top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -069 மஹாபெரியவா என்னை கொடுக்க சொன்ன கங்கை ஜலம் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற


என் வாழ்வில் மஹாபெரியவா -069 பிரதி வியாழன் தோறும்

உங்கள் ஆத்மா மஹாபெரியவாளிடம்

சரணடைந்தது விட்டால்

நீங்கள் கேட்டதும் கிடைக்கும்

கேட்காததும் கிடைக்கும்

டாக்டர் கோஸ்ரீ ஒரு வாழும் உதாரணம்

இந்த பதிவை படியுங்கள்

உங்களுக்கு புரியும்

ஆர்ப்பரித்து வரும் ஆற்று நீரை எதிர்த்து பயணம்

கரணம் தப்பினால் மரணம்

உங்களது ஏமாற்றம் எனக்கு புரிகிறது. கடந்த சில வாரங்களாக என் வாழ்வில் மஹாபெரியவா பதிவு வெளி வரவில்லை.. இதற்கு காரணம் என்னுடைய வேலை பளுவும் நிறைய பக்தர்களின் குரு பூஜை அனுபவங்களை வெளியிடும் வேலையும் சேர்ந்து விட்டது.

எனக்கு ஏற்பட்ட அற்புத அனுபங்களை விட பக்தர்களின் வாழ்வில் நாளொரு மேனியும் பொழுதொரு அற்புதங்களாக நடந்து கொண்டே இருக்கிறது.. இந்த அ.ற்புதங்கள் தொடர்பாக பக்தர்கள் அனுப்பும் பதிவுகளை நேர் செய்து அழகு படுத்தி உங்களுக்கு சமர்ப்பிக்கும் பணியும் சேர்ந்து கொண்டது.

இன்று கூட பாருங்கள் பெரு என்னும் நாட்டை சேர்ந்த எலிஸிபத் என்னும் ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த மஹாபெரியவா குரு பூஜை அற்புத அனுபவங்களை உங்களுக்கு சமர்பித்தேன்.

இது போல வேலைகள் சேர்ந்து கொண்டே இருப்பதால் என்னால் நேரத்தை சரியாக கையாள முடியாமல் ஆகி விட்டது. இருந்தாலும் நான் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருந்தாலும் மஹாபெரியவா ஒரு அற்புதத்தை நிகழ்த்தி எழுதுடா என்ன சோம்பேறித்தனம் என்று சொல்லிவிட்டார்.. எனவே இந்த பதிவு வெளி வந்து விட்டது. இனி அற்புதங்களுக்குள் செல்வோம்.

இந்த மாதம் பதினாறாம் தேதி தொடங்கிய அற்புதம் இந்த மாதம் இருபத்தியோராம் தேதி வரை நீடித்தது.. வெளி நாட்டில் உள்ள பக்த்ர்கள் வழக்கமாக வருடத்திற்கு ஒரு முறை இந்தியா வரும் பொழுது என்னையும் வந்து பார்த்து செல்வார்கள்.

அந்த வகையில் இந்தமாதம் துபாய் நாட்டில் இருந்து கோஸ்ரீ என்னும் மகப்பேறு மருத்துவர் என்னை பார்ப்பதற்கு என் இல்லத்திற்கு தன் கணவர் குழந்தைகளுடன் வந்திருந்தார்.

சற்று நேரம் பேசிய பிறகு மஹாபெரியவா பாதுகையை நமஸ்கரித்து விட்டு விடை பெறுகிறோம் என்றார்கள்..அப்பொழுது என் மனதிற்குள் மகாபெரியவா சொல்கிறார். "அவாளுக்கு கங்கை ஜலம் கொடுத்து அனுப்பு என்றார். எனக்கு வியப்பாக இருந்தது.

இதுவரை யாருக்கும் இப்படி மஹாபெரியவா சொன்னதில்லை. நானும் ஒரு சிறிய சொம்பு கங்கை ஜலம் எடுத்து மஹாபெரியவா பாதுகையையும் வைத்து வாழ்த்தி அனுப்பினேன்.

மஹாபெரியவா கங்கை ஜலம் கொடுக்க சொன்னதன் காரணம் அவர்கள் என்னிடம் திரும்ப துபாய் செல்லும் பொழுது நடந்ததை சொன்ன பிறகுதான் எனக்கு மஹாபெரியவா அவர்களுக்கு செய்த அற்புத மஹிமை புரிந்தது.

பூட்டானில் ஆர்ப்பரித்து வரும் கங்கை மாதா

அவர்கள் திரும்ப வந்து என்னிடம் சொன்னது.

அவர்கள் என்னை சந்தித்த ஒரு சில நாட்களில் இந்தியாவின் அண்டை நாடான பூட்டானுக்கு சென்றார்கள். அவர்கள் குடும்பம் கணவன் மனைவி மற்றும் இரு மகன்கள். இங்கே ஓடும்கங்கை நதி அங்கும் ஓடுகிறது வேறு பெயரில்.

மலை மேல் இருந்து கீழே பாய்ந்து ஓடி வரும் வேகமான நதியை எதிர்த்து ஒரு படகில் துடுப்பை வைத்து பயணம் செய்ய வேண்டும். இவர்கள் பயணம் செய்த நாளில் மலையில் மழை கொட்டியதால் பாய்ந்து வரும் நீரின் அளவும் வேகமும் சமாளிக்க முடியாமல் இருந்தது.

படகை பிடித்து கொண்டு உட்கார்ந்திருந்தால் கூட விழாமல் தப்பிப்பது கடினம்..ஒரு இடத்தில் சமாளிக்க முடியாமல் இவர்களுடன் பயணம் செய்த வேற்று நாட்டவர் ஒருவர் நீரில் விழுந்து தப்பிக்க முடியாமல் மூச்சு திணறி இறந்து விட்டார். கூட சென்ற மருத்துவரும் அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றார்.

ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்து விட்டார். சில மணி நேரங்கள் பிணத்துடனேயே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்.. இந்த சமயத்தில் டாக்டருக்கு பயம் வந்து விட்டது.

நாம் குடும்பத்துடன் உயிருடன் கரை சேர முடியுமா என்ற கேள்விக்குறி. .டாக்டருக்கு மஹாபெரியவா சொல்லி நான் கொடுத்த கங்கை நீர் ஞாபகம் வரவே தன்னுடைய பையில் இருந்த கங்கை நீரை இறுக பற்றிக்கொண்டு மஹாபெரியவாளை அழைத்தார்.

ஒரு ஆத்மாவின் அழைப்பிற்கு மஹாபெரியவா காலம் தாழ்த்தாமல் செவி மடுத்து அடுத்த நொடி அங்கே பிரசன்னமாகி டாக்டர் குடும்பத்தையே காப்பாற்றி கரை ஏற்றினார். இது அற்புதமா . இல்லை அற்புதத்துக்கும் ஒரு படி மேலே தன்னை நம்பிய ஒரு குடும்பத்தையே உயிருடன் மீட்டு வாழ வைத்த சொல்லுக்குள் அடங்காத அற்புதமா?

அன்று சொன்னான் கண்ணன்

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்று.

இன்று மஹாபெரியவா சொல்லவில்லை.

வந்து செய்து காண்பித்து விட்டார்.

அற்புதம் -II

உங்களுக்கு எல்லாம் நினைவிருக்கும். ஒரு நடுத்தர வயது மாமிக்கு இரண்டு சிறு நீரகமும் பழுதடைந்து விட்ட நிலையில் அந்த மாமியின் உயிரை காப்பாற்ற நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சித்து கொண்டு இருக்கிறோம்.. இது விஷயமாக ஒரு பதிவும் “நான் உங்களிடம் கை ஏந்துகிறேன்” என்ற தலைப்பில் வெளியானது.

என்னை நேரில் காணவரும் பக்தர்களிடமும் நான் கை ஏந்த தவறியது இல்லை.. இந்த துபாய் பக்தர் டாக்டர் கோஸ்ரீ என்னை பார்க்க வந்த பொழுது நான் அவர்களிடம் ஒரு மாமியை காப்பாற்ற உதவி கேட்க மறந்து விட்டேன். ஸ்வாரிசயமாக சிலாகித்து மஹாபெரியவளை பற்றி பேச ஆரம்பித்து விட்டால் நான் இந்த உலகத்தையே மறந்து விடுவேன். அப்படிதான் இன்றும் மறந்து விட்டேன்.

அன்று இரவு மஹாபெரியவானிடம் இது பற்றி என் பிரார்தனையையை சமர்ப்பித்து விட்டு என்னுடைய பொறுப்பின்மைக்கும் மன்னிப்பு கேட்டுவிட்டு நான் உறங்க சென்றேன்.

இனிமேல் டாக்டர் கோஸ்ரீ என்னிடம் சொன்னது.

"மாமா" நான் மாதாமாதம் என்னுடைய சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சத் காரியங்களுக்காக சேர்த்து வருவேன்.. இந்த வருடமும் நான் சேர்த்து வைத்த தொகை ரூபாய் பதினான்காயிரம் ரூபாயை காஞ்சி ஸ்ரீ மடத்தில் பால பெரியவாளிடம் கொடுக்க முடியவில்லை. பெரியவா பூஜையில் இருந்ததால் தாமதமாகி விட்டது.

சரியென்று நங்கள் அங்கிருந்து கிளம்பி சேர்த்தப்பணத்தை சமர்ப்பிக்க முடியாமல் கிளம்பினோம். கிளம்பி பிரதோஷ மாமா வீட்டிற்கு சென்றோம். அங்கு சென்று மாமா பெரியவாளை வழி பட்ட பிறகு பையில் இருந்து பணத்தை எடுக்க முற்பட்டேன்.

ஆனால் அதற்குள் மாமாவின் உறவினர் ஒருவர் சொன்னார். தயவு செய்து பணத்தை உங்களிடமே வைத்து கொள்ளுங்கள்.அடுத்த முறை நீங்கள் வரும் பொழுது ஏதாவது பொருளாக வாங்கி வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.இங்கும் பணத்தை கொடுக்கும் முடியவில்லை.

டாக்டருக்கு மிகவும் மனம் வருத்த பட்டு விட்டதாம்.என்ன செய்வதென்று தெரியவில்லை.இருந்தாலும் அவர்கள் பூட்டான் நாட்டிற்கு சென்று உயிர் பிழைத்த நிலையில் நேராக என் வீட்டிற்க்கு வந்தார்கள். சற்று நேரம் அவர்கள் உயிர் பிழைத்த அற்புதத்தை சொல்லிவிட்டு அமைதியானார்கள்.

நான் மெதுவாக சிறு நீரகம் பழுதடைந்த மாமிக்கு தேவைப்படும் உதவியை பற்றி சொல்லி விட்டு அமைதியானேன்.

டாக்டரின் கண்கள் கலங்கின. நான் நினைத்தேன் ஒரு மாமியின் உயிர் போராட்டம் தான் டாக்டரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது என்று. ஆனால் டாக்டர் நீங்கள் சில நிமிடங்களுக்கு முன்னால் நீங்கள் எல்லாம் படித்து கண் கலங்கிய அதே விஷயத்தை என்னிடம் சொன்னார். அப்பொழுது என் கண்களும் கலங்கின.

நான் இதை என்னவென்று சொல்ல. அற்புதம் என்று சொல்லுவதா? அற்புதத்தின் அற்புதம் என்று சொல்லவா?

கண் இமைக்கும் நேரத்தில் பணம் கைமாறும் இந்த கலி காலத்தில் ஒரு உன்னத காரியத்திற்கு தேவை படும் பணத்தை எங்கு சேர வேண்டுமோ அங்கு கொண்டு போய் சேர்த்த மஹாபெரியவா அற்புதத்தை சொல்லுக்குள் அடக்க முடியுமா?

நினைத்து பாருங்கள். இந்த அற்புத மஹாபெரியவா திரு விளையாடலில் இறைவனும், புனித ஆத்மாக்களும், புண்ணியம் செய்த ஆத்மாக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு உன்னத உயிர் காக்கும் போராட்டத்தின் செயலுக்கு கை கோர்த்த அற்புதம். மஹாபெரியவா என்னும் பிரபஞ்சத்திற்கு ஒரு மகுடம் வைத்தது போல் இருக்கிறது அல்லவா?

நான் சொன்ன புண்ணிய ஆத்மா என்று சொன்னது பிரதோஷ மாமாவை இறைவன் என்று சொன்னது மஹாபெரியவளாயும் பால பெரியவாளையும் புண்ணியம் செய்த ஆத்மாக்கள் என்று சொன்னது உங்களையும் என்னையும் தான்..

நான் அடிக்கடி சொல்லும் மஹாபெரியவா இறை சுயராஜ்யம் என்பது உண்மையாகி விட்டதல்லவா?

எண்ணங்களில் ஒரு புனிதம் இருப்பின்

சொற்களில் ஒரு இறை இதம் இருப்பின்

செயல்களில் ஒரு இறைத்தன்மை இருப்பின்

இந்த பிரபஞ்சமே கூட நமக்காக இறங்கி வரும்

என்னும் கூற்று உண்மையாகி விட்டதல்லவா.

பிரபஞ்சத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால்

அந்த உருவம் தான் மஹாபெரியவா?

இந்த கலி காலத்தில் கூட பிரபஞ்சம்

நமக்காக இறங்கி வரும் என்பதை

நாம் உலகத்திற்கு நிரூபித்து விட்டோம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்[


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page