என் சொந்தங்களே உங்கள் கவனத்திற்கு

என் சொந்தங்களே உங்கள் கவனத்திற்கு
இந்த இணைய தளத்தில் அன்றாடம் வெளியிடும் பதிவுகளை படித்து உங்களில் பெரும்பாலோர் கமெண்டுகள் எழுதுவதை நான் தினமும் படிக்கிறேன். ஆனால் நேரமின்மை காரணமாக என்னால் பதில் எழுத முடியவில்லை.
நீங்கள் என்மீது காட்டும் அன்பிற்கும் பாசத்திற்கும் நான் தலை வணங்குகிறேன்.
நான் பதில் எழுத முடியவில்லையே தவிர ஆத்மார்த்தமாக உங்களிடம் நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.நான் வழக்கமாக இரவு உறங்க செல்வதற்கு முன் உங்கள் கமெண்டுகளை படிப்பேன்.. அதில் பெரும்பாலான கமெண்டுகள் என் இதயத்துடன் பேசும்.
நான் அயர்ந்து தூங்கும் வரை உங்களையும் உங்கள் கமெண்டுகளையும் மனதில் அசை போட்டுக்கொண்டே தூங்குவேன். அப்பொழுது உங்களில் பெரும்பாலோருக்கு என்னையும் அறியாமல் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்வேன்.
நான் உங்கள் கமெண்டுகளுக்கு பதில் எழுத வில்லையே என்று யோசிக்க வேண்டாம். உங்கள் கமெண்டுகள் ஒவ்வொன்றும் நான் சோர்ந்து போகும்பொழுது என்னை தூக்கி நிறுத்தும் அற்புத சக்தி படைத்தது என்பதில் சந்தேகமில்லை.
முதலில் எல்லா கமெண்டுகளுக்கும் நான் பதில் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.. காரணம் அப்பொழுது நான் ஒரு இருநூறு பேருக்குத்தான் குரு பூஜை பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தேன்.
ஆனால் இன்று சுமாராக ஆயிரம் பேருக்கு பக்கத்தில் நான் குரு பூஜை பிரார்த்தனைகள் செய்து கொண்டிக்கிறேன். I.பிரார்த்தனைகள் அதிகமாகும் பொழுது மஹாபெரியவா அற்புதங்களும் எண்ணில் அடங்காமல் நிகழ்ந்து கொண்டே வருகின்றன..
ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்பட்ட அற்புத அனுபவங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி விடுகின்றனர். நானும் அந்த அற்பதங்களை படித்து அவர்கள் அனுபவித்த அற்புதங்களுக்குள் நானும் சிறிது நேரம் வாழ்ந்து மஹாபெரியவா கொடுக்கும் எழுத்துக்களால் எழுத் ஒரு பதிவாக உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
வேலை பளு அதிகமாகி விட்டதே தவிர எனக்கு இருக்கும் ஒரு விரல் ஒரே ஒரு நாள் இவைகளை வைத்து கொண்டு செயல் படுகிறேன்.. ஒவ்வொரு நாளும் பிரார்த்தனைகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறதே தவிர ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணி நேரம் என்பதில் மற்றம் இல்லையே. என்ன செய்ய.?
எனவே என்னுடைய கோரிக்கை என்னவென்றால் உங்கள் கமெண்டுகளை தொடர்ந்து எழுதி என்னுடன் பேசுங்கள். உங்கள் கமெண்டுகளில் என் ஆத்மாவின் கதவை தட்டிய கமெண்டுகளாக தேர்ந்தெடுத்து மாதத்திற்க்கு ஒரு முறை என்னுடைய பதிலை சமர்ப்பிக்கிறேன்.
நீங்கள் என்னுடைய ஆன்மீக குடும்ப உறுப்பினர்கள். எனக்கு கை கொடுங்கள். இன்னும் விரைந்து செயல் பாடுவேன். என்னுடைய சக்தி என்பது மஹாபெரியவாளும் நீங்களுத்தான். மஹாபெரியவா என்னை தேர்ந்தெடுத்து ஒரு நல்ல ஆத்மாவாக மாற்றி உங்களுக்காக உங்களிடம் கொடுத்தார். நீங்கள் என்னை நன்றாகவே பார்த்து கொள்கிறீர்கள்.
நம் இருவரின் உறவு இன்னும் பலப்படட்டும்..
உங்களுக்கு நான் எனக்கு நீங்கள்..
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் விரும்பும்
காயத்ரி ராஜகோபால்