குரு பூஜை அற்புத அனுபவங்கள் திருமதி கௌசல்யா
குரு பூஜை அற்புத அனுபவங்கள் திருமதி கௌசல்யா

பூர்ண பிரபஞ்சமே
உன் கருணையை பெறுவதற்கு
பூஜா விதானங்கள் தெரியவேண்டுமா?
சாஸ்திரங்கள் ஸ்தோத்திரங்கள் தெரிய வேண்டுமா?
எதுவும் தெரிய வேண்டாம்
உருகும் பக்தியும் இமாலய நம்பிக்கையும் போதும்
கேட்டதும் கிடைக்கும் கேட்காததும் கிடைக்கும்
சொல்கிறார் திருமதி கௌசல்யா
என் வாழ்க்கையில் குரு பூஜை மூலம் மஹா பெரியவா நடத்திய அற்புதம்
என் பெயர் கௌசல்யா. என் மகனின் பெயர் விக்னேஷ்.
ஒரு மாதத்திற்கு முன்புதான் எங்கள் வாழ்க்கையில் பெரியவா நடத்திய அதிசயத்தை GR மாமா மூலமாக இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டேன்.
அந்தக் கட்டுரையின் இறுதியில், மீண்டும், அந்த மகானின் அற்புதத்தினை பகிருவேன் என்றே முடித்து இருந்தேன். அதை அந்த கருணைக்கடல் இப்போது என்னை எழுத வைத்து இருக்கிறார்.
என் மகன் CA இறுதி படித்து கொண்டிருக்கிறான். அதில் கடந்த மே மாதம் நடந்த தேர்வில் 2 Group, அதில் ஒரு குரூப் மகா பெரியவா ஆஸியில் முடித்துவிட்டான். அந்த விஷயமெல்லாம் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
அப்போதே, அதில், என் மகனுக்கு ஒரு பெரிய ஆடிட்டிங் நிறுவனத்தால் முதல் கட்ட நேர்க்காணல் நடந்ததையும் கூறியிருந்தேன். அன்றுதான் நான் 6 வது வார பூஜை (12/07/2018) செய்து முடித்தபோது, அந்த நேர்க்காணலும், மகா பெரியவா ஆஸியில் வெற்றிகரமா நடந்து,
அடுத்த கட்டம் விரைவில் வரும் என தெரிவித்தார்கள். ஆனால், வெகு நாட்கள் ஆகியும், எந்த தகவலும் வரவில்லை. அது குறித்து, கவலை என்னை ஆட்கொண்டபோதெல்லாம் GR மாமாவிற்க்குத்தான் தெரிவிப்பேன்.
அவர் அளிக்கும் பதில்கள் , தன்னம்பிக்கையும், தெம்பையும் மட்டுமே தரும். அதில் மனது, லேசாகி அமைதியடையும். அவர், தரும் பதில்கள், பெரியவா ஆசி உங்க குடும்பத்துக்கு உண்டு, அருள் புரிய தொடங்கிவிட்டார் என்றே நம்பிக்கையை ஊட்டுவார்.
நானும், விடாமல், 7வது, 8 வது வார குரு பூஜையை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தேன். 8 வார பூஜை முடித்த அடுத்த வாரம், கடந்த ஆகஸ்ட் 8ந்தேதி என் மகனுக்கு 2ம் கட்ட நேர்க்காணல் நடந்து, அதுவும் அந்த மகானின் அருளில் வெற்றியாக முடிந்தது.
இந்த நேர்க்காணல் யாவுமே தொலைபேசி வாயிலாகவே நடந்தது. 8ந்தேதிக்குப் பிறகு, கடைசி கட்டம் 10ந்தேதி (through video call) வெற்றியுடன் முடிந்து வேலையும் உறுதியாகிவிட்டது. நல்ல இடத்தில வேலை வாய்ப்பு கிடைக்கத்தான் அந்த கருணைக்கடல் தாமதம் செய்தாரோ என்னவோ. எப்படியோ, எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இதற்கிடையில் 9ந்தேதி வியாழன் அன்றுதான் 9வது வார குரு பூஜையை முடித்தேன். 10ந்தேதி, நேர்க்காணல் வெற்றியாக முடித்து அந்த மஹான் எங்களுக்கு பரிசளித்துவிட்டார்.
இங்கு நான் முக்கியமா 9 வார குரு பூஜை குறித்து சொல்லியே ஆக வேண்டும்.
எனக்கு GR மாமாவின் அறிமுகம் கிடைத்தது ஜூன் 5, 2018 TUESDAY. அவர் உடனே, எனக்கு குரு பூஜைக்குரிய தகவல்களை அனுப்பியதும், நான் அந்த வார வியாழக்கிழமையே (7ந்தேதி) என் முதல் வார பூஜையை தொடங்கினேன். இந்த பூஜையை தொடங்கி, 6வது வாரம், என் மகனுக்கு முதல் நேர்க்காணல் வெற்றி, அதற்கு அடுத்த வாரம் உடனே அவனுக்கு CA தேர்வு முடிவுகளில், அவன் எதிர்பாராத 1st group வெற்றி என்று பெரியவா, சந்தோஷகடலில் மிதக்க வைத்தார்.
இந்த 9 வாரத்திற்குள், என் குடும்பத்தில் மகிழ்ச்சியை அளித்த அந்த நடமாடும் தெய்வத்தின் மகிமையை என்னவென்று சொல்வது?.
ஒருவழியாக அந்த பெரிய நிறுவனத்தில் இருந்து, வேலைக்கான உத்தரவு 10/09/2018 அன்று கிடைத்து, இதோ 17/09/2018, வரும் திங்கள் அன்று வேலையில் வந்து சேரும்படி அழைப்பும் வந்து விட்டது.
கொஞ்சம் கால தாமதம் என்றாலும், மஹா பெரியவா, ஒரு ஒரு சிறந்த கம்பெனியில் என் மகனுக்கு வேலை வாய்ப்பு வழங்கி ஆசீர்வதித்து இருக்கிறார்.
தினமும் அவர் படத்திற்கு, பூ வைத்து, விளக்கேற்றி, வணங்கி வருகிறேன். எனக்கு, பெரியவா பற்றி எந்த ஸ்லோகமோ அல்லது மந்திரமோ பெரிதாக தெரியாது. ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர என்று சொல்லி, பெரியவா சரணம் மட்டுமே சொல்லுவேன். பிறகுதான், என் உறவினர் மூலம், பெரியவா காயத்ரி மந்திரம் தெரிந்து, அதுவும் சொல்ல ஆரம்பித்தேன்.
9 வார குரு பூஜை நான் முடித்தாலும், இப்போதும் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அவர் படத்திற்கு மாலை அணிவித்து, அவர் மந்திரத்தை உச்சரித்து, 108 பிரதட்சிணம், செய்து வருகிறேன்.
என் மகனுக்கு, இன்னும் CA வில் ஒரு group முடிக்க வேண்டும். அதுவும் அந்த மஹான் நடத்திக் கொடுப்பார். மென்மேலும், இன்னும் என் மகனின் வாழ்க்கையில் ஏற்றங்களை அளித்து, சாதிக்க என்றும் அவர் கவசமாக இருந்து காப்பார், என்ற நம்பிக்கையுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
இதெற்கெல்லாம் ஒரு கருவியாக இருந்த GR மாமா அவர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. நமக்காக பிரார்த்திக்கும், அவர் பல்லாண்டு, பல்லாண்டு, நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனையும், மஹா பெரியவாளையும் பிரார்த்தனை செய்கிறேன்.
ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
உங்கள் சகோதரி
கௌசல்யா
Hosted by
Gayathri Rajagopal