Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -069 என் இல்லத்திற்கு வந்த ஊஞ்சல் பெரியவா


என் வாழ்வில் மஹாபெரியவா -069

பிரதி வியாழன் தோறும்

பொதுவாக சொல்லுவார்கள்

பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு

ஈடு இணை ஏதுமிலை என்பார்கள்

ஆனால் என்னை பொறுத்தவரை

நீ என் தாய்க்கு இணையானவர் மட்டுமல்ல

தாய்க்கும் ஒரு படி மேலே

நீ தாயுமானவன்

எனக்கு எண்ண தேவை என்பதை முன்பே உணர்ந்து

இந்தா வைத்துக்கொள் என்று கொடுக்கும் பொன் மனம்

யாருக்கு வரும்

எனக்குள் நீ உனக்குள் நான்

என் இல்லத்திற்கு வந்த ஊஞ்சல் பெரியவா

சென்ற மாதம் இருபதாம் தேதி இரவு ஏழரை மணிக்கு தானே அற்புதத்தை நிகழ்த்தி என் இல்லத்திற்கு வந்து கோவில் கொண்டுள்ள ஊஞ்சல் பெரியவா.

ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு என் வாழ்வில் மஹாபெரியவா பதிவு வெளி வருகிறது. எனக்கும் என்னுடைய அற்புத அனுபவங்கள் எல்லாவற்றையும் எழுதி விட வேண்டும் என்ற ஆவல் நிறையவே இருக்கிறது.. ஆனால் என்னுடைய எழுத்து பணி என்னை மொத்தமாக ஸ்வீகரித்துக்கொண்டுள்ளது.

அடுத்து அடுத்து புத்தகங்கள் வெளியீடு வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு மற்றவர்களிடம் உதவி கேட்டு பேசுதல் மஹாபெரியவா பக்தர்களின் குரு பூஜை அனுபவங்களை ஒரு பதிவாக வெளியிட எனக்கு வரும் மின்னஞ்சல்களை ஒழுங்கு படுத்தி எழுதுவது மற்றவர்களின் துன்பங்களுக்கு தீர்வு வேண்டி நாள் முழுவதும் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்வது இத்தனைக்கும் நடுவில் என்னுடைய நித்ய அனுஷ்டங்களை செய்வதை எந்த விதத்திலும் நிறுத்த முடியாது

தினமும் மூன்று நேரம் சஹஸ்ர காயத்ரி செய்வது என்னுடைய சொந்த பணிகளை செய்வது போன்ற எண்ணற்ற வேலை பளுவினால் நேரத்துடன் போட்டி போட்டுகொண்டு ஓடுகிறேன். இருந்தாலும் முடியவில்லை. எல்லோரையும் போல எனக்கும் ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம்தான். என்ன செய்வது.

இன்னும் என்னுடைய சமையல் அற்புதங்களை ஆரம்பிக்க முடியாமல் அப்படியே நிற்கிறது. இத்தனைக்கும் நடுவில் மஹாபெரியவா என் வாழ்க்கையில் செய்த அற்புதங்களை நேரம் தாழ்த்தாமல் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மஹாபெரியவா எனக்கிட்ட உத்தரவு.

எனக்கு சமீபத்தில் ஏற்ப்பட்ட அற்புத அனுபங்களை சிலவற்றை இந்த வியாழக்கிழமையில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சென்ற மாதம் இருபதாம் தேதி வியாழக்கிழமை மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த அற்புதம் இரவு ஏழரை மணிக்கு நிறைவடைந்தது. நான் பக்தர்களின் நலனுக்காக என் நலத்தையும் பின்னுக்கு தள்ளி பக்தர்களின் நலனை முன் நிறுத்தி பிரார்த்தனை செய்வது வழக்கம். இது உங்களுக்கும் நன்றாகவே தெரியும்.

பிரும்ம முகூர்த்தத்தில் தொடங்கும் என் பிரார்த்தனை இரவு நான் படுக்க செல்லும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அன்று ஒரு பத்து இருப்பது பேருக்கு மட்டுமே நான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். இன்றைக்கு ஆயிரத்தையும் குடும்பங்களையும் தாண்டி இருக்கிறது என்னுடைய மஹாபெரியவா பிரார்த்தனைகள்.

வாழ்க்கையில் பிரச்னைகளுக்கா பஞ்சம்.. எத்தனை விதமான பிரச்சனைகள். சில பிரச்சனைகளை கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே நான் அழுது விடுவேன். இவைகள் எல்லாம் நம்முடைய கர்மாவின் பலன்கள் என்றாலும் கேட்கும் பொழுதே தாங்க முடியவில்லையே. அனுபவிப்பவர்களுக்கு எப்படி இருக்கும் . நினைத்து பாருங்கள்.

என் இதயம் அழும். கண்களில் கண்ணீர் ததும்பும். என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என்னிடம் தங்கள் கஷ்டங்களை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே என் கண்களிலும் கண்ணீர் வந்து விடும் என்னிடம் தங்கள் கஷ்டங்களை சொல்லிக்கொண்டிருக்கும் பக்தர்களின் கண்களிலும் கண்ணீர்.

அன்றுமுழுவதும் கனத்த இதயத்துடனேயே இருப்பேன். ஆனால் இரவு மஹாபெரியவா காலடியில் எல்லோருடைய கஷ்டங்களையும் தீர்வு வேண்டி கொட்டிவிட்டு வந்து படுக்கும் பொழுது என் மனம் மிகவும் மிகவும் லேசாகி விடும்

சிந்தனையற்ற ஒருஅமைதியான இரவில் மஹாபெரியவாளை ஜோதி வரூபமாக தரிசித்து கொண்டே தூங்கி விடுவேன். நான் தூங்கும் பொழுது என்னுடைய பதினேழு மணி நேரத்தின் கண்ணீர் விடும் அனுபவங்கள் எதுவும் என்னை பாதிக்காமல் மஹாபெரியவா என்னை பார்த்துக்கொள்வார்.

மறு நாள் காலை மூன்று மணி முப்பது நிமிடங்களுக்கு எழும் பொழுது ஒரு சிறு குழந்தையின் துள்ளலுடன் புத்துணர்ச்சியுடன் எழுந்து விடுவேன். நாள் எழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சங்கர கோஷம் என் காதுகளில் ஒலிக்கும். அந்த பிரபஞ்சமே என்னை எழுப்பி லோக ஷேமத்திற்கு தயாராகு என்று அணையிடுவது போலெ இருக்கும். பிரபஞ்சத்தின் ஆழத்தையும் மஹாபெரியவா ஓரிரு முறை எனக்குகாண்பித்து இருக்கிறார்.

இனி உங்களை அற்புதத்திற்குள் அழைத்து செல்கிறேன்

சென்ற மாதம் இருபதாம் தேதி வியாழக்கிழமை அன்று காலையில் இருந்தே மஹாபெரியவா பக்தர்களின் கை பேசி அழைப்புகள் ஏராளமாக எனக்கு வைத்த வண்ணம் இருந்தன. எல்லாமே உடனடியாக செய்ய வேண்டிய பிரார்த்தனைகள். உயிர் பிரியும் தருவாயில் இருக்கும் ஆத்மாக்களின் சாந்திக்கும் உடலநிலை பாதிக்கப்பட்டிருக்கும் உறவுகளின் முன்னேற்றத்திற்கு மற்றும் சற்றும் எதிர்பாராமல் தங்களை தாக்கியிருக்கும் பிரச்னையில் இருந்து விடுதலை கிடைப்பதற்கும் என்று பல பிரார்த்தனைகள்.

ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் நான் எழுந்து சென்று மஹாபெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு வருவேன். எனக்கும் மன நிம்மதி. என்னை அழைத்தவர்களுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு. உடனே பயம் நீங்குதல் போன்ற நிகழ்வுகள் என்னையும் சந்தோஷப்படத்தும்.

ஆனால் அன்று மட்டும் பல முறை எழுந்து சென்று பிரார்த்தனை செய்ததில் எனக்கு கால்கள் கொஞ்சம் வலிக்க ஆரம்பித்தது. அப்பொழுது நேரம் சுமாராக நான்கு மணி இருக்கும். நான் மஹாபெரியவாளிடம் முறையிட ஆரம்பித்தேன்.

""பெரியவா எனக்கு எழுந்து எழுந்து வந்து கால் வலிக்கிறது பெரியவா. என்னுடைய அறைக்குள்ளயே நீங்கள் இருந்தால் இருந்த இடத்தில் இருந்தே இன்னும் பல பேருக்கு என்னால் பிரார்த்தனை செய்ய முடியுமே. பெரியவா .நீங்கள் ஏதாவது செய்ய கூடாதா பெரியவா. என்று முறையிட்டேன்".

அதற்கு பெரியவா எனக்கு கொடுத்த பதில் ."உனக்கு இடது காலும் கையும் இன்னும் வரவில்லை.இருந்தாலும் ஒரு நாள் கூட எனக்கு இடது கை கால் வரணும்னு கேட்கவே இலையேடா. பாவம் உனக்கு கால் வலிக்கிறது. கவலை படாதே போய் . நீ போய் உன் வேலையே பாரு. நான் பார்த்து கொள்கிறேன்",. என்றார்.சரி பெரியவா என்று சொல்லிவிட்டு நான் திரும்பினேன் . என்னுடைய பணியை துவங்கினேன்.

இதற்கு பிறகும் உலகத்தின் பல மூலைகளில் இருந்தும் பிரார்த்தனைகள் வந்து கொண்டுதான் இருந்தன. அன்று பிரார்த்தனைகளும் அதிகம் என் எழுத்து வேலைகளும் மிகவும் அதிகமாகவே இருந்தது. நேரம் போவது தெரியாமல் வேலை செய்து கொண்டு இருந்தேன்.

வேலைக்கு நடுவில் சற்றே கண்களை மூடிக்கொண்டு காலையில் இருந்து அந்த நொடி வரை நடந்த நிகழ்வுகளை மனதிற்குள் அசைபோடுவது வழக்கம்.அன்றும் அப்படித்தான் எண்ண அலைகளில் மூழ்கி இருந்தேன்.அப்பொழுது மஹாபெரியவா சொல்லிக்கொடுத்த தர்ம வழியில் தான் செல்கிறேனா. என்பதை உறுதி செய்து கொள்வேன்.

கண் விழித்தேன் இரவு மணி ஏழரை இருக்கும். மஹாபெரியவாளை ஒரு நொடி பார்த்தேன். பெரியவா என்னிடம் ஏதோ சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்தேன்.என் இருக்கையில் இருந்து எழுந்தேன். வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

என் மனைவி வாசலுக்கு சென்று கதவை திறந்தாள். வாசலில் யாரோ ஒரு வாலிபர் கையில் ஒரு துணியால் சுத்திய பொருளை மிகுந்த பய பக்தியுடன் இடுப்பில் ஒரு குழந்தையை வைத்து கொள்வது போல் வைத்து கொண்டு நாள் உள்ளே வரவேண்டும் என்று அனுமதி கேட்டார்.

அந்த வாலிபருடைய செய்கை கொஞ்சம் விநோதமாகத்தான் இருந்தது. என்மனைவி அந்த வாலிபரை உள்ளே அனுமதித்தாள்.இடுப்பில் இருந்த தனி மூட்டையை இறக்கி வைத்தார். ஒரு சிறிய பொருளும் துணியால் சுத்தப்பட்டிருந்தது. அதையும் ;பெரிய முட்டையின் அருகில் வைத்தார்.

என்ன அழைத்தார் . நானும் ஹாலிற்கு சென்று இருக்கையில் அமர்ந்தேன்.பெரிய மூட்டையை பிரிக்க சொன்னேன். வாலிபரும் மூட்டையை பிரித்தார். அதில் சற்றும் எதிர் பார்க்காத தேக்கு மரத்தால் ஆன ஊஞ்சல் ஒன்று இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. இப்பொழுது சிறிய மூட்டையை பிரித்தார். அதில் மஹாபெரியவா குந்தவைத்து உட்கார்ந்திருந்தார்.

என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் தளும்ப ஆரம்பித்து விட்டது..மிகவும்கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக்கொண்டேன்.நான் மதியம் ம