Guru Pooja Experience by Sri.Kumarraj- Chennai

மனதில் தீராத பக்தியும்
தணியாத தாகமும் இருந்தால்
நீயே நேரில் வந்து உன் குரு பூஜையை
ஆரம்பித்து வைத்து விடுவாயோ
உண்மை தான்
உன் பக்தர் குமாரராஜ் ஒரு வாழும் உதாரணம்
Guru Pooja Experience by Sri.Kumarraj- Chennai
என் பெயர் குமாரராஜ்.நானும் உங்களைப்போல் மஹாபெரியவா பக்தர்களில் ஒருவன். என்னுடைய வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகளுக்கு தீவு கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தேன்.
இந்த சமயத்தில் தான் G.R..மாமா மற்றவர்களின் நலுனுக்காக மஹாபெரியவானிடம் மன்றாடி குரு பூஜைக்கு உத்தரவு வாங்கிக்கொடுத்து தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு மஹாபெரியவா ஆசிர்வாதத்தில் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார் என்று கேள்விப்பட்டேன்.
என்னுடைய அடுத்த வேலை G,R. மாமாவை நேரில்சந்திக்க வேண்டும். எப்படியோ மாமாவை தொலை பேசியில் தொடர்பு கொண்டு நேரம் பெற்றுக்கொண்டு சந்தித்தேன். மாமாவால் ஒரு நாளைக்கு மூன்று பேர் மட்டுமே பார்க்க முடிகிறது. முதல் அழைப்பிலேயே எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்தார் . G.R. மாமா.
நானும் மாமாவை சந்தித்தேன்,. என்னுடைய கஷ்டங்களை எல்லாம் எடுத்து சொன்னேன். அப்பொழுது மாமா என்னிடம் சொன்னது." நான் ஒரு சாமியாரோ ஜோசியரோ மந்திரவாதியோ கிடையாது. உங்களை போல் நானும் ஒரு பக்தர். உங்கள் கஷ்டங்களை மஹாபெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு குரு பூஜைக்கு உத்தரவு கேட்பேன். நான் நூறு பேருக்கு உத்தரவு கேட்டால் பத்து பேருக்குத்தான் உத்தரவு கிடைக்கும்.
இருந்தாலும் நான் முயற்சி செய்கிறேன். என்னை பொறுத்தவரை இந்த மஹாபெரியவா பணியை பிரதி பலன் பார்க்காமல் ஒருகைங்கர்யமாக மட்டுமே செய்து கொண்டு இருக்கிறேன். எப்பொழுது மஹாபெரியவா உங்களுக்கு குரு பூஜைக்கு உத்தரவு கொடுக்கிறாரோ அடுத்த வினாடி உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிய படுத்தி விடுவேன் என்றர்.
என்னுடைய அடுத்த கவலை மாமா எனக்கு மஹாபெரியவாளிடம் இருந்து உத்தரவு வாங்கிக்கொடுக்க வேண்டும். அது என்று என்பது தெரியவில்லை.பிரச்சனைகளின் தாக்கம் ஒரு புறம் என்னை அழுத்துகிறது.
ஆனால் மாமா சொல்லிக்கொடுத்தபடி மனதிற்குள் மஹாபெரியவாளை தியானம் செய்து கொண்டே இருந்தேன். அன்று புதன் கிழமை மதியம் எனக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. மின்னஞ்சல் சொல்லும் தகவல் எனக்கு மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்தரவு கொடுத்து விட்டார் என்பது. எனக்கு பிரச்சனைகள் எல்லாம் காற்றில் பறந்து விட்டது போன்ற உணர்வு. அன்று மதியம் அலுவலகத்தில் சில மணி நேரங்கள் அனுமதி பெற்று மஹாபெரியவவா படம் வாங்க கடை தெருவுக்கு சென்றேன்.
சுமார் இரண்டு மணி நேரம் அலைந்தும் என் மனதிற்கு ஏற்றாற்போல் மஹாபெரியவா படம் கிடைக்க வில்லை. ஏமாற்றத்துடன் அலுவலகம் திரும்பினேன். எனது வாகனத்தை நிறுத்தி விட்டு மஹாபெரியவாளை ஒரு நிமிடம் தியானம் செய்தேன். நான் மஹாபெரியாளிடம் சொன்னேன்
"பெரியவா நீங்கள் குரு பூஜைக்கு உத்தரவு கொடுத்தும் என்னால் நாளை காலை பூஜை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். இன்று இரவுக்குள் எனக்கு உங்கள் படம் கிடைத்தால் நான் நாளைக்கு குரு பூஜையை ஆரம்பிக்க முடியும். என் பிரச்சனைக்கும் ஒரு முடிவு வந்து விட்டது என்று அர்த்தம். அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று சொல்லிவிட்டு என்னுடைய இருக்கைக்கு சென்றேன்.
எனது முகம் வாடி இருப்பதை பார்த்த என் நண்பர் காரணம் அறிய விரும்பினார். நானும் காரணத்தை சொல்லிவிட்டு என் வீட்டிற்கு சோர்வுடன் கிளம்பினேன். இரவு உணவும் சாப்பிட்டவுடன் தூங்குவதற்கு என் படுக்கை அறைக்கு சென்றேன்.
படுக்கையில் அமர்ந்த்து கொண்டு திரும்பவும் மஹாபெரியவாளை நினைத்தேன். பின்வருமாறு சொன்னேன்." பெரியவா G.R. மாமாவை சந்திக்க உடனே நேரம் கிடைத்தது.மாமாவும் உடனே உங்களிடம் இருந்து உத்தரவு வாங்கிக்கொடுத்தார்.
ஆனால் என் துரதிஷ்டம் உங்கள் படம் கிடைக் வில்லையே பெரியவா. என் ஏமாற்றத்திற்கு ஒரு பதில் சொல்லுங்கள் பெரியவா என்று கேட்டேன். வாசலில் அழைப்பு மணி அடித்தது. தூங்க போகும் இந்த நேரத்தில் யார் என்று வாசலில் சென்று கதவை திறந்து பார்த்தேன்.அங்கு என்னுடன் வேலை செய்யும் நண்பர் நின்றிருந்தார்.
அவர் கைகளில் ஒரு பை இருந்தது. உள்ளே அழைத்து அமரவைத்தேன்.நான் அவர் வருகைக்கு காரணம் கேட்டேன். அவர் பையில் இருந்து இரண்டு மஹாபெரியவா படங்களை எடுத்தார். என் கண்கள் குளமாகி விட்டன.
என் கண்கள் கலங்க உங்களிடம் வேண்டினேன். அதற்கு பதில் இதுவா பெரியவா என்று அழுதேன். இதில்முக்கியமான அம்சம் என்னவென்றால் மஹாபெரியவா படங்கள் காஞ்சியில் பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து ஆசிர்வாதத்துடன் என் கைக்கு வந்தது.
நான் கடையில் வாங்கி இருந்தால் கூட படம் கிடைத்திருக்கும். ஆனால் நீங்கள் ஆசிர்வாதம் செய்த படம் எனக்கு வந்து நாளை பூஜை செய்ய வேண்டுமென்று நீங்கள் சங்கல்பம் செய்து கொண்டால் அதை யாரால் மாற்ற முடியம். என் பிரச்சனைகளை நீங்கள் கையில் எடுத்து விடீர்கள் என்பது தெரியும். இனி என் பிரச்சனைகளை பற்றி நான் ஏன் கவலை படவேண்டும். என்னை பொறுத்தவரை நீங்கள் ஒரு கலியுக தெய்வம்.

மஹாபெரியவா ஆசிர்வாதத்துடன்
எனக்கு கிடைத்த படம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
மஹாபெரியவா சரணம்
உங்களில் ஒருவன்
குமாரராஜ்
Hosted by
Gayathri Rajagopal