Guru Pooja Experience by Mrs.Vatsala - Bombay
Guru Pooja Experience by Mrs.Vatsala - Bombay

சில அற்புதங்கள் சில நாட்களுக்கு நினைவு விட்டு அகலாது
இன்னும் சில அற்புதங்கள் பல நாட்களுக்கு நம்மை விட்டு அகலாது
ஒரு சில அற்புதங்கள் மட்டுமே நெஞ்சை விட்டும் அகலாது
வாழும் காலம் வரை இதயத்தில் ஆழமாக பதிந்து என்றுமே
அலகாத அற்புதங்களாக மாறி விடும்.
மஹாபெரியவா நின் பாதம் சரணம்

சுமார் இருபத்தி ஐந்து ஆண்டு காலம் மனதளவில் பாதிக்கப்பட்டு
எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையான ஒரு பெண்ணை
நொடிப்பொழுதில் மீட்டெடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்த நீ
பிரும்மனா விஷ்ணுவா ஈஸ்வரனா மொத்தத்தில் நீ ஒரு
குரு பூஜை சக்கரவர்த்தி
இந்த பதிவை படியுங்கள். உங்களுக்கே புரியும்.
மஹாபெரியவாளும் அவரது அற்புதங்களும் நம் மனதை விட்டு என்றும் அகலாது.அந்த அளவுக்கு நாம் நம்முடைய வாழ்க்கையிலும் பல பக்தர்களது வாழ்க்கையிலும் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கிற நாளை நிகழப்போகின்ற அற்புத அனுபவங்கள் நம் மனதில் நீங்க இடம்பெற்று விட்டன.
அப்படி ஒரு பக்தை வாழ்வில் நிகழ்ந்த மஹாபெரியவா குரு பூஜை அற்புதத்தை இந்த பதிவில் நாம் இன்று அனுபவிக்கலாம்...பக்தை எனக்கு ஆங்கிலத்தில் எழுதிய பதிவை என்னுடைய வழக்கமான பாணியில் உங்களுக்காக தமிழில் எழுதி சமர்ப்பிக்கிறேன்.
பக்தையின் பெயர் திருமதி வத்சலா. இவர் இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையில் தற்பொழுது வசித்து வருகிறார். இவரது கணவர் நீண்டகாலமாகவே அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
திருமணம் ஆகி உடனே அமெரிக்காவில் வசிக்க ஆரம்பித்து விட்டனர் இந்த தம்பதிகளுக்கு. ஒரு சில ஆண்டுகளில் முதல் பெண் குழந்தையை கடவுள் தாம்பத்திய பரிசாக கொடுத்தார். குழந்தை மற்ற குழந்தைகளை போல் மிகவும் அழகாகவும் புத்திசாலியாகவும் இருந்தது. நாட்கள் நகர்ந்தன.வருடங்கள் உருண்டோடின. குழந்தை நடக்க ஆரம்பித்தது.ஓட ஆரம்பித்தது,. பேசவும் ஆரம்பித்தது.
குழந்தை பேசஆரம்பித்து விட்டால் குழந்தை அறிவு பூர்வமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டது என்றுதானே அர்த்தம். அறிவு அனுபவமாக மாறும் ஆரம்ப நிலையில் பள்ளியில் சேர்ந்து படிக்கும் பக்குவத்திற்கு வந்து விடுகிறது ஒருகுழந்தை.
குழந்தையை அமெரிக்காவில் உள்ள பள்ளியில் சேர்த்தார்கள். நான்கு வருடங்கள் முடிந்தன. இந்த குழந்தை கீர்த்தனாவிற்கு ஒரு தம்பியும் பிறந்தான்.தம்பி பெயர் கர்ணா. தம்பியும் வளர்ந்தான்.
இந்த சமயத்தில் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிக்கு இருகுழந்தைகளும் செல்ல பேரக்குழந்தைகளாக மாறின.. எல்லா பாட்டிகளுக்கும் இருக்கும் குணம் இந்த பட்டியிடமும் இருந்தது. அதுதான் இரு பேரக்குழந்தைகளில் தனக்கு செல்லமான பேரக்குழந்தையை கொஞ்சுவது. பிடித்த பேரக்குழந்தையை கொண்டாடுவது. பிடிக்காத பேரக்குழந்தையை மட்டம் தட்டுவது.
இது போன்று அன்றாடம் கீர்த்தனாவை மட்டம் தட்டுவது. "உன் அம்மா வத்சலா உன் தம்பி கர்ணாவிடம் மட்டும் தான் பாசமாக இருக்கிறாள். உன்னை யாருக்கும் இங்கு பிடிக்காது என்று பார்க்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இது குழந்தை கீர்த்தனாவை மனதளவில் எவ்வளவு ஆழமாக பாதித்து கொண்டிருக்கிறது என்பதை உணராமலேயே இந்த தவறான அணுகுமுறையை செய்து கொண்டே இருந்தார்கள் தாத்தாவும் பாட்டியும்.
குழந்தை கீர்த்தனா மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு மற்றவர்களுடன் பேசுவதையே தவிர்த்தாள்.. தனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்து கொண்டாள். இவளை விட்டு நண்பர்கள் விலகி சென்றார்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க தன்னுடைய மணிக்கட்டில் ப்ளேட்டின் ( Blade) துணை கொண்டு அறுத்து கொள்வாள். இதே மனப்பான்மையுடன் தான் பள்ளிப்படிப்பை முடித்தாள். கல்லூரியிலும் நுழைந்தாள்.
தனக்கு ஒரு ஆண் நண்பர் துணையை தேடிக்கொண்டாள். அவனை விரும்பவும் செய்தாள். ஒரு நாள் அவனும் விலகி கொண்டான். வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்த கீர்த்தனா சிகரெட்டு பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானாள். மது உண்டா இல்லையா தெரியவில்லை. ஆனால் தன்னுடைய அம்மாவிடம் இருந்து விலகினாள். அம்மாவின் ஸ்பரிசத்தையே தவிர்த்தாள்
ஒரு அம்மாவிற்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவையா? பெண் கீர்த்தனாவிற்கும் தாய் பாசம் என்றல் என்ன என்றும் புரியவில்லை. அம்மாவை கட்டி கூட பிடிக்க மாட்டாள். மிகவும் முரட்டு தனம். கடவுளை வெறுக்க ஆரம்பித்தாள். கோவிலுக்குக்கூட செல்ல மாட்டாள். தான் உண்டு தான் வாழ்கை உண்டு என்று இருப்பாள்.
இந்த நிலையில் குழந்தைகளுக்காக அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்து வர்த்தக தலைநகரான மும்பையில் குடியேறினர். வத்சலா தம்பதியினர்..
மேலே சொன்ன அனைத்தையும் என்னிடம் கீர்த்தனாவின் தாயார் வத்சலா என்னிடம் சொல்லி அழுதாள். நான் அடுத்த நாளே மஹாபெரியவாளிடம் சென்று அழுது குரு பூஜைக்கு உத்தரவு வாங்கினேன். வத்சலாவை தொலை பேசியில் அழைத்து குரு பூஜை விவரங்களை சொன்னேன்.
அற்புதத்தின் ஆரம்பம்:
முதல் வார மஹாபெரியவா குரு பூஜை ஆரம்பித்தது. பூஜை முடிந்தது. மஹாபெரியவா கற்பூர ஹாரத்தி காட்டப்பட்டது . இந்த சமயத்தில் குழந்தை கீர்த்தனா ஹாலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். யாரும் கூப்படாமலேயே தானே பூஜை அறைக்கு வந்தாள். மஹாபெரியவாளுக்கு காட்டப்பட்ட கற்பூர ஜோதியை இரு கைகளாலும் எடுத்து முகத்தில் ஏற்றுக்கொண்டாள்.
இந்த கீர்த்தனாவின் செயல் வீட்டிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. எல்லோரும் அதிர்ந்து போனார்கள். இதற்கு மேலும் அற்புதம் தொடர்ந்தது.. படிப்பில் கவனமே இல்லாமல் இருந்தாள் கீர்த்தனா. கல்லூரி இறுதி தேர்வை கூட எழுதுவதை தவிர்த்தாள்.
இப்படி இருந்த கீர்த்தனா முதல் வாரம் மஹாபெரியவா பூஜை முடிந்தவுடன் தான் எழுதாமல் தள்ளிப்போட்ட பிரென்ச் மொழி தேர்வுக்கு பதிவு செய்தாள். இவைகளை எல்லாம் சுலபமாக எழுதிவிட்டானே தவிர இவைகள் சற்றும் சாத்தியமே இல்லாத அற்புதங்கள்.
இருபத்தி ஐந்து வருடங்கள் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நொடி பொழுதில் இந்த இமாலய மற்றம் எப்படி வரும். மஹாபெரியவா மனது வைத்தால் எதுவும் சாத்தியமே. இருங்கள் அற்புதம் இன்னும்முடிந்த பாடில்லை.
இந்த சமயத்தில் தன்னுடைய மகனுக்கு உபநயனம் செய்ய முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். எனக்கு மின்னஞ்சலில் பத்திரிகை அனுப்பி என்னை அழைத்தார்கள். உங்களுக்கு தெரியுமே. நான் கடந்த பத்து வருடங்களாக வெளி உலகை பார்த்ததில்லை.அதனால் எனக்கு குரல்கொடுக்கும் திருமதி சவீதா முரளிதர் அவர்களிடம் வேண்டிக்கொண்டேன். சவீதா அவர்களும் என் கோரிக்கையை ஏற்று பூணல் கல்யாணத்திற்கு செல்ல சம்மதித்தார்கள்.
இங்கு தான் ஒரு அற்புதம் நடந்தது.
உபநயனம் மிகவும் ரசிக்கும் வண்ணம் அழகாக சென்று கொண்டிருந்தது. நீண்டகாலம் கழித்து சந்திக்கும் உறவினர்கள் நண்பர்கள் இன்னும் எத்தனையோ இனிமையான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
நம்முடைய மஹாபெரியவாளும் வத்சலாவின் குரு பூஜைக்கு சென்று விட்டு தன்னுடைய வேலைகள் முடியாமல் பூணல் கல்யாண வீட்டிற்குள்ளும் பிரவேசித்து விட்டார். எதற்காக என்பது மேலே படியுங்கள் புரியும்.
வத்சலாவின் மகள் கீர்த்தனாவின் இருபத்தி ஐந்து வருட கால மன நிலையை சகஜ நிலைக்கு கொண்டு வந்து வேண்டாத பழக்கங்களை விட வைத்து அவளை ஒரு நல்ல மகளாக வத்சலாவிற்கு திரும்ப தர வேண்டாமா. கீர்த்தனாவின் மனதிற்கு புகுந்து விட்டார் மஹாபெரியவா.
இந்த சமயத்தில் ஒரு நாடகம் அரங்கேறுகிறது. வத்சலாவின் தாய் மாமாவிற்கும் வத்சலாவிற்கும் நெருங்கிய சொந்தங்களில் ஒருவர் சண்டையை ஏற்படுத்தி விட்டார். இதுபோல் உறவுகளுக்குள் விரிசலை உண்டு பண்ணுவதற்கென்றே சில உறவுகள் அலையும். அது போல் வந்த சில மிருக உறவுகள் வத்சலாவின் சந்தோஷ மன நிலையை சீர்குலைத்து பூணல் கல்யாண வீட்டை ஒரு அழு குரல் கேட்கும் மாயணமாக ஆக்கி விட்டார்.
வத்சலா தனி அறையில் ,குலுங்கி குலுங்கி அழுது யாருடைய ஆதரவும் கிடைக்காமல் தனிமரமாக நின்றாள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கீர்த்தனாவின் மன நிலை இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்று தன்னுடைய பாசமுள்ள தாயின் முகம் நினைவுக்கு வந்தது. இரண்டு நொடிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் மஹாபெரியவா அற்புதம் ஒரு மின்னலைப்போல் கீர்த்தனாவின் உடலை உலுக்கியது.
கீர்த்தனா புதிய பெண்ணாக எழுந்தாள். தன்னுடைய சிகரட் பெட்டிகள் மற்றும் லாகிரி வஸ்துக்கள் எல்லாவற்றையும் எடுத்து தெருவில் வீசினாள். விவரம் தெரிந்த நாளில் இருந்து அம்மாவை கட்டிகொள்ளாத கீர்த்தனா கண்ணீர் கண்களுடன் கட்டி அணைத்து "உனக்கு நான் இருக்கிறேன்.நீ ஏதற்கும் கவலை படாதே. இனி என்னிடம் எந்த கெட்டபழக்கமும் கிடையாது. உனக்கு நான் துணை இருக்கிறேன் என்று அம்மாவை தேற்றினாள் கீர்த்தனா.
இத்தனை நாளும் தடம் மாறி போயிருந்த தன்னுடைய மகள் நொடிப்பொழுதில் குடும்பத்தின் குல விலக்காக திரும்பிய அற்புதத்தை என்னவென்று சொல்ல.
இந்த சமயத்தில் வத்சலா தன்னுடைய மகளை கீர்த்தனவாக பார்க்கவில்லை. அவளை ஆண் பெண் பாதி அர்தநாரீஸ்வராக தான் பார்த்தாள்.

பெண்ணாக இருந்த கீர்த்தனா
அர்த்தனரீஸ்வரராக அவத்ரம் எடுத்த அற்புதம்
மஹாபெரியவா சரணம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் விரும்பும்
காயத்ரி ராஜகோபால்