Featured Posts

மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்


குருவே சரணம் குரு பாதமே சரணம்

இனிய இல்லம் ஒரு கோவிலுக்கு சமம்

மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்

வாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருள் வேண்டும்

வாழும் வாழ்க்கைக்கும் பொருள் வேண்டும்

மஹாபெரியவா குரு பூஜை இரண்டையும் தருமே

இன்னும் ஏன் யோசிக்க வேண்டும்

நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம்

காயத்ரி ராஜகோபால்

நான் உங்களக்கு புதியவன் இல்லை. மஹாபெரியவாளின் அற்புதசாரல்களின் அற்புதத்தை வாழ்க்கையில் அனுபவித்தவன்,அனுபவித்துக்கொண்டிருப்பவன் எல்லா காலங்களிலும் என் இறுதி மூச்சு இருக்கும் வரை அனுபவிக்க ஆசைப்படுகிறவன்.

சிலருக்கு பலமாதங்களும் பலருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கப்பட்ட. ஒரு பெயர். நாம் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவிலையே தவிர ஒரு இருபது ஆண்டுகளுக்கு மேலாக பழக்கப்பட்ட ஒரு அனுபவம். அப்படி ஒரு அந்யோனியம்.

இது நானோ நீங்களோ ஏற்படுத்திக்கொண்ட ஒரு தொடர்போ உறவோ இல்லை

மஹாபெரியவா உருவாக்கிக்கொடுத்த ஒரு உறவு. என்னை பொறுத்தவரை உறவுகள் உருவாவது இல்லை இறையருளால் உருவாக்கப்படுகிறது ஒரு இறை காரணத்திற்காக.. என்ன இறை காரணம் என்பதற்கு நிச்சயம் நமக்கு காலம் பதில் சொல்லும்.

அந்த இறை காரணம் தெரியும் வரை புரியும் வரை நம்முடைய கடமை அந்த இறை பாதையில் நம் பயணம் தொடரவேண்டும். அந்த இறைப்பயணம் இனிதே இருப்பதற்காக எனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களையும் அதற்கு நீங்கள் உங்களுடைய எண்ணங்களையும் பரஸ்பரம் பகிர்நது கொண்டு வருகிறீர்கள்.. இந்த புனித உறவு ஒவ்வொருநாளும் பலப்படும். நாம் இருவருமே மஹாபெரியவாளின் விரல்களை பிடித்துக்கொண்டு இந்த புனித பயணத்தை இனிதே தொடர்வோம்.

என்னுடைய பிரும்ம முகூர்த்த வழிபாடு நீங்கள் எல்லோரும் அறிந்ததே.ஒவ்வொரு நாளும் காலை நான்கு மணிக்கு நான் இறை உலகத்தை பார்க்கிறேன் அனுபவித்துக்கொண்டு வருகிறேன். பொதுவாக பிரும்ம முகூர்த்தத்தில் நாம் செய்யும் பக்தியும் கேட்கும் வரங்களும் தாமதமின்றி கடவுள் நமக்கு அருள்பாலிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். இதை நான் பூரணமாக அனுபவித்துக்கொண்டும். உங்களிடமும் பகிர்ந்து கொண்டும் வருகிறேன்.

என்னுடைய இந்த அனுபவத்தையும் இதன் பலன்களையும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தால் மஹாபெரியாவா எவ்வளவு ஆனந்தப்படுவார்.. இந்த எண்ணத்தின் விளைவு தான் நான் மற்றவர்களின் நலனுக்காகவும் நான் என்னுடைய பிரும்ம முகூர்த்த வழிபாட்டில் மற்றவர்களின் கஷ்டங்களுக்காகவும் துன்பத்திற்க்காகவும் வாழ்க்கையில் படும் அல்லல்களுக்காகவும் மஹாபெரியவாளிடம் மன்றாடி வேண்டிக்கொள்வேன்.

இதற்கு காசு இல்லை பணம் இல்லை ஆனால் கிடைக்கும் வெகுமதி மனநிறைவு அளவற்றது அளர்ப்பரியது. சகல செல்வங்களுக்கும் அப்பாற்பட்டது, மற்றவர்களுக்கு வாழ்க்கை துன்பத்திலிருந்து கிடைக்கும் விடுதலை, பயமற்ற வாழ்க்கை ஒவ்வொருநாளும் மஹாபெரியவா நினைவுடன் துவங்கி மஹாபெரியவா நினைவுடனேயே நிறைவடையும். இதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கிறேனே. இது போதாதா. இதற்கு மேல் என்ன செல்வம் வேண்டும்.

வாழ்க்கையில் எப்போதுமே மஹாபெரியவா பக்தி என்னும் பாதுகாப்பு வட்டத்துக்குள்ளேயே நாம் பாதுகாப்பாக இருக்கும் பொழுது அந்த கிரஹங்கள் நம்மை என்ன செய்யும்.

அந்த கிரஹங்களையே ஆட்டிப்படிப்பது நம்

மஹாபெரியவா தானே

அந்த பரமேஸ்வரன் அவதாரமே மஹாபெரியவாதானே

மஹாபெரியவா எனக்கு கொடுத்த அற்புத அனுபவங்களை மற்றவர்களுடன் மஹாபெரியவா குரு பூஜை மூலம் பகிர்ந்துகொண்டு வருகிறேன். இந்த அற்புதங்களை அனுபவித்த பக்தர்கள் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். நாளை நீங்கள் மற்றவர்களுடன் உங்களது மஹாபெரியவா அற்புத அனுபவங்களை பகிர்ந்து கொள்ளப்போகிறீர்கள். இது ஒரு தொடர் சங்கிலி முயற்சி. ஒவ்வொரு ஆத்மாவும் அல்லல் படும் இன்னொரு ஆத்மாவை மீட்டுப்பதுதான் இந்த தொடரின் முயற்சி.

இந்த மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களின் நாயகிகள் நாயகர்கள் பலர். இவர்களின் அற்புதங்களை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று உங்களுடன் பதிவுகள் மூலம் நான் இன்று முதல் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.. . விரைவில் ஒரு நேர் காணலுக்கும் ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறேன்.

இவை எல்லாமே எதற்கு என்றால் வாழ்க்கையில் துன்பப்பட்டும் ஆத்மாக்கள் ஒரு நொடிப்பொழுதில் தவறான முடிவை எடுத்து அல்லலும் அவதியும் படுகின்றனர். நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். நம்முடைய இந்த அல்லல் படும் ஆத்மாக்களை மீட்டெடுப்பதை கூட ஒரு அர்த்தமாக வைத்து கொள்ளலாம் அல்லவா.

இங்கு பக்தர்களுக்கு தெளிவாக நான் ஒன்றை குறிப்பிட வேண்டுகிறேன்.

என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது பக்தர்களின் பிரச்சனைகளுக்கு ப்ரார்தித்துக்கொள்வேன். மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்திரவு கொடுப்பது இரண்டு விஷயங்களுக்காக.

ஒன்று பிரார்த்தனைகள் பலிதமாவதற்கு.இரண்டு ஒன்பது வார குரு பூஜைக்குள் பிரார்த்தனைகள் கர்ம பலன் காரணமாக பலிதமாகவில்லை என்றால் அந்த கால கட்டத்தில் கர்மாவை கழிக்க மஹாபெரியவா உங்களுடனேயே இருந்து கர்மாவை கழிக்க வைப்பார். இதற்கு காரணம் மஹாபெரியவாளின் வாக்குப்படி எந்த ஆத்மாவும் தங்களுடைய கர்மாவில் இருந்து தப்பிக்க முடியாது.

ஆகவே நான் இங்கு பக்தர்கள் நன்மைக்காக குறிப்பிட விரும்புவது மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்திரவு கிடைத்தவுடன் பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாக நினைக்க வேண்டாம் மேலும் எனக்கு பிரார்த்தனை மட்டுமே செய்யத்தெரியும். பிரார்த்தனைகள் பலிதமாவது மஹாபெரியவா கையிலும் உங்களுடைய கர்ம வினைகளிலும் மட்டுமே உள்ளது.

பிரார்த்தனைகள் பலிதமானால் மஹாபெரியவாளுக்கு நன்றியோடு இருங்கள். பிரார்த்தனைகள் பலிதமாவதற்கு தாமதமோ அல்லது பலிதமாகாமல் போனாலோ என்னையும் நிந்திக்காதீர்கள். மஹாபெரியவாளையும் குற்றம் சொல்லாதீர்கள். ஒரு வினாடி உங்கள் கர்மாவை பற்றியும் சிந்தியுங்கள். ஆனால் என் அனுபவத்தில் நான் காண்பது எழுபது முதல் என்பது விழுக்காடுகள் வரை பிரார்த்தனைகள் பலிதமானவதை காண்கிறேன்.

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மஹாபெரியவா குரு பூஜை மூலம் உங்கள் வாழ்வில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து உங்கள் ஜென்மாவின் முடிவு வரை மஹாபெரியவா கூடவே இருந்து உங்களை காப்பார் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.இதற்கு தேவை உங்களது உருகும் பக்தியும் அசைக்க முடியாத மஹாபெரியவா நம்பிக்கையும் மட்டுமே.

உங்கள் முன் இனொன்றையும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

நான் செய்யும் இந்த பிரார்த்தனை கைங்கர்யத்திற்கு பக்தர்களிடம் இருந்து பிரதிபலனாக எதுவும் பெறுவது கிடையாது மஹாபெரியவா புத்தகங்கள் தவிர. இந்த புத்தங்களையும் வாங்கிக்கொள்கிறேன் காரணம் நல்ல விஷயங்களை படித்து நாலு பேருக்கு எழுதலாம் சொல்லலாம். இதுவும் மஹாபெரியவா அனுகிரஹித்த பிறகே வாங்கிக்கொள்வேன்.

என்னுடைய சம்பளம் எல்லாமே உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து உங்கள் முகத்தில் மலரும் புன்னகை மட்டுமே.

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை அனுபவித்த பக்தர்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் தொடர்பில் இருக்கும் பக்தர்கள்.இரண்டு இந்த புதிய இணைய தளத்தில் உருவான உறவுகளின் மஹாபெரியவா குரு பூஜை அற்புத அனுபவங்கள்.

என்னை இந்த இணையதள புதிய உறவுகள் எல்லோருமே கேட்டுக்கொண்டதற்கு இணங்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குரு பூஜை அற்புதங்களை அனுபவித்து வரும் பக்தர்களின் அனுபவங்களை ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் வெளியிடலாம் என்பது என் எண்ணம்.இவற்றில் ஏற்கனவே ஓரிரண்டு பக்தர்களின் அனுபவங்கள் வெளி வந்து விட்டது.

மிக விரைவில் இந்த இணையதளத்தில் உருவான புதிய உறவுகளின் குரு பூஜை அனுபவங்களை தொகுத்து திங்கட்கிழமை தவிர வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை அனுபவித்த பக்தர்கள் தங்களுடைய குரு பூஜை அற்புத அனுபவங்களை காணொளி காட்சி மூலம் விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வருவார்கள். ஏற்கனவே சில காணொளி இணைய தளத்தில் வெளியாகி விட்டது.நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இந்த வீடியோ காணொளி ஏற்பாட்டில் பக்தர்களின் நலனை தலையாய கடமையாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்படும். இந்த முயற்சி விளம்பரத்திற்காக அல்ல. ஒருவரின் அனுபவத்தைக்கொண்டுதான் எதிலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோம்.அல்லல் படும் ஆத்மாக்களின் துன்பங்களை மஹாபெரியவா குரு பூஜை துடைந்தெறிவதே இந்தத்தொடரின் நோக்கம்.