Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-065- மிஷின் பொய் சொல்லுமா? சொல்லும் மஹாபெரியவா நினைத்தால்!


மஹாபெரியவா நீ நினைத்தால் உதிக்கும் சூரியன் மறையும் பெய்யும் மழை நிற்கும் தீ கூட கீழ் நோக்கி எரியும் இயந்திரம் கூட பொய் சொல்லிவிடும் இந்த பதிவில் பொய் சொல்லி விட்டதே

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-065

மஹாபெரியவா

என்ன சொல்ல? சத்தியம் பேசுகிறாரா?

அல்லது பேசுவது சத்தியமாகி விடுகிறதா.?

மிஷின் பொய் சொல்லாதா? என்று கேட்டார் சாஸ்திரிகள்

மிஷனும் பொய் சொல்லிவிட்டது.

சத்தியத்தின் பிறப்பிடமே

நின் பாதங்கள் சரணம்

G.R.Mama

தஞ்சை மாவட்டம் மாயவரம் அருகில் ஒரு சிறிய கிராமம்.அந்த கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் என்னும் மஹாபெரியவா பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் வைதீகத்தை தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தார்.

மாதத்தில் மூன்று முறையாவது காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவாளை தரிசனம் செய்து விடுவார். மஹாபெரியவா என்று ஒரு முறை உச்சரித்தாலோ அல்லாத ஒரு முறை காதால் கேட்டாலோ இவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து விடும். அப்படியொரு பக்தி.. மஹாபெரியவா மேல் அபார நம்பிக்கை. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்னும் வாக்கியத்தை முழுமையாக மனத்தில் ஏற்றுக்கொண்டு அதை நொடிப்பொழுதும் அனுபவித்து வருகிறார்.

ஒரு நாள் காலைப்பொழுது. ஊருக்கே விடிந்தது. ஆனால் சாஸ்திரிகளின் குடும்பத்திற்கு மட்டும் விடியவில்லை. சாஸ்திரிகளுக்கு ஒரே ஒரு மாப்பிளை. அவருக்கு தீடிரென்று நெஞ்சு வலி வரவே அவசரமாக வீட்டிலுள்ளவர்கள் மாப்பிளையை மருத்துவ மனைக்கு கூட்டி செல்கிறார்கள்.

இந்த சமயத்தில் சாஸ்திரிகள் ஒரு வீட்டில் தெவசத்திற்காக சென்று நடத்தி கொடுத்து விட்டு வீடு திரும்பி கொண்டிருக்கிறார். தனக்குள் சொல்லிக்கொண்டே நடக்கிறார். எப்படியாவது நாளை காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவாளை தரிசித்து வரவேண்டும் என்று. நினைவலைகள் நின்றன. வீடு வந்து விட்டது. ஆனால் வீடு பூட்டி இருந்தது. பக்கத்தில் விசாரித்தபொழுது உங்கள் மாப்பிளைக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்து மருத்துமனைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

இந்த விஷயத்தை கேட்டவுடன் சாஸ்திரிகள் துடி துடித்து போனார். ஏனென்றால் அவருக்கு உலகமே அவர் மகளும் மாப்பிள்ளையும் தான். .மருத்துமனைக்கு அழுதுகொண்டே.ஓடினார் சாஸ்திரிகள்.

அங்கு மருத்துவர்கள் சாஸ்திரிகளை பார்த்து சொன்னார்கள். " உங்கள் மாப்பிளைக்கு நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இதற்கு வைத்தியம் செய்ய முடியாது. இன்னும் சில வாரங்களோ சில மாதங்களோ தான் அவருடைய ஆயுள்.என்று சொல்லிவிட்டார்கள்.

சாஸ்திரிகளுக்கு இங்கு மருத்துவர்களை விட மஹாபெரியவா தான் விஸ்வரூபம் எடுத்து நின்றார். உடனே காஞ்சிபுரத்திற்கு ஓடினார். மடத்து வாசலில் இருந்தே கத்தி அழுதுகொண்டே மகாபெரியவா இருக்கும் இடத்திற்கு சென்றார். சாஸ்திரிகள் அழுது கொண்டே வருவதை பார்த்து கொஞ்சம் கூட கலங்காமல் பரப்பிரும்மம் என்ற பெயருக்கு ஏற்ப அசையாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார். மஹாபெரியவா.

மஹாபெரியவா சிறிது நேரம் பேசாமல் இருந்தார். சாஸ்திரிகளின் அழுகை நின்ற பிறகு விசாரிக்க ஆரம்பித்தார். சாஸ்திரிகள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவா பரிசோதனை பண்ண மிஷனே ஆயுள் அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டதாம் பெரியவா. என்று அழுகையை சற்று நிறுத்தினார்.

மஹாபெரியவா சாஸ்திரிகளிடமும் சுற்றி இருந்தவர்களிடமும் கேட்டாராம். " அந்த மிஷின் சொன்னது பொய்யாக இருக்க கூடாதா " என்று நினைக்கிறீர்கள் இல்லையா? என்று. அப்பொழுது சாஸ்திரிகளும் மற்றவர்களும் சொன்னார்களாம். “அதெப்படி பெரியவா மிஷின் பொய் சொல்லும், மனுஷாள் வார்த்தையை மாத்தி மாத்தி பேசுவா. மிஷின் அப்படியெல்லாம் பேசாது பெரியவா என்றார்கள்.

அப்போ மிஷின் பொய் சொல்வது அப்படின்னு சொல்லறேளா ? என்று கேட்டார். பிறகு சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு சாஸ்திரிகளிடம் பின் வருமாறு சொன்னார். " சரி உன் மாப்பிளைக்கு ஆயுசு அவ்வளவுதான் இருக்கு போல இருக்கு. போய் ஆக வேண்டிய காரியங்களை பாருங்கோ என்று சொன்னார்.

அதே நேரத்தில் சாஸ்திரிகளுக்கு ஒரு செய்தி வருகிறது. அந்த செய்தியை படித்தவுடன் சாஸ்திரிகள் நெஞ்சே வெடித்து அழுது விட்டார். மஹாபெரியவா சொல்கிறார். சரி எல்லாம் முடிஞ்சு போயிடுத்து போல இருக்கு போய் ஆக வேண்டிய காரியங்களை செய்யுங்கோ. என்று சொல்லிவிட்டு சாஸ்திரிகளுக்கு மடத்தில் இருந்து மாப்பிளைக்கு போர்த்த வஸ்திரம் செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்கிறார்.

இதை கேட்டவுடன் சாஸ்திரிகள் உச்ச கட்ட குரலில் சொல்லுகிறார். பெரியவா உங்கள் வாக்கு பலிச்சிடுத்து. .பெரியவா மிஷின் பொய் சொல்லிடுது பெரியவா.. என் மாப்பிளைக்கு ஒண்ணுமில்லையாம் என்று ஆனந்த கண்ணீருடன் பெரியவா காலில் விழுந்தார்.

பெரியவா உடனே எல்லோரிடமும் சொல்லுகிறார். “என்னடா நீங்க எல்லோரும் இப்படி மாத்தி மாத்தி பேசறேள்.. அப்பவே மிஷின் பொய் சொல்லுமா? என்று கேட்பீர்கள். இப்போ மிஷின் பொய் சொல்லிடுத்து என்று சொல்கிறீகள்.

இதற்கு சாஸ்திரிகள் சொன்னாராம் " பெரியவா நீங்கள் பேசறது எல்லாமே சத்தியம் ஆயிடுறதா இல்லை நீங்கள் சத்தியம் தான் பேசுகிறீர்களா? நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி அந்த சொல்லை உண்மையாகிடுறதே.

கடைசியில் சாஸ்திரிகள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு நமஸ்காரம் செய்தாராம். “பெரியவா நீங்கள் ஒரு பிரும்ம ஸ்வரூபம்..நீங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டவர். என்னால் நமஸ்கரிக்க தான் முடியும்” என்று சொல்லி விட்டு மஹாபெரியவா காலில் விழுந்தாராம்.

இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தை

உங்களால் ஒரு உருவத்திற்குள்

கொண்டு வர முடியுமா?

அப்படி கொண்டு வர முடிந்தால்

அந்த உருவம் தான்

மஹாபெரியவா என்னும் பிரும்ம வஸ்து!

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square