top of page
Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-067-ஸ்ரீ சக்கரம் பாகம்-I


விண்ணும் நீ மண்ணும் நீ வட்டமும் நீ சதுரமும் நீ மொத்த வடிவமும் நீ ஸ்ரீ சக்கரமும் நீ பெரியவா நின் பாதம் சரணம்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-067

ஸ்ரீ சக்கரம் -பாகம்-I

சக்தி வழிபாடுகளில் மிகவு முக்கியமானது ஸ்ரீ சக்கர வழிபாடு. காமாட்சி, துர்கை, ராஜராஜேஸ்வரி போன்ற பெண் தெய்வங்களை ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து வழி படுவது வழக்கம். ஸ்ரீ சக்கர வழிபாட்டை முறைப்படி உபதேசம் பெற்று நியம நிஷ்டைகளுடன் வழி பட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடக்கும் என்பது ஒரு அனுபவ உண்மை.

ஸ்ரீ சக்கர தேவி

ஆகி சங்கரர் பல ஆலயங்களில் உக்கிரமாக இருந்த அம்பிகை ஸ்வரூபத்தை ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்து உக்கிரமாக இருந்த அம்பிகையை சாந்த ஸ்வரூபியாக மாற்றினார் என்பது ஒரு ஆன்மீக உண்மை.

இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.ஒற்றை காலில் நின்று தவம் செய்யும் மாங்காடு ஸ்தலத்திலும் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

சிதம்பரத்தில் சிவ சக்கரமும் சக்தி சக்கரமும் ஒருங்கிணைந்த ஸ்ரீ சக்கரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு சிதம்பர ரகசியமாக வழி படப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் எங்கெல்லாம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் ஸ்ரீ லட்சுமி கடாக்ஷம் பெறுவதாக ஐதீகம்.

ஸ்ரீ சக்கர வழிபாட்டால் அணைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். பிரம்மனின் சக்தியான சரஸ்வதி தேவியும் விஷ்ணுவின் சக்தியான மகாலட்சுமியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணி விடை செய்கிறார்கள்.

நம்முடைய சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கிரஹங்களும் இருபத்தி ஏழு நக்ஷத்திரங்களும் பன்னிரண்டு ராசிகளும் ஸ்ரீ சக்கரத்தை வலம் வருகின்றன. ஸ்ரீ சக்கர மஹா மேருவை அணைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் இருக்கும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி சிலாகித்து வழி படுகிறாள்.

இன்றும் உலகில் பல விடை தெரியாத அமானுஷ்யங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட அமானுஷ்யங்களில் ஸ்ரீ சக்கரமும் ஒன்று. பல லக்க்ஷ கணக்கான வருடங்களுக்கு முன் தேவர்களால் இந்த ஸ்ரீ சக்கரம் வடிவமைக்க பட்டது.

அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தில் விமானத்தில் இருந்து எடுத்த ஸ்ரீ சக்கரத்தின் படம்.

அமெரிக்காவில் ஒரேகான் மாநிலத்தில் உள்ள மிக்கி பேசின் பாலைவனத்தில் 13.3 சதுர மைல் பரப்பளவில் விண்ணில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய முறையில் ஸ்ரீ சக்கரம் வரையப்பட்டுள்ளது..

.1990 ஆம் ஆண்டு ராணுவ அதிகாரி பில் மில்லர் என்பவர் தன்னுடைய சிறிய விமானத்தில் இந்த பாலைவனத்தில் பறந்து செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இந்த அறிய காட்சியை கண்டார்.

நிலத்தில் இருந்து பார்த்தால் வெறும் கோடுகளாகவே காட்சியளிக்கும் இந்த ஸ்ரீ சக்கரம் வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரிய கூடியது. மிகவும் வெப்பமாக இருக்கும் பாலைவனத்தில் இந்த வடிவத்தை இவ்வளவு துல்லியமாக மனிதனால் வரைய முடியாது.

தேவர்களாலும் கடவுள்களாலும் மட்டுமே இது சாத்தியம். நீண்ட ஆய்வுக்கு பிறகு இந்த தோற்றம் இந்து மதம் வழி படும் ஸ்ரீ சக்கரம் என்று கண்டு பிடிக்கப்பது.

நானும் ஸ்ரீ சக்கரத்தை பற்றி ஒரு பதிவில் உங்களுக்கு எழுதி சமர்ப்பிக்கலாம் என்று தான் ஆரம்பித்தேன். அப்பொழுது நான் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள் போல் வந்து கொண்டே இருந்தது. எனக்கு இது சம்பந்தமாக தொடர்ந்து பதிவை எழுதலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது.

நான் முடிவு செய்தேன்.என்னை இயக்குவது மஹாபெரியவா. அவரிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்தேன். இன்று காலை வழக்கம் போல் மஹாபெரியவா முன் நின்று என் மற்றவர்களுக்கான பிரார்த்தனையை முடித்தேன். பிறகு என் சம்பாஷணையை ஆரம்பித்தேன். இதோ அந்த சம்பாஷணை உங்களுக்காக.

G.R.: பெரியவா

பெரியவா: என்னடா?

G.R.:பெரியவா இன்னிக்கு நான் ஸ்ரீ சக்கரத்தை பற்றி எழுத ஆரம்பித்தேன். மத்த விஷயங்கள் மாதிரி இந்த ஸ்ரீ சக்ரம் ஒரு நாளில் எழுதி முடிக்க கூடிய விஷயமாக தெரியவில்லை. தோண்ட தோண்ட வந்துண்டே இருக்கு பெரியவா. எழுதலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பமா இருக்கு பெரியவா. அதான் உங்க கிட்டேயே கேட்டுடலாம்னு முடிவு செய்தேன்.

பெரியவா: ஏண்டா ஒரு பிரபஞ்ச ரகசியத்தை ஒரே ராத்திரி ஒரு விரலாலே எழுதி முடிச்சுடலாம்னு நினைச்சியா? நல்ல வேளை வந்து கேட்டே. நன்னா படிச்சு புரிஞ்சுண்டு எழுதுடா. உன்னோட எழுத்தைத்தான் எல்லாரும் விரும்பி நன்னா பாடிக்கிறாளே. எழுது. இன்னிக்கு இருக்கும் இளைய தலை முறை குழந்தைகளுக்கு இதெல்லாம் எழுதி சொல்லிக்குடு. என்று முடித்தார்.

G.R. மஹாபெரியவா எழுதும் விரல் மட்டும் தான் எனக்கு சொந்தம். எழுதக்கூடிய எழுத்துக்கள் எல்லாமே உங்களுக்கு தான் சொந்தம். நீங்கள் தான் என் விரலை வைத்து எழுதுகிறீர்கள். நீங்கள் சொன்னால் நான் விரலை கொடுத்து விடுகிறேன். நீங்கள் எவ்வளவு எழுத வேண்டுமோ எழுதுங்கள் என்றேன்.

பெரியவா; எழுதும் உனக்கு எவ்வளவு புண்ணியம் தெரியுமா? நன்னா எழுது . நான் உன்னோடயே இருக்கேன் என்றார்.

உங்களுக்கும் இந்த ஸ்ரீ சக்கர பதிவு பிடித்திருந்தால் நான் தெடர்ந்து எழுதுகிறேன். வாரத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் ஒரு வாரத்தில் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவு எழுதுகிறேன். இப்போதைக்கு இவ்வளவு பதிவு என்று சொல்லமுடியாவிட்டாலும் முடிந்தவரை விரிவாகவே படித்து புரிந்து கொண்டு எழுதுகிறேன்.இன்னும் ஓரிரு நாளில் அடுத்த பதிவை நீங்கள் எதிர் பார்க்கலாம்.

ஸ்ரீ சக்கர பொக்கிஷங்கள் இன்னும் தொடரும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page