண்பித்த ஆன்மீக பாதையில் நாம் பயணம் செய்ய முடியும். இதற்காகவும் நீங்கள் உதவி செய்யலாம்.

வேத ரக்ஷ்ணம்

மஹாபெரியவா கால்நடையாகவே இந்தியா முழுவதும் அடி ப்ரதக்ஷிணம் செய்து நலிந்தும் மறைந்தும் கொண்டிருந்த வேதத்தை உயிர் கொடுத்து மீண்டும் தழைக்க செய்து வேத ரக்ஷ்ணம் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்தார். தழைத்து வளர்ந்து கொண்டிருக்கும் வேதத்திற்கு நீருற்றி உரமிட்டு வளர்த்து வரும் தலை முறையினருக்கு கொடுக்க வேண்டியது நம் கடமையல்லவா? இதற்கும் உங்கள் உதவி தேவை படுகிறது. தாராளமாக உதவுங்கள். பொன் பொருள் சேர்க்கும் முயற்சியில் புண்ணியத்தையும் சேர்ப்போம்.

கோவில் புனருத்தாரணம்

கோவில் இந்த சொல்லை நமக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே நம்முடைய பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் நமக்கு சொல்லி சொல்லி வளர்த்திருக்கிறார்கள். நம்முடைய வாழ்வை புணரமைக்க கோவில்களில் உள்ள இறைவனை நாடுகிறோம். இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறோம்.அந்த இறைவனை நமக்கு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென்றால் ஆபத்பாந்தவன் அனாத ரக்ஷகன் என்றெல்லாம் அழைக்கிறோம். நமக்கு பிறந்த நாள் என்றால் புத்தாடை உடுத்தி கோவிலுக்கு செல்கிறோம்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம்.நமக்கு படியளக்கும் இறைவனுக்கு புத்தாடை இருக்கிறதா? இறைவனுக்கு மூன்று கால பூஜைகள் நடக்கின்றனவா? இறைவனுக்கு தலைக்கு மேலே மேற்கூரை இருக்கிறதா? இறைவனுக்கு ஆகம சாஸ்திரப்படி மூன்று வேளை உணவு படைக்க படுகிறதா?

நமக்கு வேண்டியதை இறைவன் தருவதற்கு இறைவன் வானத்தை கூட வில்லாக வளைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். ஆனால் நாம் இறைவனுக்கு என்ன செய்கிறோம் என்று நினைத்து பாத்திருப்போமா? இவைகளை எல்லாம் நாம் செய்து கொண்டிருந்தால் இறைவன் நமக்கு கேட்காமலேயே ஓடோடி வந்து செய்வான் .

இன்னும் பழங்காலத்து கோவில்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கும் கோவில்களுக்கு எவ்வளவு உதவி தேவை படுகிறது தெரியுமா? மஹாபெரியவா என்னிடம் சொன்னது. " நீ நொண்டி நொண்டியாவது எல்லா கோவில்களுக்கும் போய் மூன்று கால பூஜைக்கும் குறைந்தது இரண்டு வேளை அன்னத்திற்கும் ஏழு புது உடைகள் பெருமாளுக்கும் தாயாருக்கும் ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரிக்கும் விநாயகருக்கு அங்க வஸ்திரம் வேஷ்டியும் வாங்கி கொடு. விளக்கு எரிய எண்ணெய் வாங்கிக்கொடு. நடந்து நடந்து கோவில் கோவிலா போ

நான் உனக்கு தெம்பை தருகிறேன். உன் ஜென்மம் இறுதி வரைக்கும் செஞ்சுண்டே இரு. உனக்கு எல்லோரும் உதவி செய்வா. பண்ணு. " என்று என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். இருந்தாலும் நான் தள்ளிபோட்டுக்கொண்டே வந்ததற்கு காரணம் எல்லோரிடமும் கை நீட்ட எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது. மஹாபெரியவாளும் என்னுடைய பிரார்த்தனை நேரத்தில் என்னை கேட்பார். " என்னடா பன்னரே கோவிலுக்கெல்லாம் எப்போ கிளம்பப்போறே என்று கேட்பார்.

நானும் சொல்லுவேன் எனக்கு மத்தவா கிட்டே பணம் கேக்க சங்கோஜமா இருக்கு பெரியவா என்பேன்.அதற்கு பெரியவா இப்படி யோசிச்சுண்டே இருந்த உன்னோட ஆயிசு முடிஞ்சு போய்டும். நீ உனக்காக கேட்கலையேடா. அவாளுக்கு புண்ணியம் தேடித்தரே பிரார்த்தனை பன்னரே. உன்னையே நீ வருத்திண்டு அவளுக்காக உழைக்கிறே. இதிலே என்னடா சங்கோஜம். யோசிச்சுண்டே இருக்காதே.

எல்லாருக்கும் உதவி செய். கோவிலுக்கும் செய். நான் உன் கூட இருக்கேன். நன்னா பண்ணுவே. என்று சொல்லுவார். உங்களுக்காக நான் மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்வது என்பது உங்கள் வாழ