குரு பூஜை அற்புத அனுபங்கள் குமாரி ஜானகி

மஹாபெரியவா உன் தயாள குணம் யாருக்கு வரும் ஆபத்துக்கள் வரும் முன் உன் பக்தர்களை கை பிடித்து காத்து அருள்கிறாயே எங்கள் கண்களில் இருந்து வடியும் ஆனந்த கண்ணீரை உனக்கு காணியாக்குகிறோம் சரணம் பெரியவா
குரு பூஜை அற்புத அனுபங்கள் குமாரி ஜானகி
“என் வாழ்வில் மஹாபெரியவா” புத்தகமும் மஹாபெரியவா குரு பூஜையும் சேர்ந்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றிய அற்புதம்.
என் சகோதர சகோதரிகளே,
இந்த குரு பூஜை அற்புதம்பதிவு சற்றே அனுபவத்தில் வேறு பட்டது.வழக்கமாக எனக்கு என் மின்னஞ்சலில் பக்தர்கள் தங்களது அற்புத அனுபங்களை எழுதி அனுப்பி விடுவராகள். நான் அவைகளை படித்து அந்த சூழலில் சில நிமிடங்கள் வாழ்ந்து விட்டு மஹாபெரியவாளை தியானம் செய்து விட்டு என் வலது கை நடு விரலை டைப் செய்ய கீ போர்டில் வைப்பேன்.. அடுத்து நடப்பது என் விரலுக்கும் மஹாபெரியவளுக்கும் மட்டுமே தெரியும்.
உங்களை போல் எழுதி முடித்து விட்டு நானே ஒரு வாசகன் போல படிப்பேன்.ஆனால் இந்த பதிவின் நாயகி ஜானகி அனுப்பிய அற்புத அனுபவத்தை படிக்கும் பொழுது நான் நிறையவே அசந்து போனேன்..
எளிமையான ஆங்கிலநடை நடந்த அற்புதத்தை அற்புதமாகவே அனுபவித்து எழுதி இருக்கிற உண்மை உள்ளம். நான் வழக்கமாக ஒவ்வொருவர் எழுதி அனுப்பும் அற்புத அனுபவங்களை சற்றே ஒழுங்கு படுத்தி எழுதுவேன்.. ஆனால் பக்தை ஜானகி எழுதிய எழுத்துக்களில் என்னால் எங்கும் கை வைக்க முடியவில்லை.
காரணம் சற்றே மாற்றினாலும் அற்புதத்தின் ஆழமும் அடிநாதமும் குறைந்து விடும். நான் ஒன்றுமே செய்யாமல் ஜானகி எழுதியதை அப்படியே வெளியிட்டுளேன். பதிவு சற்றே நீளமாக கூட இருக்கலாம்..
பொறுமையுடன் படியுங்கள். ஜானகியின் மன நிலையில் சற்று நேரம் வாழ்ந்து விட்டு படியுங்கள்..உங்களுக்கு எல்லாமே புரியும். உங்கள் கனிவான வார்த்தைகளால் ஜானகியை ஊக்கப்படுத்துங்கள். அவள்ஒரு புதிய பாதையை தேர்ந்தேடுத்து புதிய வாழ்க்கையை அமைத்து கொள்ளட்டும்.
உங்களுடன் சேர்ந்து ஜானகியை நானும் வாழ்த்துகிறேன்.
என்றும் உங்கள் நலனில் நாட்டம் கொண்டுள்ள
காயத்ரீ ராஜகோபால்