உங்கள் G.R. மாமா மீண்டும் உங்களுடன்

எனக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கினாய் அந்த உலகத்தில் புனித ஆத்மாக்களை குடியேற்றினாய் நீ உருவாக்கிய புதிய புனித உலகம்
எனக்கு பிடித்திருக்கிறது. இந்த புதிய உலகமே உலகமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீ நினைத்தால் இதுவும் சாத்தியமே
உங்கள் G.R. மாமா மீண்டும் உங்களுடன்
எனது இதயத்தில் குடியிருக்கும் சகோதர சகோதரிகளே
,பொதுவாகவே சொல்லுவார்கள் துன்பத்திலும் ஒரு இனிமை சுவாரசியம் இருக்கும் என்று. இது மட்டுமல்ல இதயம் தேடும் உறவுகள் அனைவருமே நம்மை தேடி ஓடி வரும் பொழுது துன்பம் நொடிப்பொழுதில் பறந்து விடும் என்றும் சொல்லுவார்கள். உண்மைதான் நான் கடந்த சில நாட்களாக அனுபவித்து கொண்டு இருக்கிறேன்..
என் உடல் நிலை காரணமாக உங்கள் தொடர்பில் இருந்து சில நாட்கள் மட்டுமே ஓய்வில் இருந்தேன்.என்னுடைய உண்மையான பலம் தெரிந்தது. புத்துயிர் பெற்றேன். உடல் நலமாகியது.
என்னுடைய உண்மையான பலம் எதுவென்று யோசிக்கிறீர்களா? நீங்கள் தான். எனக்கு உடல் நலம் சரி இல்லையென்று தெரிந்தவுடன் எத்தனை ஆத்மாக்கள் என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டு என் உடல் நலனை விசாரித்து விட்டு தாங்கள் எனக்காக பிரார்த்தனை செய்வதாக சொன்னார்கள்.
நினைத்து பார்க்கிறேன். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் தனி மரமாக விடப்பட்டேன். சுற்றங்களும் சொந்தங்களும் என்னை விட்டு விலகினர். நண்பர்கள் பறந்து விட்டனர். எனக்கென்று யாரும் இல்லை.தனித்து விடப்பட்டேன். உலகம் புரிய ஆரம்பித்தது.
இன்று மஹாபெரியவா என்னை பிடித்து கை தூக்கினார். எனக்கென்று ஒரு புதிய உலகத்தை படைத்தார். அந்த புதிய உலகத்தின் ஆத்மாக்கள் அனைவரும் மனித உள்ளத்தை நேசிக்கும் ஆத்மாக்களாய் இருந்தனர்.
பணம் பொன் பொருள் இவைகளை தாண்டி பார்த்தனர். அங்கு அழகான ஒரு உலகம் சுழன்று கொண்டிருப்பதை பார்த்தனர். என்னையும் அந்த உலகத்தை சேர்ந்த ஒரு ஆத்மாவாக அங்கீகரித்தனர்.
. நான் உங்கள் எல்லோரையும் தான் சொல்கிறேன். இது எனக்கு ஒரு இனிமையான அனுபவம். உங்கள் அன்பும் பாசமும் என்னை விரைவில் குணப்படுத்தி விட்டது. இன்று உங்களுடன் மீண்டும் இணைந்து விட்டேன்.
என்னுடைய பணியை இந்த மாதம் பதினாறாம் தேதி துவங்கி விட்டேன்.. பதினாறாம் தேதி "உடல் " என்ற தலைப்பில் மஹாபெரியவா சொன்ன அறிய கருத்துக்களுடன் இந்தப்பதிவை வெளியிட்டேன். நேற்று மிஷின் பொய் சொல்லுமா என்ற தலைப்பில் மஹாபெரியவா அற்புதங்களை வெளியிட்டேன்.
மேலே சொன்ன இரண்டு பதிவுகளுக்கும் உங்களிடம் இருந்து எந்த கருத்தும் பரிமாறிக்கொள்ள படவில்லை. பிறகு தான் தெரிந்தது உங்களில் பெரும்பாலோருக்கு பதிவு வெளியிட பட்டதே தெரியவில்லை என்று.
தவறாமல் இந்த இரண்டு பதிவுகளையும் படித்து உங்கள் எண்ணங்களை வழக்கம்போல் பகிர்ந்து கொள்ளுங்கள். விரைவில் வழக்கம் போல் பதிவுகள் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இன்றில் இருந்து தினமும் ஒரு பதிவாவது வெளியிட முயற்சிக்கிறேன். நீங்களும் தவறாமல் படித்து என்னுடன் உங்கள் எண்ணங்களை கமெண்டுகள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எல்லோரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழவேண்டும் என்று மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
உங்கள் வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் பொங்கட்டும்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்