Guru Pooja Experience of Mrs. Radhamani –Coimbatore
Guru Pooja Experience of Mrs. Radhamani –Coimbatore

விஸ்வரூபம் காண்பதா காண்பிப்பதா
நாங்கள் உன் அற்புதத்தை அனுபவிக்கிறோம்
உன் விஸ்வரூபம் காண்கிறோம்
உன்னை விஸ்வரூபத்தில் தரிசித்து கொண்டிருக்கும்
பக்தை சகோதரி ராதாமணி
அன்பு ஜி.ஆர் அண்ணா,
அனுதினம் மஹாபெரியவா மஹிமை அளவில்லாமல் நமது குரு பூஜை மூலம் பெருகிக்கொண்டு வருவது மிக்க மகிழ்ச்சி. அதிலும் அடியேனை பொறுத்தவரை குரு மஹிமை பதிவுக்கு நீங்கள் அடிக்கடி போடும் ஸ்ரீ பெரியவா படம் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த படம் தான் நான் அனுதினம் வணங்கி வந்து குரு பூஜையும் செய்து மீண்டும் வணங்கி வருவது. மகிமை வாய்ந்த ஸ்ரீ சைலம் தலத்தின் படிகளில் மஹா பெரியவா அற்புதமாக காட்சி கொடுத்த படம்.
நம்முடன் பேசத்துடிக்கும் படம். நான் பெரியவா அதிர்ஷ்டானத்திற்கு 2013 ல் முதன் முதலில் செல்லும் போது ஸ்ரீ பாதுகா பூஜை செய்யும்போது கிடைத்த பிரசாத படம். (அதற்கு முன்பு இணையத்தில் பிரிண்ட் போட்ட பேப்பரை ஒட்டி வணங்கி வந்தேன்).
ஆனால் பிரார்த்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் அங்கு சென்றேன். பல மகிமைகளை படித்தும், இருமுறை பெரியவா தரிசனம் கனவில் வந்தும் பெரிதாக அனுபவிக்க முடியவில்லை. என் கர்மவினைகள் அப்படி.
அதன் பிறகு 2017 வரை சாய்பாபா பக்தியில் திளைக்கும் அமைப்பு ஏற்பட்டு ஒருமுறை எனக்கு தோன்றியவாறு அவருக்கு விரதம் இல்லாமல் விளக்கு ஏற்றி 9 குரு வாரம் வீட்டில் வழிபட்டேன். இதற்கு இடையில் பல தெய்வ தல யாத்திரை, கிரிவலம், பாபா, ஸ்ரீ பெரியவா அதிர்ஷ்டானம், பரிகாரங்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. பிறரையும் அதில் ஈடுபடுத்தியும் வந்தேன். துன்பங்களும் பிரார்த்தநையும் தொடர்ந்தது. துன்பங்களை பற்றி எழுதினால் அதற்கு ஒரு பதிவு போதாது.
ஆனால் தற்போது எல்லாம் எனக்கு ஸ்ரீ ஜி.ஆர் அவர்களால் அவை மறந்து புதுப்பிக்கப்பட்டேன். ஸ்ரீ சாய் சரிதத்தில் "உனது குருவை நீ சரணடை" என்ற வாக்கியம் படித்த உடன் பெரியவா படத்திற்கும் 9 வாரம் விளக்கு போடலாம் என்று நினைத்து இணையத்தில் ஏதாவது அது பற்றி இருக்கும் என " எளிமையாக பெரியவா பூஜை எப்படி செய்வது" என்று தம்ழில் டைப் செய்தேன்.
அதன் பிறகு ஜி.ஆர் குரு மகிமை பொக்கிஷம் + பெரியவா அருள் இணையத்தளம் 21.3.2018 ல் கிடைத்தது. குரு பூஜையும் இனிதே நிறைவேறி சில பிரார்த்தனைகள் பலித்தும், சிலவற்றுக்கு காலம் கணிந்தும் கொண்டுள்ளன.
குரு பூஜை வாரங்களில் இருமுறை பெரியவா கனவில் நீராடும் தரிசனம் கண்டேன். தற்போது பிரார்த்தனைகளை விட எனக்குள் மஹாபெரியவாவும், ஜி.ஆர் அய்யா மேல் பக்தியும் எனக்குள் வந்துவிட்டது
தான் இத்தனைக்கும் மேல்! இதனை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் பிரார்த்தனை பலருக்கு விரைவில் நிறைவேறலாம் அல்லது தாமதம் ஆகலாம். ஆனால் மஹாபெரியவா நம்முள் வருவது + வாழும் காலத்தில் நமக்காக, பிரதி பலன் இன்றி பிரார்த்தநை செய்யும் ஜி.ஆர் அய்யா, அவர்க்கு துணை நிற்கும் குடும்பம்+ மற்ற பக்தர்கள் அனைத்தும் கிடைப்பதற்கரிய பொக்கிஷம் ! எனது ஜென்மம் பயன் பெற்றுவிட்டது.
இதில் இன்னொரு செய்தி. பிரார்த்தநை என்பதும் வேண்டாத விஷயமில்லை. அதுவும் தேவைதான். அது தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டுவந்து ஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் திருவடியில் சேர்த்தது. என் பிரார்த்தனைகளுக்கும் துன்பங்களுக்கும் இன்னேரத்தில் நன்றி சொல்கிறென். ஏன் என்றால் இப்போது பெரியவர்களிடத்தில் பிரார்த்தனை என்பதில் இருந்து பெரியவரே பிரார்த்தனை என்றாகிவிட்டது.
இதுவும் ஒன்றும் சுலபத்தில் நடக்கவில்லை.
நான் பொதுவாக ஜி.ஆர் அய்யா அவர்களை அடிக்கடி பேசி தொந்தரவு தர விரும்பமாட்டேன். அவர் தன்னலமில்லாமல் செய்யும் மகத்தான பணிக்கு இடையுறு என் பங்காக இருக்க வேண்டாம் என நினைப்பேன்.ஆனால் அக்கம் பக்கம் என்னருகில் எனது நலம் விரும்பும் ஒரு பெரியவா பக்தை + பெரியவா படத்தின் முன்பும் புலம்புவேன், சண்டைகூட போடுவேன். அப்போது அவர்கள் கனவில், எனக்காக பெரியவா வந்த கதை கீழே.( ஆங்கிலத்தில் முன்பு ஜி.ஆர் அவர்களுக்கு அனுப்பியது.)
இப்படிக்கு
என்றும் மஹாபெரியவா பக்தை
சாரதாமணி