Guru Pooja Experience by Mrs.Yogambal Chennai

எங்கள் பிரார்த்தனைகள் உன் காதில் விழுந்தும் மௌனமாகவே இருக்கிறாய் ஆனால் எங்களுக்கு பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைத்தவுடன்
எங்கள் கண்கள் கலங்கி விடுகின்றன. உன் மௌனத்திற்கு காவியத்தை விட சக்தி அதிகம்
மஹாபெரியவா நின் பாதம் சரணம்
Guru Pooja Experience by Mrs.Yogambal
நான் உங்கள் சகோதரி யோகாம்பாள். உங்களைப்போல் நானும் ஒரு மஹாபெரியவா பக்தை. நான் ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி.நீண்ட நாட்களாகவே எனக்கு அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய பாக்கி தொகை வராமலேயே இருந்தது. மனதளவில் மிகவும் சங்கடத்தில் இருந்த எனக்கு தெரிந்தவர்கள் மூலம் .G.R. மாமாவின் மஹாபெரியவா குரு பூஜை பற்றி கேள்வி பட்டேன்.
மாமாவை தொடர்பு கொண்டு என் பிரார்த்தனைகளை சொன்னேன். மாமாவும் மஹாபெரியவாளிடம் எனக்காக வேண்டி மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி கொடுத்தார்.
முதல் வார பூஜையை வியாழக்கிழமை முடித்தேன்.முடித்த அதே நேரத்தில் அரசாங்கத்தில் நெடு நாட்களாக எனக்கு வராமல் இருந்த பாக்கி தொகை வங்கியில் வந்து விட்டது. இந்த தொகை குரு பூஜை செய்யும் முதல் நாள் வந்திருக்கலாம். அல்லது வேறு எதோ ஒரு நாளில் வந்திருக்கலாம்.அது எப்படி குரு பூஜை செய்த நாள் அன்று வரவேண்டும்.
இதில் இருந்தே தெரியவில்லையா நிச்சயமாக இது ஒரு மஹாபெரியவா அற்புதம் என்று.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
மஹாபெரியவா பக்தியுடன்
திருமதி யோகாம்பாள்
Hosted by
Gayathri Rajagopal