Featured Posts

நவராத்திரி


மூன்று சக்திகளின் ஒருமித்த உருவம்தான்

மஹாபெரியவா

நவராத்திரி

சிவ பெருமானுக்கு ஒரு ராத்திரி. சிவராத்திரி. மகா விஷ்ணுவிற்கு ஒரு ராத்திரி வைகுண்ட ஏகாதசி . ஆனால் அம்பாளுக்கு மட்டும் ஒன்பது ராத்திரிகள்.நவராத்திரி. அம்பாளை மூன்று விதமான சக்திகளாக பிரித்தார்கள்.

1) இச்சா சக்தி

2) க்ரியா சக்தி

3) ஞான சக்தி.

இச்சா சக்தி இந்த மூன்று சக்திகளும் மனிதனின் வாழ்க்கையோடும் உடலோடும் சம்பந்தப்பட்டது. .மனிதனின் மனதில் எழும் ஆசைகளுக்கு ஒரு தேவி. ஆசையை கொடுப்பவளும் அவளே கொடுத்த ஆசையை. அணைப்பவளும் அவளே. அவளே இச்சா சக்தி.

கிரியா சக்தி. இவள் நம்முடைய செயல்களுடன் சம்பந்தப்பட்டவள்.

நல்லது எது கெட்டது எது பிரித்து பார்க்கும் பக்குவத்தையும் ஞானத்தையும் கொடுப்பவள் சக்தி. ஞானத்தை கொடுப்பவள் சரஸ்வதி தேவி.

எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்த மூன்று தேவிகளும் சேர்ந்தே இருப்பார்கள். ஏன் தெரியுமா? ஞானம் என்பது அனுபவத்தில் இருந்து தான் பிறக்கிறது. நம்முடைய அனுபவம் நாம் செய்யும் செயல்களில் இருந்து பிறக்கிறது.

செயல்கள் அனைத்தும் அசைகளின் வெளிப்பாடு.ஆசைகளையும் செயல்களையும் கடந்து அனுபவங்களை பெற்ற பிறகு ஞானம் அடைவார்கள். இந்த இந்த உலக அறிவை தாண்டி தாண்டி பார்ப்பது ஞானம்.

சில பேருக்கு ஒரு கேள்வி பிறக்கலாம். ஆசையை தூண்டி செயல்களில் இறங்க வைத்து அந்த செயல்களில் இருந்து அனுபவம் பெற்றபிறகு ஞானம் அடைவதற்கு பதிலாக நேரடியாக சரஸ்வதி தேவி ஞானத்தை கொடுக்க முடியாதா? என்ற கேள்வி எழலாம்.

இது எப்படி என்றால் ஒரு தாய் வயிற்றில் கரு உண்டாகி அந்த கரு முன்னூறு நாளுக்கு மேல் தாயின் கற்பதில் வளர்ந்து தான் குழந்தை என்னும் ஒரு உருவத்தை பெறுகிறது.இதே குழந்தையை நேரடியாக இறைவனால் ஒரு நொடிப்பொழுதில் மனித குலத்திற்கு வாழ்க்கையில்கொடுக்க முடியுமா. .நிச்சயமாக முடியாது அல்லவா. அதே போல் தான் நேரடியாக ஞானத்தை அடைய முடியாது.

நமக்கு இவ்வளவு செய்யும் தேவியர்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? ஆத்ம சமர்ப்பணம். நம் ஆத்மா பூரணத்துவம் அடைந்தபிறகு ஆத்ம ஞானம் பெறுகிறது. உலக வாழ்க்கையை கடந்து பார்ர்கும் ஞானம் புற வாழ்க்கையை தாண்டி அக வாழ்க்கையின் ஆனந்தத்தை அடைந்து அனுபவிப்பது.

இப்படிப்பட்ட ஆத்ம ஞானத்துடன் நம்மை சமர்ப்பணம் செய்து விட்டால் பிரம்மத்துடன் ஐக்கியமாகிறோம் என்பது பொருள்.. நம்முடைய ஒவ்வொரு பிறப்பின் குறிக்கோளே இதுதானே. இந்த பிறவியிலாவது இந்த இலக்கை அடைவோமே. சிந்திப்போம் சிந்தித்து இந்த நவராத்திரி பண்டிகையை கொண்டாடுவோம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

இப்படிக்கு உங்கள் நலனில் அக்கறையுள்ள

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square